" கதை சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லவா? "
" சொல்லுங்க டாடி"
" காயிதேமில்லத் காயிதேமில்லத்னு ஒருத்தர் இருந்தாராம்"
" எங்க ஹிஸ்ட்ரி புக்ல இருக்காரே! அவரா டாடி?"
" ஆமான்டா..அவரேதான்"
" சொல்லுங்க டாடி"
" அவருக்கு தமிழ்னா ரொம்ம்ம்ம்ப உசுரு!"
" அவர் மதர் டங்னாலயா டாடி?"
" டேய் இப்பவாவது தாய்மொழினு சொல்லுடா"
" செரி டாடி. நீங்க சொல்லுங்க"
" அவரு உன்னைய மாதிரி டாடினு எல்லாம் கூப்பிட மாட்டாராம். அத்தானு தமிழ்லதான் அவங்க அத்தாவை கூப்பிடுவாறாம்!"
" டாடி சீக்கிரம் சொல்லுங்க டாடி. இன்னும் எதுவுமே ஆரமிக்கலை நீங்க"
" செரிடா குட்டி..கோவிச்சுக்காத..சொல்றேன்.சொல்றேன்"
" சொல்லுங்க"
" ஒருநாளு அவரு பாராளுமன்றத்துக்கு டெல்லி போய்ட்டு வீட்டுக்கு வந்தாரா.."
" ம்ம்"
" அப்போ அவங்க அம்மா வயசானவங்க படுத்து இருந்தாங்களாம். இவரைப் பார்த்துட்டு இஸ்மாயிலு இஸ்மாயிலு இங்க வாயேன்னு கூப்பிட்டாங்களா "
" ம்ம்"
" எனக்கு காலு வலிக்கிதுடா தம்பி. நீ கொஞ்சம் எனக்கு கால் அமுக்கி விடுறியான்னு கேட்டாங்களாம்"
" ம்ம்"
" செரின்னு இவரும் காலை அமுக்கிவிட ஆரமிச்சாராம். அப்படியே அசதில நல்லா தூங்கிட்டாங்க அம்மா. வயசானவங்கள்ள!"
" அச்சோ பாவம் அந்த பாட்டி"
" ஆமான்டா குட்டி. தூங்குனவங்க காலையில 3 மணிக்கு தஹஜத் தொழுகைக்காக முழுச்சாங்களா.. பாக்குறாங்க..இவரு உக்காந்து அழகா அவ்வ்வ்வ்வ்ளோ நேரம் அம்மாவுக்கு கால் அமுக்கிவிட்டுட்டே இருக்காரு!! அவ்வ்வ்ளோ பாசம் அம்மா மேல!"
" டாடி, உண்மையிலேயே அவரு ரொம்ப good boy டாடி"
" ஆமாண்டா செல்லம். அதே மாதிரி நீயும் good girl தான?
" நான்லாம் very good girl "
" ம்ம்ம்..அப்ப நீ ஒண்ணு செய்யி. அவரு மாதிரி ரொம்ம்ம்ம்ப நேரமெல்லாம் வேண்டாம். கொஞ்சூண்டு நேரம் அத்தாவுக்கு கால் அமுக்கி விடுறியா இப்போ? நீ கால் அமுக்கி விடுவியாம்! அப்புறம் அத்தா கதை சொல்வேனாம்! சரியா?"
" போங்க டாடி. அவரு அம்மாவுக்கு தான கால் அமுக்கி விட்டாரு? நானும் அம்மாவுக்கு கால் அமுக்கிவிட்டு அம்மாகிட்டயே கதை கேட்டுக்கிறேன்".
ஆத்தாகாரியை எந்தக் காலத்திலயும் துளிகூட ஏமாத்த முடியாது. இப்போ மககாரியையும் நைஸா ஏமாத்தி ஒரு சின்ன வேலைகூட வாங்க முடியலை. இப்படித்தான் கஷ்டப்பட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன்..பார்த்துக்கிடுங்க
No comments:
Post a Comment