அர்த்தம்? என்று ஒரு இம்சை நண்பர் இன்பாக்ஸில் மெஸேஜ் அனுப்பி
இருக்கிறார்.
கடைசியில் நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று நொந்துப் போய் விட்டேன். வேறு வழியில்லை சொல்லித்தான் ஆகவேண்டும். . Yembal Thajammul Mohammad அவர்களும் ரசித்துத்தான் ஆக வேண்டும்.
சென்னை செந்தமிழில் “கும்தலக்கடி” சொற்பதமும் இன்றிமையாத ஓர் அங்கம். "Ghoomtha" என்றால் சுழலுகின்ற/ சுற்றுகின்ற என்று பொருள். "லக்கடி" என்றால் கம்பு/கழி.. வெரி சிம்பிள்.
“கும்தா +லக்கடி” என்றால் சுழலுகின்ற கழி என்று பொருள்.
ரஜினிகாந்த் ஒரு படத்தில் “கண்ணா..! நான் சுத்திச் சுத்தி அடிப்பேன்..!” என்பாரல்லவா …? அதேதான்.
அவர் நடித்த மன்னன் படத்திலும் ஒரு பாட்டு வரும்
.
“கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இத கும்மிடி பூண்டி கூட்ஸ் வாண்டியில் ஏத்து”
கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் படத்தில் இடம் பெறுகிறது இந்தப் பாடல்.
“கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன்.. ஹொய்
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன்…. ஹொய்
உங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்”
கம்பை கையிலேந்திக் கொண்டு சுத்தி சுத்தி சண்டை போடுவதைத்தான் “கும்தலக்கடி” என்கிறார்கள்
அது என்ன “கும்தலக்கடி கும்மா”?
அது வெரி வெரி சிம்பிள். கம்பைச் சுழற்றிக்கொண்டே முகத்தில் "கும்மாங்குத்து" விடுவதுதான் “கும்தலக்கடி கும்மா”
அப்துல் கையூம்
- கிளிக் செய்துஉட்டாலக்கடிபாருங்கள்
No comments:
Post a Comment