J Banu Haroon
நாங்களும்தானே காலம்காலமாய் உழைக்கிறோம் ...
எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி வறுமையே வாழ்க்கையா இருக்கு ஆச்சி ..? -ஒரு பெண் என்னிடம் கேட்டாள் .
எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை ...வருத்தமாக தலை குனிந்து யோசிக்க முடியாமல் நிமிர்ந்தேன் .அவளின் நகைகள் என் கண்களை உறுத்தியது ...
''இதெல்லாம் என்ன ?..'என்றேன் .
''அத்தனையும் கவரிங் ஆச்சி !...''
''''கவரிங் லே ஏன் காசை போட்டு வேஸ்ட் பண்றே ?..''
''இருக்கறவங்க பவுன் போட்டுக்கறீங்க ..இல்லாதவங்க எங்களுக்கு ஆசைக்கு இதுதானே ஆச்சி ?..''
''நான் என்னிக்காவது நகை போட்டு பாத்திருக்கியா ?..''
''நீங்க மட்டுந்தான் ஆச்சி போட மாட்றீங்க ...உங்கள்ல மத்தவங்கள்ளாம் அப்படியா ?...இத்தாதண்டி ..இத்தாதண்டி ...யம்மாடியோவ் !...எவ்ளோவ் போட்டுக்குதுங்க !...''
''அதனால புலிய பார்த்து நீ சூடு போட்டுக்கறே ?..''
''ஒரு தேவைக்கு ஆவைக்குதானே ஆச்சி !...சும்மா ஆசைக்கி ..யார்னாச்சும் எதுனாச்சும் சொல்வங்கன்னிட்டு ...
''கழுத்தில நேக்லேசு 500 ரூபா காதுக்கு டிசைன் மாட்டலு 300 ரூபா வளையல்கள் ..கல் வைத்தது ,வைக்காதது ...கொலுசு ,மெட்டி ,மோதிரம் ... .சம்கி பொடவைங்கோ ..வேற என்னா செலவு பண்றேன் ..சொல்லுங்க ?..''
''அடிப்பாவி ...இதுவே பெரிய செலவுதானே அநாவசியமா ...''
''ஒரு 500 ரூபா இருந்தா குடுங்கோ ...எங்க மாமியார்க்கு சக்கரை ஜாஸ்தியாயிடிச்சி தனியார் டாக்டராண்டை போவணும் ....கவர்ன்மெண்ட்லெ போனா சரியா கவனிக்க மாட்டேன்றாங்க ...''
இவர்கள் எந்த வேலையும் செய்யாமலே பணம் கேட்பதற்கு அஞ்சுவதில்லை ...செலவழிக்கவும் தயங்குவதில்லை ...சொந்த சம்பாதிப்பும் நிறைய இல்லை ...அதனால் சேமிப்புமில்லை ...சும்மா பணம் கொடுத்து இப்படித்தான் நிறைய பேர்களை பழக்கி விட்டிருக்கிறோம் ...வறுமை ஆட்டிப்படைக்கிறது .ஊரில் நிறைய பேர்களை தெரிந்து வைத்திருக்கின்றனர் ...இவரிடம் கிடைக்கவில்லையென்றால் அவரிடம் கிடைக்கும் என்று ...உழைப்பாளர்களை வளர்த்துவிடுவதற்கு பதிலாக ...யாசகர்களை வளர்த்து விட்டுக்கொண்டிருக்கிறோமோ ....கவலையளிக்கிறது இந்தப்போக்கு ...
.-----------ஜே பானு ஹாரூன்
No comments:
Post a Comment