முஹம்மது முஸம்மில்.
சிட்டுக்குருவி - நீ
சிறகடித்துப் பறப்பாய்
சிட்டாய் பறப்பாய்
சிறகொடித்ததாரு - உன்
இனத்தை அழித்ததாரு
வீட்டின் மேலே
ஏதோவொரு மூலையில்
கூடுகட்டி குஞ்செடுப்பாய்
கண்டோம் அதில் ஓரழகு - இனி
கண்டிட இயலுமோ அப்பேரழகே
நெற்பருக்கை நீயெடுக்க
நெல்மணிகள் சிதறியிருக்கும்
கூட்டத்தோடு வந்திடுவாய்
அதனை - நீ
பகிர்ந்திடுவாய்
மின்சாரம் செல்லும் கம்பியும்
உனக்கு எமனாகவில்லை
கொளுத்தும் வெயிலும்
உன்
உயிர் பறிக்கவில்லை
கைப்பேசி கோபுரமே - உனை
கைலாசம் அனுப்பியது
அது வெளியிடும்
கதிர்வீச்சு - உனக்கு
மரண சாசணம் எழுதியது
கைக்குள் மாட்டாத- நீ
இன்று
கைப்பேசி உருவில்.....
என்றும் கவியுடன்
முஹம்மது முஸம்மில்.
இன்று சிட்டுக்குருவி தினம்.
No comments:
Post a Comment