Sunday, January 3, 2016

வளைகுடா நாடுகளில் பிசினஸ் செய்தால்.........

20 கோடியில், தனி ராஜ கல்யாண மண்டபம்
அமைத்து, 55 கோடியை வெள்ளமாக ஒட விட்டு, ஆடம்பரமாக திருமணத்தை, இந்திய திருநாட்டில், தடபுடலாக நடத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார், துபை நாட்டின் இந்திய தொழிலதிபர், கேரளத்தைச் சார்ந்த ரவி பிள்ளை.
வளைகுடா நாடுகளை சார்ந்த ஆட்சியாளர்கள், மற்றும் மன்னர் குல வாரிசுகள் தங்களது தனித்தனி சொகுசு விமானங்களில், அணி வகுத்து வந்து இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து சிறப்பு செய்துள்ளனர்.
தொழிலதிபர், ரவி பிள்ளையின் மகள் டாக்டர் ஆர்த்தியின் திருமணம் நேற்று கேரளத்தின் - கொல்லத்தில் வைத்து நடைபெற்றது.

மன்னர் குல வாரிசுகளையே திணற வைத்த இந்த திருமண ஆடம்பரத்தை கண்டு மலையாள மக்கள் திகைப்பும் வியப்பும் அடைந்துள்ளனர்.
இந்து மதத்தை சார்ந்த ரவிபிள்ளையின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்டின் ஆட்சியாளர்கள், பகரைன் ராஜ குடும்பத்தினர், கத்தார் நாட்டு அரச குடும்பத்தினர், சவூதி அரேபியா நாட்டின் மன்னர் குடும்பத்தினர், லெபனான் நாட்டின் தூதர் போன்ற உலகின் மிக முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள், பெருந்திரளாக கலந்து கொண்ட நிகழ்ச்சி கேரள மக்களை நெகிழ்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.
முஸ்லிம் நாடுகளில், மத துவேஷத்திற்கு இடமில்லை என்பதும், லட்சக்கணக்கான இந்து மற்றும் கிருத்துவர்கள், முழு பாது காப்புடன் அங்கு தொழில் செய்ய முடியும் எனபதை இந்நிகழ்ச்சி நிரூபித்திருக்கிறது.
பொதுவாகவே, வளைகுடா நாடுகளில் மாற்று மதத்தினர் மிகவும் மரியாதையுடனும் மிகுந்த மதிப்போடும் நடத்தப்படுகின்றனர். முஸலிம்கள் என்பதற்காக எந்த தனிப்பட்ட சலுகையும் அங்குகிடையாது. மிகவும் பொறுப்பான சிறப்பான பல பதவிகளில் இன்றும் கிருத்துவர்களும் இந்துக்களுமே இருந்து வருகிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.
இன- மத - ஜாதி உணர்வுகளை ஊட்டி வளர்க்காத நாடுகள் வரிசையில், வளைகுடா நாடுகள் முதலிடம் வகிக்கின்றன.
மூன்று விஷயங்களில் அந்த நாடுகள் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.
1. பெண்கள்
2. மதம்
3. அரசியல்
இந்த மூன்றையும் பற்றி மக்கள் அதிகம் விமர்சிக்க அந்நாடுகள் தடை விதித்துள்ளன.



Vavar F Habibullah
https://www.facebook.com/dr.habibullah/videos/10205243790562810/?theater

No comments: