Wednesday, January 13, 2016
சில நேரங்களில் பிரிவுகள் சுமையானாலும் சுகமானது...
"ஆபீஸ்ல பேஸ்புக் பார்க்குறது காணாதுன்னு வீட்டுக்கு வந்தும் பார்க்கனுமா..கொஞ்சமும் அனுதாபம் கிடையாது..
கொஞ்சமாவது உதவிச் செய்யனும்னு தோனுதா..."என்று கணவனிடம் புலம்பும் மனைவியும்...
"எப்பப் பாரு அதப் பாருங்க இத பாருங்கன்னு கொஞ்சம் மனுஷன் நிம்மதியா இருக்க முடியல" என்று மனைவியிடம் ஆதங்கப் படும் கணவனும்...
"வாப்பா தங்கம் ஒரு தோசையாவது சாப்பிட்டு படு செல்லம் இல்லைன்னா யானை பலம் குறைவு " எனும் தாயிடம்
"போம்மா உனக்கு வேற வேலை இல்லை "
என பிடிவாதம் பிடிக்கும் பிள்ளையின் அன்றாட எரிச்சல்கள்
இவர்கள் பிரிந்து பிழைப்புக்காக,படிப்புக்காக வெளி இடங்களுக்கு போகும் போது ஏதாவது ஒரு நேரத்தில் அருகிலிருக்கும் போது தெரியாத பல விஷயங்களை நினைவுகள் மெல்ல மெல்ல சொல்லித் தந்து விடுகிறது.
அதில் வெறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டு விருப்புகள் ஏற்றப்படுகிறது...தெளிந்த மனங்கள் மீண்டும் இணையும் போது மறுபடி எரிச்சல்களுக்கு இடமில்லாது போய்விடும்...
சில நேரங்களில் பிரிவுகள் சுமையானாலும் சுகமானது...கொஞ்சம் பிரிந்தும் இருக்கலாம்..
நிரந்தர பிரிவுகளை தடுப்பதற்கு...
இணைந்தே இருக்கும் தம்பதிகள் தங்களுக்கும் எழும் எரிச்சல்களை உடனுக்குடன் களைந்து விட்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இனிமையாக பழகத்
தெரிய வேண்டும்..
பிள்ளைகள் பெற்றோரின் அன்பை புரிந்து நடக்கும் பிள்ளைகளாக இருக்க வேண்டும்..
பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளாக வளர வேண்டும்..எடுத்து எறிந்து பேசக் கூடாது...
இருக்கும் போது வெறுப்பாகத் தெரிபவை எல்லாம் இல்லாமல் இருக்கும் போது தான் விருப்பாக தெரியும்...
Saif Saif
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment