Thursday, January 14, 2016

மனிதன் என்ற மாயை

மனிதன் என்ற மாயை
விழு
எழு
வாழ
முழு வீச்சுடன்
ஓடு
ஓடிக் கொண்டே இரு....
பணம் தேட
பதவி தேட
புகழ் தேட
தேடல் தொடர
ஒடு
ஓடிக் கொண்டே இரு....
மரணத்தின் மடியில்
தலை சாய்த்து
உறங்கும் வரை
ஓடு
ஓடிக் கொண்டே இரு....
வாழ்வின் சுவையில், லயித்திருக்கும் மனிதனை, இமாம் கஸ்ஸாலி நான்கு
வகையாக பிரிக்கிறார்.

வாழ்க்கை.....
தனக்கு தெரியும் - என்பதை நன்கு தெரிந்தவன்.
தனக்கு தெரியாது - என்பதை நன்கு தெரிந்தவன்.
தனக்கு தெரியாது - என்பதை நன்கு தெரியாதவன்.
தனக்கு தெரியும் - என்பதை நன்கு தெரியாதவன்.
முதல் வகை மனிதன், தன்னை நன்கு அறிந்தவன். தன் வாழ்க்கையை திறம்பட அமைத்துக் கொள்வான.
இரண்டாம் வகை மனிதன், தன்னை பற்றி எதுவும் சரியாக அறியாதவன். இவனுக்கு தன்னை வழிநடத்தி செல்ல தகுந்த அறிவு தேவை. நல்ல பயிற்ச்சி கொடுத்தால் திருத்தி விடலாம்.
மூன்றாம் வகை மனிதனை, திருத் துவது மிகவும் கடினம். ஒன்றும் தெரியாதவன், தனக்கு எல்லாம் தெரிந்ததது போல் காட்டிக் கொள்வது சமூகத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கும். அவனுக்கு, எதுவும் தெரியாது என்பதை அவனுக்கே விளக்குவது என்பது சற்று கடினமான செயல்.
நான்காம் வகை மனிதனை, திருத்துவது என்பது மிகவும் எளிது. காரணம் அவன் விஷயம் அறிந்தவன் - என்றாலும் சில காரணங்களால் துணிந்து.... உண்மைகளை சொல்ல மறுக்கிறான். அவனுக்கு சற்று தூண்டுதல், அல்லது விழிப்புணர்வு தேவை. பிழைத்துக் கொள்வான்.
HE KNOWS THAT, HE KNOWS.
HE KNOWS THAT, HE KNOWS NOT.
HE KNOWS NOT THAT, HE KNOWS NOT.
HE KNOWS NOT THAT, HE KNOWS


Vavar F Habibullah

No comments: