மாவீரன் சதாம் உசைனின் நெகிழ வைக்கும் இறுதி நிமிடங்கள் பற்றி அமெரிக்க படைவீரர் வெளியிட்ட சிலிர்க்க வைக்கும் உண்மை கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
இராக் அதிபராக இருந்த சதாம் உசைனை அமெரிக்கா அநியாயமாக கொலை செய்த கொடுமையை உலகறியும். சதாமின் இறுதி நிமிடங்கள் பற்றி சில அழகான தகவல்களை அந்த நேரத்தில் அவரின் அருகில் இருந்த மிக சிலர்களில் ஒருவரான அமெரிக்க படைவீரர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அந்த படை வீரர் தனது அந்த கால கட்டத்தில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு முஸ்லிமின் வாழ்வு எப்படி இருந்தாலும் அவனது இறுதி கட்டம் சிறப்பானதாகவும் இறைவனுக்கு விருப்பமானதாகவும் இருப்பது முக்கியம்.
அந்த அடிப்படையில் சதாமின் இறுதி நிமிடங்கள் ஒரு உண்மை முஸ்லிமின் நிலைகளை எதிரொலிப்பதாக அமைந்திருப்பதை அறியமுடிகிறது. சதாம் உசைன் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய இரவின் நடு பகுதியில் சதாம் அவரை சுற்றியிருந்த காவலர்களில் ஒருவரை அழைத்தார். தான் கைது செய்யப்படும் போது அணிந்திருந்த குறிப்பிட்ட கனத்த அங்கியை தருமாறு வேண்டினார்.
காவலர் காரணம் கேட்கவே, அதிகாலையில் எனது உயிரை பறிப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் இருக்கின்றீர்கள். நான் மரணத்திற்காக அஞ்சவுமில்லை நடுங்கவும் இல்லை. ஆனால் இராக்கின் அதிகாலை நேரம் நடுங்க வைக்கும் குளிரை கொண்டதாக இருக்கிறது.
என்னை நீங்கள் தூக்கு மேடைக்கு அழைத்த செல்லும் போது குளிரினால் எனது உடல் நடுங்கலாம். அதை பார்ப்பவர்கள் சதாம் மரணத்திற்கு அஞ்சகூடியவன் என்று எண்ண கூடாது. நான் மரண மேடையை நோக்கி நடந்து வரும் போது குளிரினால் கூட எனது உடல் நடுங்க கூடாது என்று நான் எண்ணுவதால் குளிரில் இருந்து காக்கும் அந்த கனத்த ஆடையை அணிய விரும்புகிறேன் என கூறினார்.
அவர் தூக்கு மேடையில் ஏற்றப்படுவதற்கு முதல் நாள் இரவின் நடுபகுதியில் தனக்கு விருப்பமான கோழி இறைச்சி மற்றும் சாதத்தை கேட்டு பெற்று மனமகிழ்வோடு சாப்பிட்டு விட்டு அவரின் குழந்தை பருவத்தில் இருந்தே வென்னீரோடு தேன் கலந்து குடிக்கும் வழமைக்கு ஏற்ப வென்னீரில் தேன் கலந்து பல கோப்பைகளை அவர் அருந்தினார்.
பிறகு ஒளு செய்துவிட்டு தனது கட்டிலில் அமர்ந்து திருகுர்ஆனை ஓதி கொண்டிருந்தார். அவர் தூக்கு மேடையில் ஏற்ற படுவதற்காக அவர் அழைத்து செல்ல பட்ட போது அவர் எந்த சலனமும் இல்லாமல் அஞ்சா நெஞ்சனை போன்று மலர்ந்த முகத்தோடு மரண மேடையை நோக்கி நடை போட்டார்.
இறுதியில் ஏகத்துவ முழக்கமான ஷஹாதத்தை மொழிந்த நிலையிலேயே மலர்ந்த முகத்துடன் அவரின் உயிர் பிரிந்தது.
இவ்வாறு அமெரிக்க இராணுவ வீரர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தந்தவர்
1 comment:
சிலிர்க்க வைக்கிறது!
சதாம் ஹுஸைன் அவர்களை அல்லாஹ் தனது நல்லடியார்களின் கூட்டத்தில் இணைத்துக் கொள்வானாக்!
Post a Comment