வேலைக்காக வெளிநாட்டுக்கு வருவான்..
ஆரம்பத்தில் அப்பாவியா இருப்பான்...
எதிரியை கூட நண்பனா நினைச்சு பழகுவான்..
வேலைக்காக யாரு காலை வேணாலும் பிடிப்பான்..
தினந்தோறும்
தொலைபேசி போடுவான்..
வேலை வாங்கி கொடுத்தவனை தெய்வம்னு கூடச் சொல்லுவான்..
கொஞ்சம் பணத்தைப் பார்ப்பான்..
சொந்த குணத்தை மறப்பான்...
கூடவே கெளரவத்தையும் வளர்ப்பான்..
நெஞ்சை நிமிர்த்துவான்..
அப்பாவி இப்போ அகம் பாவியாய் ஆவான்...
உதவி செய்தவனை உதாசீனம் செய்வான்..
தொலைபேசியில் அழைத்தால் கூட எடுக்க மாட்டான்...
பக்கத்தில் நின்னா கூட கண்ணு மறைஞ்சு நிப்பான்..
காரியம் முடிஞ்சதும் இடத்தை காலி செய்து வைப்பான்...
முடிஞ்சா பெரிசா ஒரு பள்ளம் தோண்டுவான்..
தோண்டிய பள்ளத்தில் கடைசியில் அவனே போயி விழுவான்...
மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்..
No comments:
Post a Comment