Monday, November 23, 2015

சில விஷயங்கள் புரிவதேயில்லை ...

சில விஷயங்கள் புரிவதேயில்லை ...
சில விஷயங்கள் புரியாமல் இருப்பதேயில்லை ...

மனிதருக்குள் நடக்கும் போட்டி ...
இருவருக்குள் வந்து போகும் பிரிவினை ...
யார் யாரை மிஞ்சுவதென்ற பரிதவிப்பு ...
முன்னேறுபவனை வீழ்த்த துடிக்கிற துடிப்பு ...
விட்டேனா பார் என்கிற வைராக்கியம் ...
விரக்தி கொள்ளும் மனநிலை ...
விவேகமில்லா வியாக்யானம் ...
இன்னும் எதைச்சொல்ல ?...

கோபதாபம் கொள்ளும் குணம் ...
உறவுகளை உதறும் விரிசல் ...
கடமைகளை புறக்கணித்தல் ..
காழ்ப்புணர்வு கொள்ளுதல் ...
கடும் கஞ்சத்தனம் ..வெட்டி வீராப்பு ..
பிறரிடம் உண்ணுவதில் மயக்கம் ..
பிறருக்கு உண்ணக்கொடுப்பதில் தயக்கம் ...
இயற்கையில் எப்படி வரும் ?...

திடீரென வரும் இடியும் ,மின்னலும் ..
மழையும் ,வெள்ளமும் போல்தானா ?..
கொட்டப்பட்ட எண்ணைத்தாளியும் ...
வீசப்பட்ட வார்த்தை வேகமும் அள்ள முடியாதே ...
காட்டாற்று வெள்ளம் மக்களை காவுகொள்வதுபோல் ..
கோபம் உறவுகளை கபளீகரம் செய்யும் !...
வாழ்க்கையில் வசீகரிக்கப்படும் உதடுகள் ...
தவறுகளை உச்சரிப்பதால் வனப்பிழக்கவும் செய்யும் !...

-கோபம் நல்லதா ?..கெட்டதா ?...


J Banu Haroon

No comments: