Saturday, November 21, 2015

வாழ்க்கை போராடும் போர்க்களம் என்றால்...

வாழ்க்கை போராடும் போர்க்களம் என்றால்...
வலிமை மிக்கவர்களால் மட்டும் தான் தாக்கு
பிடிக்க இயலுமா.. !!

'STRUGGLE FOR EXISTENCE' - டார்வின்
'SURVIVAL OF THE FITTEST' - ஸ்பென்சர்

தாகம் தீர
நீர் தேவை

பசி தீர
உணவு தேவை

உடல் மறைக்க
உடை தேவை

மோகம் தீர
துணை தேவை

உறவு மலர
அன்பு தேவை

குடும்பம் வாழ
உறைவிடம் தேவை

பேர் தெரிய
முகவரி தேவை

ஊர் அறிய
தகுதி தேவை

இலக்கை அடைய
முயற்ச்சி தேவை

வெற்றி பெற
உழைப்பு தேவை

வாழ்வில்
உயர... உயர...

சுய மரியாதை தேவை
சுய மதிப்பு தேவை
கவுரவம் தேவை
தோற்றம் தேவை
சமுக அங்கீகாரம் தேவை
அந்தஸது தேவை.

பணம், பதவி, புகழ்
பெற்ற பின்,
பணிவு, கனிவு, அருள் தேவை.

தேவைகள்
தேவையற்று போக
ஞானம் தேவை.

"நான்" மூழ்க
"அவன்" தேவை.

அவனுள் மாய்ந்தால்
நான் - தேவை இல்லை.
dr.habibullah                         Vavar F Habibullah

No comments: