Tuesday, October 28, 2014

மனிதர்களின் அளப்பறியார்வத்திற்கு (Curiosity) அளவேயில்லை.

இந்த மனிதர்களின் அளப்பறியார்வத்திற்கு (Curiosity) அளவேயில்லை. கையில், அதாவது கைபேசியில் எந்தத் தகவல் கிடைத்தாலும் மற்றவர்க்கு அல்லது குழுமங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் மறுவேலை பார்க்கிறர்கள்.

இந்த சமூக வலைத்தளங்களில் கொட்டப்படும் தகவல்களுக்கும் அளவேயில்லை. அவற்றில் பெருமளவில் உண்மையுமில்லை.

நான் எப்போதும் சொல்வதுண்டு: அச்சு ஊடகத்தில் வராமல், சமூக ஊடகத்தில் மட்டுமே வருகிற ஒரு பொதுச் செய்தி பெருமளவுக்குப் பொய்யாக இருக்கவே வாய்ப்பு உள்ளது. அத்துடன், சமூக வலைத்தளச் செய்தியைப் பின்னணியாகக் கொண்டு வெளியாகும் அச்சு ஊடகச் செய்திகள் பற்றியும் இப்போதெல்லாம் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது.
சமூக ஊடகங்களில் 'Please forward this..' என்று முடிகிற/வருகிற செய்திகளில் மிகப்பலவும் பொய்ச்செய்தியாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. இஃதென் அனுபவம்.

கையில் கைப்பேசியோ, கணினியோ கிடைத்தால் எந்தவிதத்திலும் செய்திகளை அளிக்கலாம் என்ற நிலை மாற வேண்டும். தொடர்ந்து இதற்கு இரையாவதும் மற்றவர்களை இரையாக்குவதும் ஒருவர் மீதான நம்பகத்தன்மையை மக்களிடத்தும் இறையிடத்தும் போக்கிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உண்மை ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் பொய் உலகையே சுற்றி வந்துவிடுகிற வல்லமையுள்ளது என்பதை உணர்ந்து 'கேழ்வரகில் நெய் வடிவதாகச்' சொல்பவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் நாம்.

Fakhrudeen Ibnu Hamdun

No comments: