“ஜீன்ஸ் வேணுங்க”
அவன் தூக்கிவைத்திருந்த குழந்தையைப் பார்த்துக்கொண்டே, “பாப்பாவுக்குதானே சார்?”
“ம்…. இந்த பீப்பாவுக்கும் சேர்த்துதான்” பக்கத்தில் நின்றிருந்த அனிதாவை காட்டினான்.
சேல்ஸ் கேர்ள் களுக்கென்று சிரித்தாள். இப்படிதான் பொது இடங்களில் திடீர் திடீரென ஏடாகூடமாக பேசுவான். எல்லா ஆண்களுமே மற்றவர்களை ஈர்க்க தங்கள் மனைவியை மட்டமடித்து ஜோக் அடிக்கும் அதே அரதப்பழசான டெக்னிக்கைதான் கையாளுகிறார்கள். இவன் மட்டும் விதிவிலக்காக இருந்துவிடுவானா என்ன? கிருஷ்ணாவை முறைத்துக்கொண்டே சொன்னாள்.
“வாயிலே ஏதாவது வரப்போவுது. நீ துணி எடும்மா”
“துணியாதான் வேணுமா மேடம். ரெடிமேட் வேணாமா?”
இவளது நாட்டுத் தோற்றத்தை பார்த்துவிட்டு சேல்ஸ்கேர்ளும் அவள் பங்குக்கு விளையாடினாள்.
அனிதா பதட்டமானாள். இந்த நகரத்துக்கு வந்து நாலு வருஷம் ஆகிறது. ஆனாலும் இன்னும் அவளுடைய கிராமவாசனை போகவேயில்லை. இங்கிருக்கும் மனிதர்கள் அதை கண்டுகொண்டு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கேலி பேச தவறுவதேயில்லை. நகரங்களில் வசிப்பவர்கள்தான் நாகரிகமானவர்கள் என்கிறார்கள். ஆனால் இங்கே ஆண்-பெண், பணக்காரன்-ஏழை என்று வித்தியாசமில்லாமல் அத்தனை பேருமே அடுத்தவரின் மனசை புண்படுத்தாமல் பேச தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் அனிதாவை நோண்டவேண்டாமென்று முடிவெடுத்து சேல்ஸ் கேர்ள், “சைஸ் என்ன மேடம்?” என்றாள்.
அனிதாவுக்கு அவளது பிரா சைஸ் மட்டும்தான் தெரியும். இடுப்பு சைஸ் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இதுவரை ஏற்பட்டதில்லை. பரிதாபமாக கணவனை பார்த்தாள். கொஞ்சம் விட்டால் அழுதுவிடுபவள் போல இருந்த அவள்மீது கிருஷ்ணாவுக்கு பரிதாபம் தோன்றியது.
“கிராமத்துப் பொண்ணு. இப்போதாங்க முதன் முதலா பேண்ட் போடப்போறா. இஞ்ச் டேப் வெச்சி நீங்களே சைஸ் பார்த்துக்கங்களேன்”
Yuva Krishna எழுதியவர் யுவகிருஷ்ணா
கதையை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் - சொடுக்குங்கள்
No comments:
Post a Comment