எங்கள் தகப்பனாரும்(S.E..A. Abஶ்ரீdul Kader) அவர்களது மூத்த சகோதரர்ரும் (S.E.A.Abdul Rahman) மிகவும் பாசத்தோடு வாழ்ந்தார்கள்.அவர்கள் வாழும் காலத்தில் மயிலாடுதுறையில் சிறப்பாக வியாபாரம் செய்தார்கள் .அனைத்து மக்களுடனும் நேசமாக இருந்தாகள் . பிராமண குடும்பத்தை சார்ந்த பெரியவர் குடும்ப பாசத்தோடு இருக்க முதியோராகி உடல்நலம் பாதிக்கப் பட்டு இறக்கும் தருவாயில் தனது சிறு வயது மகளையும் (ராஜம்) மகனையும் (சூரி) பாதுகாத்து வளர்த்து வரும் பொறுப்பினை S.E.A.Abdul Rahman அவர்களிடம் விட்டு இறைவனடி சேர்ந்தார். .அவர்கள் வசதி குறைவானவர்கள் அல்ல.
அவர்களை பிராமண முறைப்படி வளர்த்து வந்தார்கள். எங்களுக்கு அவர்கள் உடன்பிறவா சகோதரி,சகோதரர்ராக வளர்ந்தாகள்.
ராஜம் அக்காவுக்கு கேப்டன் Dr . அண்ணாசாமி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் , Dr. அண்ணாசாமி சென்னை T .நகரில் புகழ்பெற்ற கண் மருத்துவராக பணி செய்தார்.
அண்ணன் Dr சூரி அவர்கள் லாயட்ஸ் சாலையில் மருத்துவ தொழிலும் மற்றும் மருந்தகம் வைத்திருந்தார் .அந்த கடையின் பெயரின் முதல் மூன்று எழுத்துகள் எங்கள் குடும்பத்தைக் குறிக்கும் (SEA )சொல்லாக இருக்கும் கடையின் பெயர் SEAMARS CORPARATION . SEA - எங்கள் குடும்பத்தைக் குறிக்கும், R -ராஜம்,S- சூரி அவர்களது குழந்தைகள் சிறப்பாக படித்து உயர்ந்த பதவியில் அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் வாழ்கிறார்கள்.
Dr சூரி அவர்கள் வாழும் காலம் வரை எங்களது பெரியப்பா படத்தினை கடவுள் படத்திற்கு பக்கத்தில் வைத்து மரியாதை தருவார் .
அவர்கள் இஸ்லாமிய முறைப்படியே எங்களை முறையிட்டு அழைபார்கள்.
(பெரிய சரித்திரம். சுருக்கமாக தந்துள்ளேன்) நான் சென்னையில் படித்ததால் தொடர்ந்து அவர்களை பார்த்து வருவது வழக்கம்
அவர் எழுதிய மடல்களை அவசியம் பாருங்கள்.
ஆரம்பம் 1 ல் 786 வைத்து தொடங்கும்.
( கடிதத்தை கிளிக் செய்து பெரிது படுத்தி படியுங்கள் )
