Showing posts with label சிறப்பு. Show all posts
Showing posts with label சிறப்பு. Show all posts
Wednesday, March 29, 2017
ஹவ்வா, அஹூ, ஹூரா மற்றும் இன்ன பிற பெண்கள்
ஹவ்வா -
வழமையாக வீட்டினைச் சுற்றி வர உள்ள வெளியெங்கும் விளையாடச் செல்லும் சிறுமி ஹவ்வாவுக்கு அன்றைய தினம் ஒன்பது வயது பூர்த்தியாகப் போகிறது. அதனால் அவளுக்கு வெளியே விளையாடச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அவளது தாயும், பாட்டியும் அவளுக்கு ஒன்பது வயது பூர்த்தியாவதை முன்னிட்டு, முழுமையாக உடலைப் போர்த்தும் ஃபர்தாவை அணிய அவள் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அவள் இனிமேல் வளர்ந்த பெண் எனவும், அவளை பிற ஆண்கள் பார்க்க நேர்ந்தால், அவள் நரகத்துக்கு இட்டுச் செல்லப்படுவாள் என்றும் பாட்டியால் போதிக்கப்படுகிறாள். சற்று நேரம் வெளியே சென்று விளையாடிவிட்டு வர அனுமதிகோரி சிறுமி ஹவ்வா கெஞ்சுகிறாள். ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதேநாளில் மத்தியானம்தான் அவள் பிறந்தாள் என பாட்டி கூறியதும், அப்படியானால் தனக்கு இன்னும் ஒன்பது வயது ஆகவில்லை அல்லவா? மத்தியானம் பன்னிரண்டு மணியாகும்போது விளையாடிவிட்டு வந்துவிடுவேன், ஃபர்தாவையும் அணிந்துகொள்கிறேன் எனக் கூறுகிறாள் சிறுமி. பன்னிரண்டு மணியானதை எப்படி அறிந்துகொள்வாய் எனக் கேட்ட பாட்டி ஒரு வழிமுறையை சொல்லிக் கொடுக்கிறாள். ஒரு குச்சியை செங்குத்தாக நட்டு, அதன் நிழல் இல்லாமல் போனால் அப்பொழுதுதான் சரியாக பன்னிரண்டு மணி. அதைத் தாண்டியும் நீ முக்காடு அணியாமல், பிற ஆண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தால் நீ நரகத்துக்குச் செல்லும் பாவி ஆகிவிடுவாய் எனக் கூறும் பாட்டி அவளை விளையாடச் செல்ல அனுமதிக்கிறாள்.
Thursday, February 12, 2015
பிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியுடனான நேர்காணல் - எம்.ரிஷான் ஷெரீப் 'நான் ஒரு பணயக் கைதியாகி விடுகிறேன்'
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை, கத்தாரிலுள்ள தோஹா திரைப்படக் கல்லூரியானது, பிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியை கத்தாருக்கு வரவழைத்திருந்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான அவரது முதல் திரைப்பயணம் இதுவெனக் கூறலாம். தோஹா திரைப்படக் கல்லூரியானது இதனை ஒரு விழா போலவே கொண்டாடியது. 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை அவரது திரைப்படங்களையும், குறுந் திரைப்படங்களையும், ஆவணத் திரைப்படங்களையும் தொடர்ச்சியாகத் திரையிட்டது. அது மாத்திரமல்லாது, திரைப்படங்களைக் காண வந்திருந்தவர்களையும் இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியோடு நேரடியாக உரையாட ஏற்பாடு செய்திருந்தது.
Friday, November 29, 2013
எது சிறப்பு!
மலரதனின் சிறப்பென்றால் மகிழ்ச்சித் தோற்றம்
மனங்கனியச் செய்வதிலே மிகவும் ஏற்றம்
நிலவதனின் சிறப்பதுவோ நிலைகள் மாற்றம்
நிறைந்தாலும் மறைந்தாலும் நிலைக்கும் ஆற்றல்
உலகமிதன் சிறப்பென்ன? வேறு பூக்கள்
ஒருசேரப் பூத்திருக்கும் இயற்கைப் பூங்கா
உலவுகின்ற தென்றலுக்கும் உண்டே பேறு
உள்ளபடி பொதுவுடமை விளங்கும் காற்றே
.
தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
தக்கபடி பணிமுடிக்க தேரும் ஆட்கள்
கலைமனதின் சிறப்பிங்கே கற்பின் வாய்மை
கலங்காமல் ஒளிவீசும் கனலின் தூய்மை
அலைமுழக்கம் சிறப்பில்லை: ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போல!
நிலைமறந்தே ஆடுவோரின் நினைப்பைக் கூட
நீக்கிவிடும் சிறப்பிங்கே நல்லோர்க் காமே
நண்பர்தம் சிறப்பெல்லாம் நலமே செய்தல்
நம்பிக்கை நீட்டியொரு நேசம் பெய்தல்
மண்ணிதனின் சிறப்பிங்கே மனிதம் ஓங்கல்
மற்றவரும் தன்போன்றே மனதில் கொள்ளல்.
கண்விழிகள் சிறப்படையும் காணும் நோக்கில்
கருத்தான ஏதொன்றும் கவர்ந்துக் கொண்டால்.
பெண்ணவளும் சிறப்பன்றோ பேணும் தாய்மை
பொறுமையினால் அடைகின்றாள் பெரிய வெற்றி.
சிலமனிதர் சிறப்பின்றி சின்ன புத்தி
சிந்தையிலே சுயநலமே செய்யும் உத்தி
பலமனிதர் சிறப்பிங்கே பாவம் ஐயோ.
பண்பாட்டைச் சிதைப்பதிலே பெருமை கொள்வார்
உளமகிழச் செய்வதுவே உயர்ந்தோர் செய்கை
ஒருவரையும் இகழாமல் உணரும் போக்கு.
புலவரிவர் சிறப்பிங்கே பொறுமை காத்து
புகழோங்க கவிவானில் ஒளிரும் பாடல்!
by இப்னு ஹம்துன்
நன்றி: http://www.ezuthovian.blogspot.in/
Thursday, May 9, 2013
தெளிதல்
ஏமாற்றத்தின் சலனங்களோடு
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்
இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்
எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்
மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன
வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்
இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்
எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்
மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன
வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை
Tuesday, February 19, 2013
'தலைப்பற்ற தாய்நிலம்' தொகுப்பு வெளியீடு
கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் 'தலைப்பற்ற தாய்நிலம்' எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல், இவ் வருடத்தின் முதலாவது தொகுப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
எழுநா, நிகரி பதிப்பகங்களின் இணைந்த வெளியீடாக வெளிவந்திருக்கும் இத் தொகுப்பின் நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் மாதங்களில் கீழுள்ள நாடுகளில் நடைபெற உள்ளது.
ஏப்ரல், 2013 - லண்டன், நோர்வே
மே, 2013 - கனடா, ஸ்விட்ஸர்லாந்து
இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் வசிப்பவர்கள் கீழுள்ள முகவரியில் தொடர்பு கொள்வதன் மூலம், இத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.
Discovery Book Palace (P)Ltd
No.6, Magavir Comlex, 1st Floor
Munusamy Salai, K K Nagar West
Chennai – 600078
Tamil Nadu, India.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
எழுநா, நிகரி பதிப்பகங்களின் இணைந்த வெளியீடாக வெளிவந்திருக்கும் இத் தொகுப்பின் நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் மாதங்களில் கீழுள்ள நாடுகளில் நடைபெற உள்ளது.
ஏப்ரல், 2013 - லண்டன், நோர்வே
மே, 2013 - கனடா, ஸ்விட்ஸர்லாந்து
இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் வசிப்பவர்கள் கீழுள்ள முகவரியில் தொடர்பு கொள்வதன் மூலம், இத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.
Discovery Book Palace (P)Ltd
No.6, Magavir Comlex, 1st Floor
Munusamy Salai, K K Nagar West
Chennai – 600078
Tamil Nadu, India.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
Labels:
அனுபவம்,
ஈழம்,
கவிதை,
சமூகம்,
சிறப்பு,
நிகழ்வுகள்,
மொழிபெயர்ப்பு,
விழா
Friday, November 9, 2012
2012 ஆம் வருடத்துக்கான 'வியர்வையின் ஓவியம்'' விருது
அன்பின் நண்பர்களுக்கு,
இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய 'வியர்வையின் ஓவியம்' இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா 01.11.2012 நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை, மருதானை, டவர் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தமிழ், சிங்கள மொழிகளில் சிறுகதை, கவிதை, பாடல், காவியம், புகைப்படம் ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்களுக்கு விருதுகளோடு, சான்றிதழ்களும், பரிசுகளும், ஏனையவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில், என்னால் எழுதப்பட்ட 'தாய்மை' எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும், பரிசையும் வென்றது. அத்தோடு எனது கவிதைக்கு சிறப்புப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
மகிழ்வான இத் தருணத்தில் எனது இலக்கியப் பயணத்தில் எப்பொழுதும் கூடவே பயணிக்கும் உங்கள் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
Source : /rishanshareef
இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய 'வியர்வையின் ஓவியம்' இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா 01.11.2012 நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை, மருதானை, டவர் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வில், என்னால் எழுதப்பட்ட 'தாய்மை' எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும், பரிசையும் வென்றது. அத்தோடு எனது கவிதைக்கு சிறப்புப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
மகிழ்வான இத் தருணத்தில் எனது இலக்கியப் பயணத்தில் எப்பொழுதும் கூடவே பயணிக்கும் உங்கள் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
Source : /rishanshareef
Monday, January 23, 2012
எது சிறப்பு!

எது சிறப்பு!
மலரதனின் சிறப்பென்றால் மகிழ்ச்சித் தோற்றம்
மனங்கனியச் செய்வதிலே மிகவும் ஏற்றம்
நிலவதனின் சிறப்பதுவோ நிலைகள் மாற்றம்
நிறைந்தாலும் மறைந்தாலும் நிலைக்கும் ஆற்றல்
உலகமிதன் சிறப்பென்ன? வேறு பூக்கள்
ஒருசேரப் பூத்திருக்கும் இயற்கைப் பூங்கா
உலவுகின்ற தென்றலுக்கும் உண்டே பேறு
உள்ளபடி பொதுவுடமை விளங்கும் காற்றே
.
தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
தக்கபடி பணிமுடிக்க தேரும் ஆட்கள்
கலைமனதின் சிறப்பிங்கே கற்பின் வாய்மை
கலங்காமல் ஒளிவீசும் கனலின் தூய்மை
அலைமுழக்கம் சிறப்பில்லை: ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போல!
நிலைமறந்தே ஆடுவோரின் நினைப்பைக் கூட
நீக்கிவிடும் சிறப்பிங்கே நல்லோர்க் காமே
நண்பர்தம் சிறப்பெல்லாம் நலமே செய்தல்
நம்பிக்கை நீட்டியொரு நேசம் பெய்தல்
மண்ணிதனின் சிறப்பிங்கே மனிதம் ஓங்கல்
மற்றவரும் தன்போன்றே மனதில் கொள்ளல்.
கண்விழிகள் சிறப்படையும் காணும் நோக்கில்
கருத்தான ஏதொன்றும் கவர்ந்துக் கொண்டால்.
பெண்ணவளும் சிறப்பன்றோ பேணும் தாய்மை
பொறுமையினால் அடைகின்றாள் பெரிய வெற்றி.
சிலமனிதர் சிறப்பின்றி சின்ன புத்தி
சிந்தையிலே சுயநலமே செய்யும் உத்தி
பலமனிதர் சிறப்பிங்கே பாவம் ஐயோ.
பண்பாட்டைச் சிதைப்பதிலே பெருமை கொள்வார்
உளமகிழச் செய்வதுவே உயர்ந்தோர் செய்கை
ஒருவரையும் இகழாமல் உணரும் போக்கு.
புலவரிவர் சிறப்பிங்கே பொறுமை காத்து
புகழோங்க கவிவானில் ஒளிரும் பாடல்!
by
இப்னு ஹம்துன்
Subscribe to:
Posts (Atom)





