Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Monday, July 21, 2014

விஜய் டிவி நீயா நானாவில் நாகூர் ரூமி பேசியதன் சுருக்கம்



20.07.14 அன்று விஜய் டிவி நீயா நானாவில் நான் பேசியதன் சுருக்கம் இதுதான்: 
இரண்டு தரப்பினரையும் நான் கேட்ட இன்னொரு கேள்வி:
 
”ஒரு மாணவர் கிளிப்பிள்ளை மாதிரி புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதினால் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் அவரே சொந்தமாக சிந்தித்து எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா? நான் ஒரு உதாரணம் தருகிறேன். என் நாகூர் பள்ளிக்கூட அனுபவத்திலிருந்து. புவியியலில் ஒரு கேள்வி கேட்டார்கள். ”மண் புழு எங்கே வசிக்கும்? மண் புழுவின் உணவு யாது?” என்று. அதற்கு ஒரு மாணவர் சரியான விடையை தன்னுடைய சொந்த பாணியில் எழுதியிருந்தார். அதற்காக அவருக்கு மார்க் தரப்படவில்லை. அடிதான் விழுந்தது. அவர் என்ன எழுதினார் தெரியுமா?

Thursday, December 5, 2013

சுவை...நகைச்சுவை!


பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக
இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின்
கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க,
ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள்.
கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில்
எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை,
புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும்
கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம பொன்ராஜ் .
உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம்
அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார்.
பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும்,
சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.
முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும்
என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும்
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான்
வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள்
மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”
2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.
நம்ம பொன்ராஜ் க்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!
“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல.
எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்”
என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

Friday, November 9, 2012

நாகூர் பாஷையில் திருக்குறள்

நாகூர்வாசிகளின் நகைச்சுவையைத் தூண்டுவதற்கு  “நாகூர் பாஷையில் திருக்குறள்”

“உடுக்கை இழந்தவன் கைபோல” என்று தொடங்கும் ஒரு திருக்குறளை எனது வலைப்பதிவில் எழுதப்போய் நம்ம ஊர்க்காரர் ஒருவர் இதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டார். அவருக்கு நாகூர் பாஷையிலேயே விளக்கினேன். அவருக்கு உடனே புரிந்துப் போய் விட்டது.

இதேபோன்று குறள்களுக்கு நாகூர் பாஷையிலேயே பதவுரை எழுதினால் என்ன என்ற ஒரு விபரீத ஆசை எனக்கு தோன்றியிருக்கக் கூடாதுதான். என்ன செய்வது? திருவள்ளுவர் என்னை மாப்பு செய்வாராக.

    (பிகு. பரிமேலழகர், மு.வ., சாலமன் பாப்பையா, மு.க. இவர்கள்தான் விளக்கவுரை எழுத வேண்டுமா? நாம எழுதக்கூடாதா? நாகூர் ரூமியிடம் கேட்டுப் பாருங்கள். யாராவது பதிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்களா என்று. “நாகூர் பாஷையில் திருக்குறளுக்கு பதவுரை” என்று ஒரு புத்தகம் போட்டு விடலாம்.)

    ***