Showing posts with label பில் கேட்ஸ். Show all posts
Showing posts with label பில் கேட்ஸ். Show all posts
Thursday, December 5, 2013
சுவை...நகைச்சுவை!
பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக
இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின்
கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க,
ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள்.
கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில்
எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை,
புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும்
கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம பொன்ராஜ் .
உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம்
அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார்.
பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும்,
சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.
முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும்
என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும்
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான்
வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள்
மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”
2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.
நம்ம பொன்ராஜ் க்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!
“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல.
எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்”
என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.
Subscribe to:
Posts (Atom)
