Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts

Wednesday, June 3, 2015

" எங்கிருந்து வந்ததோ அங்கே சென்று விட்டது!"- dr.habibullah

அந்த கலையரங்கம், மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மகான் ஒருவர், "கடவுள்" என்ற பொருள் பற்றி, மகா பிரசங்கம் ஒன்றை, நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவரது பேச்சில் லயித்து, கரைந்து கொண்டிருந்தனர் ஊர் மக்கள்.

கொழுந்து விட்டெறியும் மெழுகுவர்த்தியை சுற்றி, சுழல்கின்ற ஒளி வட்டத்தை, உற்று நோக்கி, மனதை ஒரு முகப்படுத்தும் பயிற்ச்சிக்கு, அவர் மக்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார்.

"ஒளி மயமானவன் இறைவன்." 'இறைவனை அறிய வேண்டுமானால், முதலில் இந்த ஒளி யைப் பற்றி, அறிய வேண்டும். இந்த ஒளி, இதற்கு முன் எங்கிருந்தது; இப்போது இங்கு எப்படி வந்தது?'

Wednesday, July 23, 2014

அல்லாஹ்வை நம்பும் முஸ்லிம்கள் அல்லாஹ்வைமறுக்கும் யூதர்களால் கொல்லப் படுவது ஏன்?


அண்ணா பெறியாரின் கொள்கை உடையை ஒருவர் என்னிடம் சில
கேள்விகள் கேட்டார் எனக்கு பதில் சொல்லதெரியவில்லை.அவருக்கு நான் சில பதில்களை சொன்னேன் ஆனால் அந்த பதிலில் எனக்கே திருப்தியில்லை .அவர் கேட்ட கேள்விகள் .

1.உங்கள் அல்லா சக்தி உள்ளவர் என்கிறாயே அப்புரம் ஏன் அந்த அல்லாவை ஏற்றுக்கொண்ட சோமாலியா மக்கள் உன்ன உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள்
2.உங்கள் அல்லாவையே முழுமையாக நம்பியிருக்கும் பாலஸ்தீன மக்கள் ஏன் உங்கள் அல்லாவை ஏற்கமறுக்கும் யூதனால் சாகடிக்க படுகிறார்கள் பாவம் பச்சகுழந்தைகள் ஏன் அவர்களும் கொல்லப்படுகிறார்கள் .
3.இதுகெல்லாம் காரணம் யார் இறைவனா ?மனிதனா ?
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்றே எனக்கு தெரியவில்லை அண்ணா .
நானும் 5, 6,பேரிடம் கேட்டேன் அவர்கள் சொன்ன எந்தபதிலும் எனக்கு திருப்தியில்லை அண்ணா .

الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ ﴿2:155﴾
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

Tuesday, February 4, 2014

உனை இறைஞ்சுவதற்கே உயிர் பெற்றேன் !

இறைவா !
இக்கரையில் விட்டாய்
அக்கரையில் சேர்த்து விடு
அக்கறையோடு கேட்கிறேன்
நட்டாற்றில் நிறுத்தி விடாதே
காக்க வைத்து கரையை கடக்கச் செய்யாதே
மின்னல் வேகத்தில் உன் உறையில் சேர்த்து விடு

Tuesday, December 24, 2013

இறைவா...

இறைவா...

யாவையும்
பிறக்கவும் இறக்கவும்
வைப்பவன் நீ !
பிறப்பே இல்லாத
பேரதிசயமும்
நீ !

பிரபஞ்சமெங்கும்
பெருங்காற்றை
புரள வைப்பவன் நீ !
அதில்
துளிகூட கொடுக்காமல்
மூச்சுக் காற்றை
மூடி விடுபவனும்
நீ !

Thursday, December 12, 2013

உங்களுக்கு கொடுக்கப்பட்ட செலுத்த வேண்டிய தொகைக்கான ரசீது கிடைத்ததா?

 எழுபது வயதை கடந்த மனிதர் சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டு அதன் நிமித்தமாக நோயால் பாதிக்கப்பட்டார். அவரை ஒரு திறமையான மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர் மருத்துவர்கள் அவரை பல வகையில் சோதித்து அவருக்கு அவசரமாக  ஒரு அறுவை சிகிச்சை தேவை என்று அந்த மருத்துவர் ஆலோசனை கூறினார். அவர் பல நாட்கள்   கடுமையான வலியால் அவதிப்பட்டதால் அவர் உடனேயே  அறுவை சிகிச்சை செய்ய ஒப்பு கொண்டார்.

Saturday, November 30, 2013

யார் வீரர் !


ஒரு பாக்சிங் வீரர் சிறுநீர் கழிக்க ஒரு கழிப்பிட த்துக்குள் செல்லுமுன் தனது கோடை கழட்டி வெளி யில வைத்துவிட்டு
சிறுநீர் கழிக்க போனார்...!!!!!! அங்கு துப்புரவு செய்யும் தொழிலாளி சொன்னார் ......அய்யா இங்கே வைத்து விட்டு செல்லாதீர்கள்;;;; யாரவது திருடிசென்று விடுவார்கள் .......
அதற்க்கு அந்த வீரர் சொன்னார் நான் யார் தெரியுமா ...!!!!!
என்னிடம் எவனும் திருடிவிடுவானா ...!!!!!!
இப்ப பார் என்று சொல்லி ஒரு காகிதத்தை எடுத்து
தான் ஒரு மிகவும் பலம் பொருந்திய பலசாலி என்பதை குறிக்கும் வண்ணம்

அந்த கோட்டின் மேல் இப்படி எழுதி வைத்து விட்டு போனார்

நான் ஒரு பாக்ஸின் வீரர்
"""""""""""""""""""""""""""""""""""

Monday, December 31, 2012

உன் கேள்விக்கு என்ன பதில்!

இறை நூல் கற்றேன் இறையருள் பெற
இறை நூல் கற்றதால் ஈன்றோர் மகிழ்ந்தனர்
இறை நூல் நெஞ்சத்தில் பதிந்தது
நெஞ்சத்தில் பதிந்த இறை நூல் வாழ்வில் வழி காட்ட
நெஞ்சத்தில் பதிந்தது நாளாக இருள் நெஞ்சில் மறைந்தது
காட்டிய வழி வாழாமல் தோன்றிய வழியில்  தொடர்ந்தேன்

பொருள் நாடி வெளிநாடு சென்றேன்
குடும்பம்   நாடி வீடு திரும்பினேன்
என்ன பொருள் பெட்டிக்குள்  யெனப்  பார்த்தனர்
இல்லாள் நகையை  பெட்டிக்குள் தேடுகிறாள்
இல்லாததை  இருக்குமென தேடுகிறாள்
இருந்த புன்னகையும் மறைந்தது

இருக்கும் போது பலர் பல கேள்வி கேட்டனர்
வேலை தேடினால் என்ன படிப்பு ?என்ன அனுபவம்?
கேள்வி மேல் கேள்வி அத்தனைக்கும் பதில் தெரிந்தது
கேள்வியும் பதிலும் வாழ்வானது!

இறப்பு எனைத் தழுவ இருந்தோர் கேட்டது பல!
இறந்தவன் என்ன விட்டுச் சென்றான்?

சேர்த்தது எத்தனையோ!
சேர்க்க வேண்டியதை சேர்க்கவில்லை

உன்னருள் நாடி நிற்கின்றேன்
உன் வலிமையறிந்து நடுங்குகின்றேன்

மறை கற்றேன் மறை வாழ்வு வாழவில்லை
இறை கேட்கும் கேள்விக்கு விடையில்லை

அத்தனை கேள்விக்கும் பதில் அறிந்திருந்த நான்
இந்த கேள்வி எப்படி வரும் என அறிந்தேனில்லை!
இறைவன் கேட்டது ஒரே கேள்வி!
இருந்தவரை உனக்காக எத்தனை நன்மைகள் அனுப்பி வைத்தாய்?
இறைவன் கேட்ட கேள்விக்கு பதிலில்லை!
இனியொரு வாழ்வுமில்லை.
இழந்தது இழந்ததுதான்.

Wednesday, December 26, 2012

கர்வம் பிறந்தநாள்..!

 முதன் முதலாய் கர்வம் என்மீது,
கண்ணாடிமுன் நிற்கின்றேன் கம்பீரமாய்!

இமயமாய் இன்னல்கள் என்னைச் சுற்றி
இருந்தும் அதன்மேல் சிகரமாய் நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,

இழப்புகளின் காயங்கள் என்னிடம் தோற்றுபோய்,
வலி நோக்கி நகைத்து நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,

குற்றம் புரியா கொடுமை கண்டும்
மண்ணித்து மா மனிதனாய் நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,

இளையவர் கொள்ளும் கேளிக்கை வெறுத்து
இரும்பு மனம் கொண்டு நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,

இறைவன் இவன்தா னென்று அவனை
அவனருளால் குனிந்து தொழுது நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,

இன்று புதிதாய் பிறந்த வுணர்வு!
இதற்கு முன் இல்லை இதுபோல்
என்மீது கர்வம் எனக்கு..!
Rafeeq ul Islam
 Rafeeq ul Islam
 http://rafeeqspoem.blogspot.in/


Tuesday, December 25, 2012

இஸ்லாம் என்ன போதிக்கின்றது?(காணொளியில் ஆங்கிலத்தில் காண்க)

இறைவனை புகழும் நேரத்தில்
இதயத்தில் ஒளி பிரகாசிக்கின்றது
மனம் மகிழ்வால் பொங்குகின்றது
விழிகளில் கண்ணீர் வடிகின்றது
இறைவனது அருளை நாடி நிற்கின்றது
இறைவன் அருள் அளவில் அடங்காது நிற்கின்றது
இறைவனை நினைத்து வேண்டிய கை  நிறைகின்றது
இறைவனை நினைத்து வேண்டி மனதோடு உடல் தொழுகின்றது
இறைவனை இறைஞ்சுவனின் நெஞ்சம் நிறைகின்றது 
இறைஞ்ச வேண்டிய இறைவன் நீயன்றி வேறு இறைவனில்லையே 
இறைவனின் இறுதி இறைத் தூதர் முகம்மது நபியே(ஸ .அ)
இஸ்லாத்தின் அடிபடைக் கொள்கை இதுதானே!  Quran 13:11 says: Verily, God does not change men's condition unless they change their inner selves...

....எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.- Quran 13:11

Friday, December 14, 2012

இரு நிலைகளிலும் சமநிலை வேண்டும்

துன்பம் தாக்க துவள்வதும்
மகிழ்ச்சி வர துள்ளுவதும்
இறை நேசர்களின் இயல்பாகாது
இரு நிலைகளிலும் சமநிலை வேண்டும்

இறைவன் மீது வைத்திருக்கு நேசம் நிபந்தனையற்றது
அர்ப்பணிப்பே நிபந்தனையற்ற விசுவாசமாகும்
ஏற்றத்தாழ்வு நிலை, சூழ்நிலை இவைகளை வைத்து நம்பிக்கை கொள்வதல்ல மார்க்கம்
ஆர்வம், உற்சாகம்,உறுதி மற்றும் நம்பிக்கை இதன் அடிப்படையில்  தொடர்வதுதான் மார்க்கம்
துன்பங்களினால் வரும் துயரங்கள் நம் மன உறுதியை மாற்ற முடியாத நிலையை தருவதே மார்க்கத்தை பின்பற்றியோர் வழி
துன்பம் வந்தால் விதியென்றும் வெற்றி தரும் செய்திகள் கிடைக்க தம் திறமையால் வந்தது என்றும் சொல்வார்கள்
துன்பம் வரும்போது இறைவனை நாடுவதும் மகிழ்வான நிகழ்வுகள் கிட்ட இறைவனை மறப்பதும் மார்க்கத்தின் மீது, இறைவன் மேல் நம்பிக்கை கொண்டோர் செயலாகாது

 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். - குர் ஆன் 2:156.

Tuesday, November 13, 2012

முழுமையான நெருக்கம் கிடைக்க முடியுமா!

 ஆத்ம நண்பன் , உயிருக்கு உயிரான தோழன், இவர்களிடம்  முழுமை உண்டா!

அறிவை சொல்லித் தந்த ஆசிரியர் எனப்படுவோர்  இந்த வட்டத்தில் வருவாரா!

இனிய வாழ்வை தருபவராக கருதப்படும் மனைவியினால் முழுமையான வாழ்வை பெற்றுவிட முடியுமா ! 

பாசத்தை தந்த பெற்றோர் நம் மனதில் முழுமை பெற்று விடுவார்களா!

யாரிடம்தான் முழுமையான நெருக்கம் கிடைக்கும்!

நண்பனிடம்  கருத்து ஒற்றுமை கிடைக்கும். உயிரைக்கொடுத்து உதவுவார்கள் பெற்றோர்கள். மனைவி நமக்கு நல்லது கெட்டதுகளில் பங்கு பெறுவாள் மற்றும் உடலோடு ஒன்ற உடலுறவு தருவாள் .  பின் யாரிடம்தான் முழுமை கிடைக்கும்.!
முழுமையான நெருக்கம் கிடைக்க ஆசைப்பட்டு நாம் நொறுங்கி விட வேண்டியதுதான்.
முதுமை கிடைத்தாலும் முழுமை கிடைக்காது.
முழுமையான நெருக்கம் என்பதின் இலக்கணம்தான் என்ன ?
முழுமை என்பது ஆன்மிகம் ,உணர்வு அறிவு உடல் உறவு இத்தனையும் உள்ளடக்கியதுதான்

ஆன்மிகம் அடங்கிய ( spiritual)  உணர்ச்சி வயப்பட்ட (emotional  ) அறிவு சார்ந்த (intellectual ) உடல் உறவு (physical relation  ) இத்தனையும் உள்ளடக்கிய உறவோடு நமக்கு கிடைக்கும் மனிதரை பெற முடியுமா?  

Saturday, October 6, 2012

உன்னையல்லால் யாரைக் கேட்போம்!

இறையோனுக்கு இணையுமில்லை துணையுமில்லை
இறைஞ்சுவோனுக்குஇணையுமுண்டு  துணையுமுண்டு
ஆளுகை செய்கிறவன் அவன்
பேணுதல் செய்கிறவர் மனிதன்

இறையோனாய் இருப்பவன் இறைவன்
இறைஞ்சுவோனாய் இருப்பவன்  மனிதன்
வேண்டுபவனாய் இருப்பவன் இறைவன்
கேட்பவனாய் (வேண்டல் ) இருப்பவன் மனிதன்

இறைவனை நாடி சான் போனால்
நம்மை  நாடி முழம் வருவான்
அவனை நாடி முழம் போனால்
நம்மை  நாடி பாகம் வருவான்

கருணையால் நம்மை பிறக்க வைத்தான்
தொழுகையால் அவனை நேசிக்க வைத்தோம்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்

Wednesday, August 29, 2012

இறைவன் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறலாமா?

இறைவன் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறலாமா?
ஹதீசுகள் பற்றி ஓர் உரையாடல் எழுந்தது.

இறைவன் ஹதீசுகளைப் பற்றி ஏதும் குர்-ஆனில் சொல்லவில்லை என்ற கருத்தை முன்வைத்தேன். அதற்கு மறுமொழ்யாக நண்பர் ஒருவர் இப்படி கூறினார்.

*

எனக்குத் தெரிந்தவரையில் இது உண்மை இல்லை, சுன்னா ஹதீசுகள் என்ற வடிவில் இருக்கின்றது. அது இஸ்லாமின் முக்கியமான ஓர் அங்கம். பல வசனங்களில் இறைவன் சுன்னாவைப் பின்பற்றச் சொல்கிறான். கீழே உள்ள இறைவசனம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
========




Sahih International
[We sent them] with clear proofs and written ordinances. And We revealed to you the message that you may make clear to the people what was sent down to them and that they might give thought.
Tamil
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்
Source :http://quran.com/16/44
 ==========
“We have revealed unto you the Remembrance that you may explain to mankind that which has been revealed for them” (16: 44).

உதாரணமாக, குர்-ஆனில் தொழவேண்டும் என்று மட்டும்தான் இருக்கிறது. எப்படித் தொழுவது என்பதை இறைத்தூதர்தான் சொல்லித்தந்தார்.

*

இதற்கான என் பதில்:

மேலே உள்ள இறைவனின் வசனம் தெளிவாக இருக்கிறது.

அறியாதவர்களுக்கு குர்-ஆன் வரிகளுக்கான விளக்கத்தைக் கூறுங்கள் என்றே இறைவன் தன் தூதரிடம் கூறுகிறான்.

குர்-ஆனுக்கு மாற்றமான விசயங்களை போதிக்கச் சொல்லவே இல்லை.

இறைதூதர், தான் வாழுகின்ற காலத்தில் உள்ள மனிதர்களுக்கு விளக்கம் கூறினார்கள். அவை மட்டுமே ஹதீசுகள்.

அவை தவிர குர்-ஆனை விட்டு விலகிய எதுவும் ஹதீசாக முடியாது. மற்றவையெல்லாம் இறைவனின் கருத்துக்கள் ஆக முடியாது. இதை நாம் புரிந்துகோள்ள வேண்டும்.

இறைவன் கூறிய கருத்துக்களை விட்டுவிட்டு மற்றவர்களின் கருத்துக்களை நாம் எடுத்துக்கொண்டால் அதுதான் உண்மையிலேயே இணைவைப்பதாகும்.

இறைவன் தொழச் சொன்னான். தொழுகையை இறைத்தூதர் விளக்கினார்.  நிச்சயமாக அது சுன்னாதான், ஹதீசுதான்.

இறைத்தூதர் சொன்ன ஹதீசுகளும் செய்த விளக்கங்களும் அப்படியே மாற்றுக்குறையாமல் நமக்குக் கிடைக்க வேண்டும்.

அதுவன்றி வந்தவர் போனவரெல்லாம் சொல்லும் கருத்துக்கள், அதுவும் குர்-ஆனில் குறிப்பிடப்படாத விசயங்களை எவர் பேசினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

உதாரணமாக இசை கூடாது என்று குர்-ஆனில் கூறப்படவில்லை. அதை ஹதீசு கூறுகிறது என்று சொன்னால், அங்கே பெரிய சந்தேகம் எழுந்துவிடுகிறது.

அந்த ஹதூசுகள் எதன் அடிப்படையில் உருவாகின என்ற கேள்வி வந்துவிடுகிறது. அது இறைவனுக்குப் புறம்பானது என்று ஆகிறது.

நான் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறுவது கூடாது என்று இறைவனே கூறுகிறான்.

10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”

இறைதூதர் இறைவனின் வசனத்திற்கு மாற்றாக எந்த ஒன்றையும் கூறியிருக்கவே மாட்டார். அந்தத் தவறை ஒருக்காலும் இறைத் தூதர் செய்யமாட்டார்.

அப்படிச் செய்தவர்களெல்லாம் இஸ்லாமை அழிக்க நினைத்தவர்களும், தங்களின் சொந்தக் கருத்துக்களை இறைவன் கருத்தென்றும் இறைத் தூதர் கருத்தென்றும் சொல்லும் பொய்யர்களே என்று நம்புவோமாக!

இதோ நீங்கள் இட்ட இறைவசனத்தின் தமிழ் வடிவம்:

16:44. தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

மேலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் கீழே வருகின்றன:

Friday, August 3, 2012

சொன்னான் செய்தேன் .. நோன்பும் உண்ணாவிரதமும்


"அறிது அறிது மானிடராதல் அறிது...
மானிடராய் பிறந்தும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அறிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும்தான் செய்தல் அறிது
தானமும் தவமும்தான் செய்தலாயினும் வானவர் நாடு வழி திறந்திடுமே" - ஔவ்வயார்

மனிதனாய் பிறந்தாலும் பல கடமைகளும் இருந்து சில உரிமைகளும் பெற்றிருந்தாலும் நிம்மதியாய் வாழ பல போராடங்களையும் அளவற்ற தொல்லைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றோம்.  பார்த்தால் மன்னன் பசித்தால் பரதேசி.
'உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன்' என்று  நாம் சொல்ல எல்லாம் இறைவன் அருள் என்று சொல்பவனும் 'உம....வீட்டுக்கு வீடு வாசப்படி' என்று புலம்புவனும் உண்டு . எங்கு நிம்மதியாக வாழ விடுகிறார்கள். இந்த உலகில் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என்பர் சிலர். 'சரிப்பா வேறு உலகம் ஒன்று உள்ளதே அதற்கு  ஏதாவது உருப்படியா ஒரு வழி வகுத்து வாழ்கின்றாயா?' அதற்கும் சரியான பதில் கொடுக்க முடியவில்லை.

எதற்கு எடுத்தாலும் போராட்டம். அதிலும் பலவகை போராட்டங்கள்.
கையூட்டு , இலஞ்சம், ஊழல் இவைகளை ஒழிக்க போராடுகின்றோம்  என்று  சிலர் திரண்டு அதற்காக நினைத்ததை சாதிக்க பல வழிகள் கையாளப்படுகின்றன . முதலில் உண்ணாவிரதம் அது வேறு விதமாக மாறுவதனை பார்க்கின்றோம். சாத்வீகம் போய், சமாதானமும் முடியாமல் இருதியில்  அது எங்கு போய் நிற்குமோ! அவர்களுக்கே வெளிச்சம்.
ஒருவர் குடியை ஒழிப்பேன் என்கிறார் மற்றவர் அதை வியாபாரமாக்கி விட முயல்கின்றனர் . அப்பப்பா ஒரே குழப்பம்!

Wednesday, July 25, 2012

இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது?

 இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது?

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இந்த ஆண்டு (2012) 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் அர்ஜெண்டினாவில் 9 மணிநேரமே நோன்பு நோற்கிறார்கள்.

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் 24 மணிநேரமும் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயேதான் நடக்க முடியும்.

இரவு அதிகமாக வரும் சில காலங்களில் சில இடங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அமையும். சில இடங்களில் முழு நாளும் இரவாகவே அமையக்கூடும். அவர்கள் இரவிலேயேதான் நோன்பு நோற்கவும் திறக்கவும் முடியும்.

இதன் அடிப்படையில் பார்த்தால், நோன்பு நோற்கும் கால அளவை உலக முஸ்லிம்கள் வரையறுத்துக்கொள்ளுதல் அவசியம் என்று ஆகிறது.

இறைவன் நமக்கான நன்மை தீமைகளை வரையறுத்துக்கொடுத்து, நல்ல அறிவையும் ஊட்டி, வாழும் வழியை அவன் திசையில் வகுத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அவனே வழங்கியும் இருக்கிறான்.

உங்களில் எவர் ரமளான் மாதத்தை அடைகிறாரோ,
அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;
எனினும் எவர் நோயாளியாகவோ
அல்லது பயணத்தில் இருக்கிறாரோ
அவர் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;
இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,
உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;

குர்-ஆன் 2:185 (ஒரு பகுதி)

Sunday, July 8, 2012

ஒவ்வொரு லைக்கும், ஒவ்வொரு கிளிக்கும் எதில் முடியுமோ!


  நீங்கள் கொடுத்த ஒவ்வொரு லைக்கும், எழுதிய  ஒவ்வொரு  வார்த்தையும்  ஒவ்வொரு கிளிக்கும் ஒவ்வொரு புகைப்படங்களும் , கருத்தும் மற்றும் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றது.இது ஒவ்வொரு நிமிடங்களிலும் நடைபெறுகின்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட கணினியில் நாம் செயல்படும் கூகுள் ,பேஸ்புக் போன்றவைகளில். அமெரிக்கா ஆகாய உயரத்தில்  நிறுத்தி வைக்கப்பட்ட உளவு சாதனங்கள்  நம்மை கண்காணிக்கின்றது. இவைகள் செய்வதனை நாம் அறியாமல்  நமக்கு நினைத்ததை எழுதுகின்றோம் பின்பு பல அவதிக்கு உள்ளாவதையும் அறிகின்றோம். ஆனால் ஒன்றை மட்டும் நாம் நம்ப மறுக்கின்றோம். அனைத்துக்கும் மேலாக இறைவன் நம்மை கவணிக்கின்றான் என்பதை. இறைவன் இரக்கமுள்ளவன், மிகக் கிருபையுடையவன் அவன் உடனே நமக்கு தண்டனை தருவதில்லை. நாம் திருந்துவோம் என  அவன் நினைக்கின்றான்.


மனிதன் போடும் கணக்கு தவறாக இருக்கலாம் ஆனால் இறைவன் போடும் கணக்கு ஒருகாலமும் தவறாக இருக்க முடியாது. உன் நோக்கத்தைப் பார்பவன் மற்றும் உன் செயலைப் பார்பவன் இறைவன். கணினிக்கு உன் நோக்கம் தெரியாது. உன் செயல்தான் அது பார்க்கும். அதனைக் கொண்டு உனக்கு அது  தண்டனை கொடுத்துவிடும். திருந்துவதற்கு  வாய்பே  தராது. இந்நிலை இருக்க நாம் போனபோக்கில் ஒரு லைக்கும் கிளிக்கும் செய்து விடுகின்றோம்  பேஸ்புக்கில். அதற்கு முகம் அதனுடைய புத்தகம்தான். அதில் ஏன் உங்கள் விளையாட்டு. கவனம் தேவை. கண்டதெற்கெல்லாம் ஒரு லைக் மற்றும் நினைத்ததெல்லாம்  எழுதுவது தேவையா! மற்றவர் மனதை புண்படுத்துவத்தின் வழியே நாம் மகிழ வேண்டுமா! அன்பால் திருத்து அதற்கு முன் நீயே திருந்திக் கொள்.

Monday, July 2, 2012

மனிதன் மாற்றத்திற்கு உட்பட்டவன்.

  சிலர் நம்மை நாடி வருவது மகிழ்வு .சிலர் நம்மை விட்டு பிரியும் பொது துயரம் .மற்ற சிலர் நம்மைவிட்டு விலகும்போது ஆனந்தம். ஒருவரது செயல்பாடுகள் இத்தனை மாற்றங்களை  ஏற்படுத்துகின்றன.
சிலதை பார்க்கிறோம். சிலவற்றை கவனிக்கிறோம் மற்ற சிலவற்றை காணாமல் தவிர்க்கின்றோம்.

 சிலவற்றை படிக்கிறோம் சிலவற்றை படிப்பதை வெறுக்கிறோம் மற்ற சிலவற்றை படித்து மனதில் நிறுத்திக் கொள்கிறோம்.
சில உணவு ஒருவருக்கு உடலுக்கு ஊட்டம் தருகின்றது மற்ற சில உணவுகள் அவருக்கு ஒவ்வாமையை தந்து அவதிக்குள்ளாகின்றது. சில உணவுப் பண்டங்கள் மீது ஒருவருக்கு   மிகவும் நாட்டம் அவருக்கே மற்ற உணவைக் கண்டால் பிடிப்பதில்லை  . ஒருவருக்கு ஒருவர் சுவைப்பதிலும் ரசிப்பதிலும்  மாற்றம். ஒரே மாதிரியாக சுவைப்பதிலும் ரசிப்பதிலும் அனைவருக்கும் இருந்தால் அது திண்டாட்டதில் வந்து முடியும். பற்றாக்குறை வராமல் இருக்க இந்த மாற்று நிலை உதவுகின்றது. அனைவரும் சிகப்பு பெண்தான் வேண்டுமென்றால் இது இயந்திரத்தால் செய்யக் கூடிய காரியமல்ல. அப்படி அனைத்தும் சிகப்பாக இருந்தாலும் அது வெறுத்து விடும்.மனிதன் மாற்றதினையே விரும்புபவன். மனிதன் மாற்றத்திற்கு (குழந்தையாய் இருந்து முதியோர் வரை) உட்பட்டவன்.

Tuesday, June 26, 2012

மறந்துவிட்ட சத்தியங்கள்

மறந்துவிட்ட சத்தியங்கள்


 வாழ்வில் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கின்றோம்  . மற்றவர்களைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள் . நம்முடன் வரப்போவது நாம் செய்த தொண்டுகளும் நற்சேவைகளும்தான். உற்றார் உறவினர் மற்றோர் நாம் உயிரோடு இருக்கும் போது நம பெயரைச் சொல்லி அழைப்பார்கள்.  நம உயிர் நம்மை விட்டு பிரிந்து விட்டால் நம உடலை அடக்கம் செய்வதில் துரிதம் காட்டி அடக்கம் செய்வதில் முற்படுவர். அப்பொழுது அவர்கள் நமக்கு தந்துள்ள பெயர் முஸ்லிமாக  இருந்தால்  "மொவுத்தை" எப்பொழுது அடக்கம் செய்யப் போகின்றார்கள். கிறிஸ்டியனாக  இருந்தால் பிணத்தினை  எப்பொழுது அடக்கம் அல்லது  ஹிந்துவாக இருந்தால் எப்பொழுது  சுடுக்காட்டுக்கு  போகின்றார்கள்.  போய் விட்டது  நம பெயர். வந்தது மொவுத் அல்லது பிணம் என்ற புதிய  பெயர்.

'பட்டாமணியார் வீட்டில் யாராவது இறந்தால் ஆயிரம் பேர். பட்டாமணியார் இறந்துவிட்டால் பத்து பேர்' . அவரே போய் விட்டார் இனிமேல் அவரை அணுக வேண்டிய அவசியமில்லை. இதுதான் உலகம்

 கொடுத்த வாக்குறுதிகளை செயல் படுத்திவிடுங்கள். அது மக்களிடமாகவும் இருக்கலாம். இறைவன் நாடியதை அவனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை  செயல்படுத்திவிடுங்கள். அவைகள்தான் உங்களை தொடரக் கூடியவைகள்.
''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் -அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்

Tuesday, May 29, 2012

"வைகல் தோறும் தெய்வம் தொழு" ‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்"

"ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்" என்று காலை விடியல் வேளை தொழ அழைக்கும் பாங்குக்கு இரண்டு முறை சொலப்படுகின்றது. இப்பொழுதெல்லாம் பல ஊர்களில் தொழ ஆறம்பிக்கும் சுமார் பத்து நிமிடத்திற்கு   முன் ‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்" என்று தமிழில் சொல்லி அழைக்கவும் செய்கின்றனர்
‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது எழுந்து வாருங்கள்" ("ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்") என்று விடியல் வேளையில் தொழுகைக்கு அழைப்பவர் இரண்டு முறை குரல் கொடுக்கின்றார்.

 (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள். அனஸ்(ரலி) அறிவித்தார் (- ஹதீஸ் 603.புகாரி )

12ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஔவையார் "வைகல் தோறும் தெய்வம் தொழு" என்பதும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று"  என்பதும் இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியதிற்கும் மற்றும் காலைத் தொழுகையான  ஃபஜர்  தொழுகை மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது என்பதற்கும் பொருந்துவதனைக் காண மகிழ்வாக இருக்கின்றது.

காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.

ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை தொழுகையைக் கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள். ருகூஃ செய்வோருடன் சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! (2:43)

ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஓதுவதற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 96:௧

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.(2:151)

(யாவற்றையும்) படைத்த உம்முடைய தொழுகை திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. ( குர்ஆன் 96: 1)

 ஔவையாரும் இதனை "ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்" -ஔவையார்
 மூன்று ஔவையார் வாழ்ந்ததாகவும் அவர்கள் பெண் பாவலர் என்றும் சொல்கின்றார்கள்

Monday, May 28, 2012

இறைவன் ஆணா? பெண்ணா?

சத்யமார்க்கம் http://www.satyamargam.com/1853 கட்டுரையை வாசித்தேன். குர்-ஆன் வரிகளுக்கு நேரடிப் பொருளையே தரும் சாதாரண கட்டுரையாகவே அது இருந்தது.

ஆனால் அங்கே ஒரு பொற்குவியலையே என். சர்ஃபாத் அஹ்மது என்பவர் கொட்டித் தந்திருக்கிறார்.

அதன்படி, இறைவன் என்பவன் ஆண் பெண் என்ற பாலினத்திற்கு அப்பாற்பட்டவன்.

அஃறிணை உயர்திணை என்கின்ற திணைகளுக்கும் அப்பாற்பட்டவன்.

இறைவனை அவன் என்று அவனே கூறுவது, மரியாதை நிமித்தமாகக் கூறப்படும் கால வழக்குச் சொற்கள் காரணமாகவேயன்றி வேறில்லை.

சில இடங்களில் ’அவன் கூறுகிறான்’ என்பதுபோல ஒருமையிலும் சில இடங்களில் ’நாம் கூறினோம்’ என்பது போல பன்மையிலும் இறைவன் குறிப்பிடப்படுகிறான்.

நாம் கூறினோம் என்பதை நேரடிப் பொருளாக எடுத்துக்கொண்டு, இறைவன் ஒருவன் அல்லன், பலர் என்று கூறுவது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் இறைவன் ஆண்பால் என்று கூறுவதும்.
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *
Source : http://anbudanbuhari.blogspot.in

ஆள்பவனே நீ யார்! உன்னிடம் சில கேள்வி ?

இதனையும் கிளிக் செய்து படியுங்கள்    

Is Allah Masculine in Gender

Question:
Why do we quote Allah (swt) as - Him/His ?

                                                                                                                                                          - Jameela Arif

Answer:
a) The Arabic word 'Allah' has no gender. The Arabic grammar has only two genders, male and female and male gender is of two types:

1. Masculine Haqeeqi i.e. Real, which is used to denote the masculine gender in humans, animals.

2. Masculine Majazi i.e. Unreal, wherein it is used as Masculine but in reality it is not so e.g. (Angels) Malak, Layl (Night), Bab (door). The word Allah (swt), too falls in the second category i.e. Masculine Majazi.

The English language has got three genders; male, female and neutral. So if we translate the Arabic word 'huwa' into English, it can be translated as 'he' or 'it'. And the Arabic word 'hiya' can be translated as 'she' or 'it'.

Allah (swt) is unique and cannot be referred as 'it' in English, since Allah (swt) has no gender, neither male nor female or neutral.

Some people may argue that the Arabic word 'huwa' and 'hiya' both can be used for 'it' or neutral gender, then why Allah has used 'huwa' and not 'hiya' ?

In Arabic grammar there are certain rules and criteria for feminine gender. First, if it is female by nature, like the word mother (ummum), it becomes feminine in gender. Allah is not a female. Second, if it ends with the third Arabic letter 'ta' like 'mirwahtun' (fan), it becomes feminine. The Arabic word 'Allah' doesn't end with 'ta' so it cannot be feminine. Third, if the word ends with 'Alif Mamduda'  (big Alif), it becomes feminine. But the Arabic word 'Allah' doesn't end with 'Alif Mamduda' so, it cannot be feminine. And lastly, if the object occurs in pairs, like pairs of the body, e.g. 'Ainun' (eyes), 'yadun' (hands), they are considered feminine. But Allah (swt) says in the Glorious Qur'an in Surah Ikhlas, chapter 112, verse 1"

 Please click here to read more Source  :http://www.irf.net/index.php?