Sunday, July 8, 2012
ஒவ்வொரு லைக்கும், ஒவ்வொரு கிளிக்கும் எதில் முடியுமோ!
நீங்கள் கொடுத்த ஒவ்வொரு லைக்கும், எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு கிளிக்கும்
ஒவ்வொரு புகைப்படங்களும் , கருத்தும் மற்றும் அனைத்தும்
கண்காணிக்கப்படுகின்றது.இது ஒவ்வொரு நிமிடங்களிலும் நடைபெறுகின்றது.
மனிதனால் உருவாக்கப்பட்ட கணினியில் நாம் செயல்படும் கூகுள் ,பேஸ்புக்
போன்றவைகளில். அமெரிக்கா ஆகாய உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட உளவு
சாதனங்கள் நம்மை கண்காணிக்கின்றது. இவைகள் செய்வதனை நாம் அறியாமல் நமக்கு
நினைத்ததை எழுதுகின்றோம் பின்பு பல அவதிக்கு உள்ளாவதையும் அறிகின்றோம்.
ஆனால் ஒன்றை மட்டும் நாம் நம்ப மறுக்கின்றோம். அனைத்துக்கும் மேலாக இறைவன்
நம்மை கவணிக்கின்றான் என்பதை. இறைவன் இரக்கமுள்ளவன், மிகக் கிருபையுடையவன் அவன் உடனே நமக்கு
தண்டனை தருவதில்லை. நாம் திருந்துவோம் என அவன் நினைக்கின்றான்.
மனிதன்
போடும் கணக்கு தவறாக இருக்கலாம் ஆனால் இறைவன் போடும் கணக்கு ஒருகாலமும்
தவறாக இருக்க முடியாது. உன் நோக்கத்தைப் பார்பவன் மற்றும் உன் செயலைப்
பார்பவன் இறைவன். கணினிக்கு உன் நோக்கம் தெரியாது. உன் செயல்தான் அது
பார்க்கும். அதனைக் கொண்டு உனக்கு அது தண்டனை கொடுத்துவிடும்.
திருந்துவதற்கு வாய்பே தராது. இந்நிலை இருக்க நாம் போனபோக்கில் ஒரு
லைக்கும் கிளிக்கும் செய்து விடுகின்றோம் பேஸ்புக்கில். அதற்கு முகம்
அதனுடைய புத்தகம்தான். அதில் ஏன் உங்கள் விளையாட்டு. கவனம் தேவை.
கண்டதெற்கெல்லாம் ஒரு லைக் மற்றும் நினைத்ததெல்லாம் எழுதுவது தேவையா!
மற்றவர் மனதை புண்படுத்துவத்தின் வழியே நாம் மகிழ வேண்டுமா! அன்பால்
திருத்து அதற்கு முன் நீயே திருந்திக் கொள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment