Thursday, May 27, 2021

இறைசிந்தனை 🌹سورة يس🌹

 Noor Saffiya



💞 இறைசிந்தனை

                                     🌹سورة يس🌹

*யா_* அல்லாஹ்🌹!

எனும் எழுத்தின்

மகிமைக்கு நிகர்

யாதிலுமில்லையே!

யா ரப்பே! யா ரஹீமே!

யா ரஹ்மானே!

புகழுக்கும்!

பெருமைக்கும்!

பொருத்தம் உனக்கு

நிகர் நீ மட்டுமே!

*ஸீன்_* ...🌹

எனும் எழுத்தின்

ஸிர்ரே உன்னில் மட்டுமே!

ஸிர்ரும்,ஸர்ரும் உன்

பொருப்பினிலே!

ஸர்ரை நீக்குபவனே!

ஸிர்ராய் உள்ள கல்பின்

ஸிர்ரை அறிந்தவனே!

ஸிஹ்ரையும் அழித்திடு!

ஸர்ரையும் நீக்கிடு!

ஸிர்ரான துஆ_வும்!

ஸிர்ரில்லா வெளிப்படையான!

ஹலாலான துஆ_வும்

ஏற்றிடுவாய்; எம் ரப்பே!

காலையில் ஓதுபவர்க்கு

மாலை வரையிலும்!

மாலையில் ஓதுபவர்க்கு

காலை வரையிலும்!

அன்றைய காரியம் கைகூடும்!

القرآن ஓதுமிடத்தினிலே மலக்குகள் இறங்குவர்!

அதுவும்,

  னின் _القرآن

இதயத்தினை தொடும்

கல்பின் மனை,மனதிற்கு

சொல்ல முடியுமா!

   ......சுபுஹானல்லாஹ் !....

«إِنَّ لِكُلِّ شَيْءٍ قَلْبًا، وَقَلْبُ القُرْآنِ يس، وَمَنْ قَرَأَ يس كَتَبَ اللَّهُ لَهُ بِقِرَاءَتِهَا قِرَاءَةَ القُرْآنِ عَشْرَ مَرَّاتٍ»

ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் யாஸீன் ஆகும். எவர் யாஸீனை ஒரு முறை ஓதுவாரோ அவருக்கு பத்து முறை குர்ஆன் ஓதிய நன்மையை அல்லாஹ் எழுதிவிட்டான். (நபி மொழி. திர்மிதி: 2887).

எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்

(நபி மொழி. தாரமி: 3418.

மிஷ்காத்: 2171).

பத்து தடவை குர்ஆனை

ஓதிய நன்மையை பதிவு செய்கிறான்.

நூல்கள் : திர்மிதீ (2812),

தாரமி (3282)

وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ،

 அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அருளினார்கள்., “அல்லாஹ்வின் இல்லத்தில் கூட்டமாக அமர்ந்து குர்ஆன் ஓதினால் அவர்கள் மீது சகீனத் என்னும் அமைதி இறங்கும். இறையருள்- ரஹ்மத் அவர்களை மூடிக்கொள்ளும்.

மலக்குகள் அவர்களைச் சூழ்ந்துகொள்வர்.

அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமிருப்பவர்களிடம் பெருமையாக எடுத்துக்கூறுகிறான்”.

பதிவு- முஸ்லிம்: 2699.

அபூ தாவூத்: 1455.

ரப்பின் திருப்பொருத்தத்தை

க்நாடி ஓதுபவர்க்கு

முன்சென்ற பாவங்கள்

மன்னிக்கப்படும்!

மர்ஹும்களின் சமூகத்தில்

ஓதுவதும் நலம்!

அல்லாஹ்வும் ரசூலும்

பேசிய ரகசிய உரையின்

சிறந்த பரிபாஷை என்றும்!

அல்லாஹ் நாடியவர்களிடம்

பேசும் பரிபாஷை என்றும்!

ஒற்றைபடை எழுத்து

என்பதும் பெரியோர்கள்

சொல்வதும் உண்டு!

எத்தனை எத்தனை

சிறப்பு அம்சங்கள்

ஏந்தி வந்ததே _யாஸீன்_

இஸ்மின் பலன்களோ

இதயத்தின் சுடரே!

இறுதிவரை காக்கும்

இறை தந்த கேடயமே!

        அழகிய ஹக் திக்ரும்

       அஹ்மதரின் ஸலவாத்

            துதித்து நாவினில்

                 நனைவோம்.!

                      ஆமீன் !!

                  யா  ரப்பே  !!

               என்  ஹுப்பே  !!

             ஸல்லல்லாஹு

             அலா முஹம்மத்

              ஸல்லல்லாஹ்

       அலைஹிவ ஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா


No comments: