Noor Saffiya
💞 இறை சிந்தனை
மனமே ❤️மலர்ந்தாய்!
மணமான மலராய் 🌹!
மலர்ந்தே காயாய் 🍏!
கனியாகி சுகித்தாய்!
என்னுள்
மலர்ந்த
மலரே 🌹!
எனக்குள்
காயாய்
மகிழ்ந்தாய்!
என்னுள்
ரசித்ததன்
பின்னே!
என்னுள்
சேயாய்
கனிந்தாய்!
ருசித்த
கனியினது
சுவையினையே!
ரீங்கார
காற்றலையில்
சித்தரித்தாய்!
ராகமாய்
பாடிடும்
சுவாசித்தலிலே!
ரசிக்கும்
இயற்கை
உருவமானாய்!
இவ்வுலகின்
ஷிஃபாத்
நிலையினிலே!
இதயக்கமல
மகிழ!
இரட்சித்து
அருளாய்
இறுதியின்
வரவும்
இரசூலின்
நிழலினிலே!
கல்பை பதித்து புகழ்
மாலை சூடியும்!
காரணகர்த்தாவாய்
காமில்
ஷெய்காய்க்கி
கண்ணியப்படுத்தியே!
கரம்பிடித்து
கரைகாண!
காப்பவனாய்
காத்து,
காதலில்
இன்புற்று!
கிருபையானாய்!
கருணையாளனாய்!
காலமும்
நீயே!
காட்சியும்
நீயே!
கானமும்
நீயே!
காவலனும்
நீயே!
அனைத்தும்
நீயே!
அகக்கண்ணாடியாய்!
அறியும்
திறனாய்!
அறிவின்
தீபமாய்!
ஞானத்தின்
சுடர் தீபமாய்!
மெய்ஞானத்தின்
ரூபமாய்!
புலன்களின்
வழியாய்!
புகழுக்குறியவனாய்!
பார்த்தாய்;பூத்தாய்!
பார்த்தாய்;காய்தாய்!
பழுத்தாய்;
புசித்தாய்!
பகிர்ந்தாய்;
படைத்தாய்!
படைப்பாளியாய்
புடைசூழும்
மலக்கு
படைசூழ
அர்ஷினில்
பேரின்பமாயாள்கிறாய்!
பார்ப்பதின்
ரசனையே!
பார்ப்பவர்க்கு
அலாதியே!
அழகிய ஹக் திக்ரும்
அஹ்மதரின் ஸலவாத்
துதித்து நாவினில்
நனைவோம்.!
ஆமீன் !!
யா ரப்பே !!
என் ஹுப்பே !!
ஸல்லல்லாஹு
அலா முஹம்மத்
ஸல்லல்லாஹ்
அலைஹிவ ஸல்லம்💞
🖋நூர்ஷஃபியா காதிரியா
No comments:
Post a Comment