Suhaina Mazhar
·
கொரோனா
நோயே அல்ல... கார்ப்பரேட் சதி...
இலுமிகளின் சூழ்ச்சி...
எதுவாகவும்
இருந்துட்டு போகட்டும்... ஆனால் தயவுசெய்து எல்லாரும்
எச்சரிக்கையா இருங்க...
எந்த ஆஸ்பத்திரிலயும் படுக்கை காலி இல்லை,
உங்க கைல ஒரு கோடி
ருபாய் பணம் இருந்தாலும் இன்று
மருத்துவம் கிடைப்பது அரிதிலும் அரிது...
இப்படி
இரண்டு நாட்கள் சுற்றிப் பார்த்தும்
ஈரோடு முழுக்கவே ஹாஸ்பிட்டல் கிடைக்காமல் அல்லாடிய நல்ல வசதியுடைய எங்கள்
தூரத்து உறவினர் பெண் இன்று
இறைவனடி சேர்ந்து விட்டார்... பக்கத்து தெரு தான்... கடந்த
வாரம் அவர் சம்பந்தி இறப்பெய்தினார்,
இந்த வாரம் இவர்...
எந்த கல்யாணத்துக்கும் யாரும் போகாதீங்க, எந்த மரணத்துக்கும் இப்போதைக்கு போகாதீங்க. வெளியே போய்ட்டு உள்ளே வந்தால் உடனே ஆவி பிடிங்க. சானிட்டைசர் பயன்படுத்துங்க. மாஸ்க் போடுங்க. தயவுசெய்து யாரையும் வீட்டுக்குள்ள விடாதீங்க, நீங்களும் அடுத்தவங்க வீட்டுக்கு போகாதீங்க. இதெல்லாம் டூமச்னு நினைச்சீங்கன்னா... புரிஞ்சுக்கங்க... கொரோனா மரணங்கள் ஏற்பட்டால் வீட்டாருக்கு ஆறுதல் சொல்லக் கூட ஆள் இருக்க மாட்டாங்க...
ஈரோடு,
கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல் என
கொங்கு பெல்ட்டில் ஒவ்வொரு நாளும் தெருவுக்கு
தெரு கொரோனா மரணங்கள்... 😪
மக்கள் தொகை படுவேகமாகக் குறைவது
போல ஃபீல் ஆகுது... காற்றை
விட வேகமா நோய் பரவுது.
இதில் யாருமே தப்ப முடியாது
போல...
இதெல்லாம்
பார்க்க பார்க்க ஒரு வாரமாகவே
நான் நார்மலாக இல்லை. ஒவ்வொருவரும் துடிப்பதைப்
பார்க்கும் மனதைரியம் எனக்கு இல்லை. நேற்று
ஈதுப்பெருநாள் என்பதற்காக ஒரு நாள் சந்தோஷமாக
இருந்தது போல உணர்ந்தேன், ஆனாலும்
அடிமனம் அழுத்திக் கொண்டே தான் இருந்தது...
இன்று டோட்டலி அப்செட்...
யாரோ ஒருவர், யாருக்கோ வந்தது
என்று இருக்க முடியல... முன்னாடி
நியூஸ்களில் வெறும் எண்களில் மட்டுமே
தெரிந்த கொரோனா மரணங்கள் இன்று
ரத்தமாய் சதையாய் உலவிக் கொண்டிருக்கிறது
நம்மைச் சுற்றி...
ப்ளீஸ் கேர்ஃபுல்லா இருங்க... ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்... சாதாரண சளி காய்ச்சல் தான், எனக்கு ஒன்றும் ஆகாது என்று அசட்டையாக இருக்க வேண்டாம்... உங்க குடும்பத்துக்கு நீங்கள் முக்கியம்...
No comments:
Post a Comment