Tuesday, May 18, 2021

பாலஸ்தீன பாலகனே!

 

Noor Saffiya

💞 இறைசிந்தனை

பாலஸ்தீன பாலகனே!

படைத்தோன் உறுதியே!

பார்க்கும் கல்புகளுக்கே!

ப்ரகாச ஈமானுறுதியே!

படைப்பின் அற்புதமே!

பார்த்தீபனின் செல்வமே!

பெறும் பாக்யம் மேன்மை

சுவர்க்கமே!

பேரின்ப சோலைகளின் களஞ்சியமே!

ஜிஹாதின் அம்சங்களே!

ஜீவனில் ஓடும் குறுதியே!

ஜோராய் முழங்கிடுதே!

ஜோதி பிரகாச கலிமாவே!

   _சுபுஹானல்லாஹ்!_

இஸ்ரேலின் தாக்கம்!

இறுதியில் தூக்கம்!

ஈமானின் தேக்கம்!

ஈடேற்றம் ஆக்கும்!

இஸ்ரேல் என்பதே கொடூரம்!

இறுதியில் படும் அகோரம்!

ஈமான் தரும் நல்வினை!

ஈடேற்றம் காணும் மஸ்ஜிதுல்

அக்ஸா மனை!

இஸ்ரேலின் வெறித்தனம்!

இறுதியில் சொரித்தனம்!

ஈமானின் வெறித்தனம்!

ஈடேற்றத்தின் சுவர்க்க தனம்!

இஸ்ரேலில் இன்றைய நிலை

காண்பது வெறியே!

இறுதியில் மிரளும்

ஓர் அத்தியாயமே!

ஈமானின் அழகு மின்னும்

ஓர் அற்புத தலமே!

ஈடேற்றத்தின் மஹ்மூத் சொல்லின் வரமே!

இறை தந்த வஹியின்

ஒவ்வொன்றுமே!

இரசூலால் பெற்ற மறையின்

ஒவ்வொன்றுமே!

இறுதிவரை நம்மில் ஒவ்வொன்றுமே!

இதயத் திறவுகோலின்

நிலைத்த அற்புதம்

ஒவ்வொன்றுமே!

மண்ணின் மேலே போட்ட

ஆட்டம் 💃!

மண்ணின் கீழே நீ

செல்லுமுன் தெரியும்!

மண்ணின் கீழே சென்றதும் மண்ணின் ஆட்டம் 💃 புரியும்!

மண்ணுலகம் முடிந்து

மஹ்ஷர் காணும்போது

மனநிலை அறியும்!

மனிதா! இதுவரை போட்ட

ஆட்டம் 💃 விடு!

மனிதனை  நேசித்து

மனித நேயம் காண்!

மனிதனாய் பிறந்ததின்

மாண்பு பெற்றிடு!

மேன்மை மக்கள் எதுவென

மகிமை அறிந்திடு!

போதும் போதும் பொய்,

பொறாமை,போட்டி!

பொறுமை கொண்டு

பாரை பார்த்திடு!

பெற்றதில் பெருமிதம்

கண்டிடு!

படைத்தோன் உன்னில்

இருப்பதை அறிந்திடு!

நீ மனதார கேள் விடாதே!

நீதன் தருவான் உனக்கே!

நீதமாய் இருக்கையிலே!

நாடி வரும் நீ தேடியதுமே!

காலம் தள்ளலாம்!

கவலை கொள்ளாதே!

கிருபை பார்வை

கிடைத்ததுமே!

கோடி இன்பம் உன்னில்

நிலைத்திடுமே!

இதுவே,இறையின் வரமே!

இதனை நீ நழுவ விடாதே!

இன்பம் அடைய நீ கேட்கும்

முயற்சி விடாதே!

இனி வரும் காலம்

வசந்த காலமே!

படும் துன்பம் மாறிடவே!

பயகாம்பரில் மன்றாடியே!

பாவக்கரை அகற்றிடவே!

பணிவோம் இந்நிமிடமே!

        _இஸ்திஃபாரிலே!_

அனைத்தும் பெற்ற!

அதிகாரப்பூர்வ துஆ

அடைந்தோம் எனும்

அருளாய் தந்த ரமழானே!

அள்ளி தந்த அல்லாஹ்!

எனும் அருட்கொடை

நம்பிக்கையிலே!

ஏந்தலர் தாஹா ஆசியின்

நேர்வழி பெற்ற ரமழானிலே!

ஏற்றமாக்கும் ரமழானில் செய்த அமல்களினாலே!

ஏகோன் சொன்ன வழி

முறைக்கு கட்டுபட்டதாலே!

நிச்சயம் அடைவோம்!

நீதன் வாக்கு மாறாதவன்!

நீ நன்மையில் கேட்டால்!

நீ செய்த அமல் உனக்கே!

ஹக்கானவன் அவனே!

ஹல்கின் நிலை முழுதும் அறிந்தவன் அவனே!

ஹக்காக தருவானே!

ஹபீபின் பொருட்டாலே!

ஆமீன்.யா ரப்பே!

ஹபீபின் ஹுப்புனாலே!

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸுக்ரன்லில்லாஹ்!

🖋️நூர்ஷஃபியா காதிரியா

No comments: