Tuesday, June 14, 2016

தலையை காட்டிவிட்டு வரணும்....!

தலையை காட்டிவிட்டு வரணும்....!

இது உறவினர் மற்றும் நண்பர்களை காண அவர்களது இல்லத்திற்கு அல்லது வீட்டு விசேசங்களில் கலந்து கொண்டதாக சென்று வருவதைக் குறிக்கும் எங்களூர் கோட்டாற்றில் புழங்கும் 'வட்டாரசொல்'.

தலையை காட்டிவிட்டு வருவதற்கும் சென்று இருந்து அளவளாவி மகிழ்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நாகரீக யுகத்தின் அதிவிரைவு உலகில் அவசர கதியில் தலைகாட்டுவதே பெரும் சிரமமாகத்தான் இருக்கிறது.


நீங்கள் சொல்வது கேட்கிறது ....
IMO விலும் SKYPE யிலும் தானே இப்போது எல்லாமே நடக்கிறது!

தொழில்நுட்ப வளர்சியை உபயோகிப்பது மிகவும் நல்லது அது அவதிப்படுத்தாமல் வளர்ச்சியைத் தருமென்றால் ஆதாயமே இல்லாமல் எதுவும் எப்போதும் கொடுக்கப் படுவதில்லை. வைபய் இலவசமாக கிடைக்கிறது என்பதால் எதையும் பார்க்கலாமா? கவனம் தேவை.

எண்ணங்களை பரிமாறுதலும் விருந்து உபசாரங்களை பரிமாறிக் கொள்வதும் உறவுகளை மேலும் உறுதிப்படுத்த உதவும். உறவுகளின் தொடக்கத்தையும் வளர்ந்த விதத்தையும் நமது இளையோர்க்கும் அறியச் செய்வது மிகவும் முக்கியம்.

கூட்டுக்குடும்ப கட்டுக்கோப்பு குலைந்துவரும் தற்கால சமூகத்தில் நெருங்கிய உறவினர்களையே சிறுவயதினருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இது விரும்பத் தக்கதல்ல. இதன் விளைவுகள் வருங்கால சந்ததியினருக்கு குடும்பவேர்கள் தெரியாமல்போக காரணமாகி விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்ப்படுத்தும்.

சிலரிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்கு வேண்டுமானால் தலையை காட்டிவிட்டு வரலாமோ?

தழைத்தோங்கும் உறவுக்கும் நட்புக்கும் தலை காட்டினால் மட்டும் போதாது. ஆற அமர்ந்து, உண்டு உலர்த்தி, உரையாட, உறவாட வேண்டும்.

உறவுகள் மேம்பட வேண்டும்.

எண்ண ஓட்டம் ....!
ராஜா வாவுபிள்ளை

No comments: