Saturday, June 25, 2016
அன்பான பெற்றோர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..
Saif Saif
மகனோ,மகளோ ஆசைப் பட்டு கேட்கிறாங்கன்னு சொல்லி தயவு செய்து மொபைல் போன் வாங்கி கொடுத்து விடாதீர்கள்...
காலையில் எழுந்ததுமே முதல் வேலை அவர்கள் மொபைலில் கண்விழிப்பது தான்..
காலை கடன்களை முடிக்கிறார்களோ,
இல்லையோ போனோடு தனியாக போய் அமர்ந்து விடுகிறார்கள்..
வாட்ஸப் சாட்டிங்,பேஸ்புக்,கேம் என மாறி மாறி போய் கொண்டேயிருக்கிறார்கள்..
வாட்ஸப் சாட்டிங்கில் அவசியமில்லாத சப்பை கேள்விகளை கேட்டு பதில் சொல்கிறார்கள்..அது இரவு எத்தனை மணியாக இருந்தாலும் சரிதான்..
அப்படி லைனில் இருக்கா விட்டால் அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் இமேஜை அது தகர்த்து விடுவதாக கருதுகிறார்கள்..
எல்லா நண்பர்களும் லைனில் இருக்கும் போது தான் மட்டும் இருக்கா விட்டால் நண்பர்கள் மத்தியில் அவர்களுக்கு ஒரு Shame ஆகப் போய் விடுகிறது...
இதில் முக்கியத்துவம் கேமுக்குத் தான்..விளையாட்டை யார் முதலில் முடிப்பது என்பது தான் இவர்களின் போட்டி..ஆனால் இப்போது வந்துள்ள Minitia என்ற கேம் முடியா ஒரு கேம்..
இதனால் இவர்கள் பள்ளியிருந்து வந்தவுடன் சட்டையை கழற்றுகிறார்களோ இல்லையோ போனை கையில் தூக்கி விடுகிறார்கள்...அதன் பிறகு உலகத்தையே மறந்து விடுகிறார்கள்.
இதனால் தொழுகை நேரத்தை மறக்கிறார்கள்..உணவை மறக்கிறார்கள்..படிப்பை மறக்கிறார்கள்..வெளியில் போய் விளையாட மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள்..சில நேரங்களில் வீட்டை கூட மறந்து விடுகிறார்கள்..
இதனால் ஒருவிதமான பதட்ட சூழ்நிலையிலேயே எப்போதும் இருக்கிறார்கள்.
அடிக்கடி கோபப் படுகிறார்கள்..
இரவில் படுக்கையில் கூட மொபைலிலேயே மூழ்கி கிடக்கிறார்கள்..விளக்கை அணைத்த பிறகு மொபைலின் வெளிச்சம் கண்களை எந்த
அளவிற்கு பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்கிறார்களில்லை..
இதனால் அதிகாலையில் கண் விழிப்பது மிகுந்த சிரமமாகிறது..
கையில் மொபைல் இல்லா விட்டால் எதையோ இழந்தது போல் ஆகி விடுகிறார்கள்..ஒரு விதமான போதைக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்..
மேலும் பலர் சிறு வயதிலேயே கண் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்...
எனவே,அருமை பெற்றோர்களே பிள்ளைகள் எவ்வளவு தான் அடம்பிடித்து கேட்டாலும்,அன்பாக கேட்டாலும் பள்ளி பருவத்தில் மொபைல் போனை தயவு செய்து வாங்கி கொடுத்து விடாதீர்கள்..
நமது பிள்ளைகளை
நாமே மொபைலுக்கு அடிமையாக்க வேண்டாம்...அவர்களின் முன்னேற்றத்திற்கு தடை போட வேண்டாம்...
மொபைல் வைத்திருக்கும் தம்பி மார்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்...
உங்களை மொபைல் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை..
தினமும் அரை மணி நேரம் பாருங்கள்..
அதற்காக மற்ற காரியங்களை எல்லாம் அரை மணி நேரம் செய்து விட்டு மொபைலுக்கு முழு நேரத்தையும் ஒதுக்கி விட வேண்டாம் என்று தான் சொல்கிறோம்...
ஒரு சுய கட்டுபாட்டுடன் நீங்கள் இருந்தால் வாழ்க்கையில் உயரவே பறக்கலாம்.எதையும் சாதிக்கலாம்..
வானம் கூட எட்டி விடும் தூரத்தில் தான் இருக்கிறது..
Saif Saif
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment