Wednesday, June 8, 2016

நோன்பின் மாண்பு - சில குறள்கள்

Fakhrudeen Ibnu Hamdun

நோன்பை இறைவனுக்காய் நோற்கும் எவருக்கும்
மாண்பை அடையும் மனம்.

ரமளான் எனுமோர் ரஹமத்தைப் பெற்றார்
அமல்கள் சிறப்ப(து) அறிவு.

வானிற் பிறையாய் உதித்த ரமளானை
வீணிற் கழிப்ப(து) இழிவு.

வல்லோன் வழங்கிய வாய்ப்பாம் ரமளானை
நல்லோரே பேணுவர் நம்பு.


புலன்கள் அடக்கும் பயிற்சிகள் தந்து
நலம்பல செய்வதாம் நோன்பு.

மாதம் இதனில் முழுமைப் பயிற்சியில்
மீதமுள்ள காலமும் மீட்பு.

பொய்யும் புறமுமாய் பேச்சிருப்பின், நோன்பென்று
மெய்வருந்தச் செய்வது வீண்.

ஆயிரம் மாதபலன் அற்புத ஓரிரவில்
தூயநன் நோன்பிலே துய்ப்பு.

ஈகைப் பரிசை இறையிடமே பெற்றிடவே
வாகை ரமளானில் வாய்ப்பு.

இறைவனின் பார்வையில் யாவுமே 'உள்'ளில்
நிறைவாய் உரைத்திடும் நோன்பு

சத்தியமார்க்கம்.காம். www.satyamargam.com ,  ஊர்சார்ந்த Mypno.com தளங்களில் ஆறேழு வருடங்களுக்கு முன்பு வெளியான இவ்வாக்கத்தை கணக்கற்றோர் மறுபதிப்பு செய்துள்ளனர் என்று கூகுள் சொல்கிறது.


Fakhrudeen Ibnu Hamdun


No comments: