Friday, June 17, 2016

புத்திசாலித்தனம்....!

புத்திசாலித்தனத்தை பொதுவாக புத்தகத்தைப் பாராமல் படித்து அதிக மதிப்பெண் வாங்குவதையும் ஆக்கிலம் பேசத் தெரிந்து இருப்பதுமே என்றே பலரும் எண்ணுகிறோம்.
மனப் பாடம் செய்வதற்கு புத்திசாலித்தனம் வேண்டியதில்லை.
புத்திசாலித்தனம் எனபது திறமை சார்ந்த செயல்படு திறன் என்று சொல்லலாம்.
சிந்தித்து ஆராய்ந்து சிறந்த முடிவை துரிதமாக எடுத்து செயல்படுத்தி அதில் வெற்றி பெறுவதையும் புத்திசாலித்தனம் எனலாம்.

சிக்கலான சூழ்னிலையில் கவனம் சிதறாது அதிலிருந்து வெளிவருவது ம் புத்திசாலி தனங்களில் ஓன்று.
உயினங்கள் அனைத்திற்குமே புத்திசாலித்தனம் இயற்கையிலேயே இருக்கிறது. மனிதனுக்கு மற்றெல்லா உயிரினங்களையும் விட அதிகமாக இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது.
செயற்கைப் புத்திசாலித்தனமும் உண்டு. அது மனிதனால் இயந்திரங்களுக்கும் கணினி சம்பந்தப்பட்ட மென்பொருள் செயல்பாட்டில் உபயோகப் படுத்தப் படுகிறது.
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலிகளா?
எதில்
எப்படி
எப்போது
எவ்வாறு வெற்றி பெறவேண்டும் என்பதை சரியாகக் கணிப்பதே புத்திசாலித்தனம்.
எண்ண ஓட்டம் ....!
தொடரலாம்.

ராஜா வாவுபிள்ளை

No comments: