Monday, April 18, 2016

கிப்ரானின் அமர காவியமான முறிந்த சிறகுகள் (the broken wings)


நிஷா மன்சூர்

கிப்ரானின் அமர காவியமான முறிந்த சிறகுகள் (the broken wings) நூலில் தன் காதலி 'செல்மா கராமி'யை இப்படி வர்ணிக்கிறார்....
"செல்மா கராமியிடம் உடல் அழகும் ஆத்ம அழகும் இருந்தது.
ஆனால் அவளை அறிந்தேயிராத ஒருவருக்கு அவளை நான் எப்படி வர்ணிப்பேன்..?
செல்மாவின் அழகு அவளுடைய பொன் கூந்தலில் இல்லை.
ஆனால் அதனைச் சூழ்ந்திருக்கும் தூய்மையில் இருந்தது.
அவளின் நீண்ட கண்களில் இல்லை.

ஆனால் அவற்றிலிருந்து வீசிய ஒளியில் இருந்தது.
அவளின் சிவந்த உதடுகளில் இல்லை.
ஆனால் அவளது வார்த்தைகளின் இனிமையில் இருந்தது.
அவளின் தந்தக் கழுத்தில் இல்லை.
ஆனால் அது சற்றே முன்னால் சாய்ந்திருப்பதில் இருந்தது.
அது அவளின் நேர்த்தியான உருவத்தில் இல்லை.
ஆனால் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் எரியுமொரு வெள்ளைத் தீப்பந்தம் போன்ற அவளது ஆன்மாவின் மேன்மையில் இருந்தது அது..!!



நிஷா மன்சூர்

No comments: