Monday, April 18, 2016

நாகை தொழிலதிபருக்குச் சிங்கப்பூர் விருது!

சிங்கப்பூர்: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் தொழிலதிபர் சலாஹுத்தீன் சிங்கப்பூர் வர்த்தகத் துறையால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களித்து வரும் உள்ளூர் இந்தியர்களுக்கு சிங்கப்பூர் வர்த்தக தொழில் துறை விருதுகள் வழங்கி கவுரவித்தது.

ஆண்டுக்கு ஒரு மில்லியன் சிங்கப்பூர் வெள்ளிகள் வருவாய் ஈட்டிய, சுமார் ஐந்தாண்டுகளாக நன்மதிப்பைப் பெற்றுள்ள நூறுக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், பொது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.


இவர்களில் சிங்கப்பூரில் 'ஆல்ஃபா டிரேடிங்' என்ற பெயரில் நடத்திவரும் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர் சலாஹுத்தீனுக்கு விருது வழங்கப்பட்டது. இவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். சென்னை புதுக்கல்லூரியில் வணிகவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

இணையம் மற்றும் வலைப்பூக்களில் பொருளியல் மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். நம் இந்நேரம்.காம் தளத்தில் 'பணம் வந்த கதை' என்ற பொருளியல் கட்டுரை தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments: