Friday, April 22, 2016

நமது மேதகு அரசியல் தலைவர்கள்


Vavar F Habibullah


நமது மேதகு அரசியல் தலைவர்கள்
நாடு போற்றும் நமது இந்திய திருநாட்டின்
உத்தம தேசத்தலைவர்களை அல்லது அரசியல் தலைவர்களை இந்தியா சுதந்திரம் பெற்ற நேரம்..........
இங்கிலாந்தின், அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தரக்குறைவாக பேசினார் என்ற செய்தி, உலகெங்கும் உள்ள பத்திரிகையாளர்களின், அரசியல் ஆய்வாளர்களின், அரசியல் விமர்சகர்களின், சரித்திர பேராசிரியர்களின் பெரும் விவாதங்களுக்கும்,
சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உட்பட்டு போன ஒரு சரித்திர சம்பவம் ஆகும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் ஆன பின்னரும் இது குறித்த விவாதம் இன்றும் தொடர்கிறது.இந்த கருத்தை வெட்டியும், ஒட்டியும் ஏராளமான கருத்துரைகள் பதிவுகளாகி இன்றும் தொடர்கின்றன.இந்த கருத்தை சர்ச்சில் இந்தியா சுதந்திரம் பெற்ற போது கூறினாரா அல்லது இங்கிலாந்தின் 'ஹவுஸ் ஆப் காமன்ஸ்' அவையில், உரை நிகழ்த்தும் போது வெளியிட்டாரா என்பதிலும் வரலாற்று ஆசிரிரியர்கள் வேறுபடுகிறார்கள். காரணம் இந்திய சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டவர் புதிய பிரதமர் அட்லி ஆவார்.

நமது கண்ணியத்திற்குரிய இந்திய அரசியல் தலைவர்களைப் பற்றி சர்.வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய காட்டமான விமர்சனம் தான் என்ன? தாறுமாறாக அவர் உதிர்த்த வார்த் தைகள் தான் என்ன?...
" அதிகாரம் இனி பொறுக்கிகள், நேர்மையற்றவர்கள் மற்றும் திருடர்கள் கைகளில் போய் சேரும். எல்லா இந்திய அரசியல் தலைவர்களும் தாழ்ந்தவர்கள் மற்றும் தரம் குறைந்த மனிதர்கள். நாவில் இனிப்பையும், இதயத்தில் விஷமத்தையும் கொண்டவர்கள். அதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவர்.இந்த அரசியல் குழப்பங்களில் இந்தியா தன்னை இழந்து விடும். ஒரு நாள் வரும் அப்போது, இந்தியாவில் பருகும் நீருக்கும், சுவாசிக்கும் காற்றுக்கும் கூட வரி வசூலிப்பார்கள்"
இந்தியா குறித்த சர்ச்சிலின் கருத்துக்களில் அதிக உண்மைகள் புதைந்து கிடப்பதாகவே சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
சர்ச்சில் - அவர் காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் குறித்துத் தான் இந்த கருத்துக்களை வெளியிட்டிருப்பார் என்று கருதுவோ ரும் உண்டு.
நல்ல வேளை சர்ச்சில் இப்போது உயிரோடு இல்லை, இருந்தால் நம் தமிழ்நாடு குறித்து
அவர் என்ன கருத்துக்களை வெளியிட்டிருப்பார் என்பதை எண்ணிப் பார்க்க இயலவில்லை.
வின்ஸ்டன் சர்ச்சில் இன்னொருகருத்தையும் முன் வைத்தார்.அதாவது இந்தியர்களுக்கு ஆளும் தகுதி இல்லை என்பதே அது. அதுவும் அன்றைய நாள் காங்கிரஸ் ஆட்சியை குறி வைத்து கூறப்பட்ட விமர்சனம் இது என்றே ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
"Indians are not fit to rule
They are fit to be ruled. "
Sir . Winston Churchill
நம் தாய் தமிழகத்தில், தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்களாக வேடம் பூண்டு
ஜொலிக்கும் சினிமா நட்சத்திர கண்காட்சிகளை நினைத்தால் சர்ச்சிலின் கூற்று உண்மையாகவே இருக்கும் என்பது நிரூபணம் ஆகிறது.


Vavar F Habibullah

No comments: