Monday, April 11, 2016

அயல்நாட்டு அகதிகள்

Malikka Farook


தாய்நாடு தன்வீடு
தன்மக்களென இருந்தும் துறந்த
அனாதைகள் - இவர்கள் 
அயல்தேசம்தேடிப்போன
அடிமாட்டு அகதிகள்...
ஒற்றை அறையில்
ஓரடிக்கு ஈரடிநெருக்கி
ஒண்டுகுடித்தனங்கள் நடத்தும்
தாமரையிலைகள்...
கந்தலும் கம்பையும் 
காந்தலும் கடும்வாடையுடனும்
அரக்கபறக்க 
ஆறியாரா ஆகாரமுண்டு வாழும்
அன்றாடாங்காய்சிகள்...

நல்லதுகெட்டதுயெல்லாம்
நாளுசுவதுக்குள்ளே
விக்கலும் முனங்களுக்லெல்லாம்
சொல்வதற்கு வார்த்தையில்லை...
கக்கூசுகள்கூட குளு குளுக்கும்
இவர்கள் வாழும் நாட்டில்
ஆனாலேனோ
கட்டிலுமெரிந்து அனல்கூட்டும் 
அங்கு இவர்கள் தங்குமறையில்...
ஈக்கள்கூட எட்டிபார்க்காது
இவர்கள் பணிபுரியுமிடத்தில்
ஆனாலிவர்களின் தங்குமிடத்தில்
மூட்டைப்பூச்சியோ ஓயாதுகடிக்கும் மூலைமுடுக்கில்...
துறவறம் பூண்டவர்களின் 
தூரதேசத்து தோழமைகளே
இவர்களின் 
துக்கங்களின் வடிகால்கள்- சிலநேர
துன்பங்களின் இடர்பாடுகள்...
வறுமையின் துயர்நீக்க
வழிபோக்கர்களாய்
வளைகுடாக்களில்
பஞ்சம் பசி தீர்க்க 
பலிகடாக்களாய்
பாலை தேசங்களில்...
வலுவிழக்கும் இவர்களின் 
இளமையின் வேர்களை
அலைபேசிகளின் வழியே
வலுவூட்டிக்கொள்கிறார்கள்
அன்பை பரிமாறுவதாயெண்ணி
அவதியுருகிறார்கள்..
அகதிகளின் முகாம்களில்
ஆயிரமாயிரம் சோகங்களும் 
துக்கங்களும் கொட்டிகிடக்கும் 
அள்ள நாதியின்றி..
ஆயினும் மனமுகங்களில்
ஆசைகளும் கனவுகளும்
தேங்கிக்கிடக்கும்
சொல்ல வழிகயிளின்றி...


Malikka Farook

No comments: