Tuesday, December 2, 2014

விநோதமான ஒப்பந்தம் -ரஃபீக்


அ. கீழே சொல்லப்பட்டவைகளுக்கு நீங்கள் உறுதியேற்க வேண்டும்

    என்னுடைய உடைகள் நல்லமுறையில் சலவை செய்து அடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
    என்னுடைய அறையில் 3 வேளைகளுக்கான உணவு பரிமாறப்பட வேண்டும்.
    என்னுடைய படுக்கையறை மற்றும் படிக்கும் அறை தூய்மையாக பராமரித்தல் வேண்டும். குறிப்பாக என்னுடைய மேசை என் பயன்பாட்டிற்குத் தவிர வேறொரு பணிக்குமில்லை.
       ஆ.    சமூகத்திற்கு அவசியமற்றதாய் கருதப்படும் எந்தவொரு தனிப்பட்ட                           உறவுகளையும் என்னிடமிருந்து நீ விலக்கிக்கொள்ள வேண்டும்.

       இ.     என்னுடனான உறவைப் பேண கீழ்கண்ட விதிகளுக்குட்பட வேண்டும்.

    என்னுடன் எந்தவொரு நெருக்கமான உறவையோ அல்லது அதற்கான எந்தவொரு நிர்பந்திக்கும் முயற்சியிலோ ஈடுபடக்கூடாது.
    நான் எப்பொழுது கேட்டுக்கொள்ளும் போது என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
    நான் எப்பொழுது கேட்டுக்கொள்ளும்போது எந்தவொரு எதிர்ப்புமின்றி என்னுடைய படுக்கையறை அல்லது படிக்கும் அறையிலிருந்து உடனே வெளியேற வேண்டும்.

              ஈ.     எந்தவொரு காரணத்தைக் கொண்டும், நம்பிள்ளைகளின் முன்பாக  என்னை சிறுமைப்படுத்தும் வார்த்தைகளையோ அல்லது செயல்களையும் ஒருபோது செய்துவிடக்கூடாது.

இன்று இப்படியொரு நிபந்தனையுடன் கூடிய ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்ய ஒரு பெண்ணை அணுகினால் என்ன நடக்கும்??  ( கேட்குது.............கேட்குது...!!!!)நம்புங்க, இந்த ஒப்பந்தம், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்டது.அவரால் கர்ப்பமுற்ற பௌதீக மாணவி மிலெவா மாரிக் ஐன்ஸ்டீனை திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் எழுந்தது. குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க வேண்டுமே அதனால் இந்த நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தம் அவரால் வரையப்பட்டது.

உண்மைதான், மிலெவா ஏற்றுக்கொண்டார். இந்த கட்டளைகளை பேணுவதற்கு கைமாறாக, ஒரு அந்நியப் பெண்ணுடன் எந்த வகையில் கண்ணியமுடன் நடந்து கொள்ள வேண்டுமோ அந்த அளவுக்கு உறுதியாய் நடந்துகொள்வேன் என்று உறுதியளித்தார் ஐன்ஸ்டீன்.அடுத்த சிலமாதங்களிலேயே 1919ம் ஆண்டில் ஐன்ஸ்டீனிடமிருந்து விவாகரத்துப் பெற்று விலகிவிட்டார் மிலெவா.ஏற்கனவே இதுபோன்றொரு ஒப்பந்தத்தில் வாழ்ந்த அவருக்கு இது பெரிதாய் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.உறவுகள் தொடர்கதை!

Rafeeq Friend

No comments: