Friday, December 12, 2014

மீத்தேன் பற்றிய ஒரு விழிப்புணர்வு

பூமிக்கு அடியில்... ஆழக்குடைந்து கொண்டு போய்... அடிப்பாறையை வெடிவைத்து உடைத்து அதில் உள்ள ‪#‎மீத்தேன்‬ போன்ற இன்ன பிற இயற்கை எரிவாயுவை எல்லாம், அடியில் மட்டும் துளைகள் இடப்பட்ட பைப் லைன் மூலம் பூமிக்கு வெளியே கடும் அழுத்தத்துடன் வெளிக்கொண்டு வரும் முறைக்கு பெயர்... ‪#‎FRACKING‬. ‬.

மெத்தப்படித்த உலக நாடுகள் அனைத்துமே இதனை எதிர்க்க காரணம் என்ன..?

பாறையை வெடிக்க வைக்கும் போது, பாதி எரிவாயு கீழ்நோக்கி வந்து துளையிட்ட பைப் மூலம் வெளியேறினாலும், மீதி எரிவாயு... வெடித்த பாறையின் இடுக்குகளின் வழியே மேல்நோக்கி கசிந்து வந்து நிலத்தடி நன்னீருடனும் அதற்கு மேல் மண்ணுடனும் கலந்து... அந்த மண்ணையே விவசாயத்துக்கு உதவாத நஞ்சாக்கி விடுவதோடு... நிலத்தடி நீரும் குடிக்க முடியாத படி, மாசுபட்டு எரிவாயு கலந்த நீர் என்பதால்... வாயு பிரியும் போது... தானே தீப்பிடித்து அப்பப்ப பற்றி எரியும் 'எரிநீர்' ஆகிவிடுகிறது..!

இணைப்பில் உள்ள எல்லா படங்களையும் பொறுமையாக பாருங்கள். இன்னும் அதிக படங்கள்... கூகுல் இமேஜ் ஜில் "methane fracking" அல்லது "anti-fracking" என்று தேடினால்... நிறைய கிடைக்கும்.
#‎StopMethaneExplorationInKauveriDelta‬




— feeling மீத்தேன் ஃப்ராக்கிங் எதிர்ப்புணர்வு குறைவாக உள்ளது நம்மிடம்...

தகவல் தந்தவர்  Mohamed Ashik
*********************************************************

 மீத்தேன் வாயு எடுத்தால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறும்: நம்மாழ்வார் எச்சரிக்கை
தஞ்சாவூர்: ""காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுத்தால் இப்பகுதி முழுவதும் பாலைவனமாக மாறிவிடும்,'' என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
மீத்தேன் வாயு திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, தஞ்சாவூரில் பேரழிப்புக்க எதிரான பேரியக்கம் சார்பில், விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
தமிழ்நாட்டில் முக்கியமான உணவு அரிசி. இந்த அரிசி பெருமளவில் விளையக்கூடிய பகுதி காவிரி டெல்டா பகுதிதான். உணவு உத்தரவாதம் குறித்து அரசு மீண்டும், மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறது. அரிசி விளைவிக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குழி தோண்டி தண்ணீரை எடுத்து மீத்தேன் வாயுவை உறிஞ்சுவதுக்கு தனியார் நிறுவனத்துடன் அரசு கையெழுத்திட்டுள்ளது.
இந்த தகவல் காலம் கடந்துதான் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து மன்னார்குடி வரை 690 சதுர கிலோ மீட்டர் பரபரபளவில் மீத்தேன் வாயு உறிஞ்சி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 500 முதல் 1,500 அடி ஆழம் வரை குழிதோண்ட வேண்டும். பூமியில் தண்ணீரையும் காற்றையும் எடுத்தால் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும்.
தமிழகத்துக்கு உணவளிக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டு விடும். இதுகுறித்து யாருக்கும் தெரியாமல் அரசு தனியார் நிறுவனத்துக்கு கையெழுத்திட்டுள்ளது. இது நாட்டை மீண்டும் காலனியாதிக்கத்துக்கு கொண்டு செல்லும் செயல். இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய காலக்கட்டம் இது.
மனிதன் தவறான நடவடிக்கைகளினால்தான் பூமி சூடாகி பேரழிவுகள் நிகழ்கின்றன. வறட்சி நிலவுவதுக்கும் அதுதான் காரணம். "சோழ மண்டலம் நெல் களஞ்சியம்' என பெயர் பெற்றது.
இந்த நிலத்தில் தண்ணீரை எடுத்து மீத்தேன் வாயுவை உறிஞ்சினால் சோழ மண்டலம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும். இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அனாதைகளாகப்படுவர்.
ஏற்கனவே, டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீரில் கடல் நீர் கலந்து விட்டது. மீத்தேன் வாயு எடுக்கப்பட்டால் நிலத்தடிநீர் மேலும் உப்பாகி, உப்பளமாக மாறிவிடும்.
எனவே, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க இயந்திரங்களுடன் குழி தோண்ட வந்தால் அதை தமிழ்நாடு முழுவதும் மக்கள் திரண்டு முற்றுகையிட வேண்டும். இதுதொடர்பாக மூன்று மாவட்டங்களிலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு நம்மாழ்வார் பேசினார்.

நன்றி dinamalar

 Thanjavur - மீத்தேன் வாயு எடுத்தால் ...
 ********************************************
 பைப்லைன் மூலம் வெளியெடுக்கப்படும் மீத்தேனின் வாயுவின் அளவில் 3 சதவிகிதம் கசிந்து காற்று மண்டலத்தில் கலப்பதற்கான வாய்ப்பு ஒரு கிணற்றில் இருந்து உறிஞ்சப்படுவதில் உள்ளது. இதனால் மண்டலத்தில் உள்ள தற்பொழுதைய மீத்தேன் அளவு 0.00018 சதவிகிதம் இருந்து வெகுவாக உயர்ந்து சுவாசக் காற்றும் நச்சுக்காற்றாய் மாறும். இந்த அபாயங்களெல்லாம் பாதுகாப்பான முறையில் உறிஞ்சி எடுப்பதால் தவிர்க்கப்படலாம் என்ற வாதங்கள் வைக்கப்பட்டாலும் நம்பிக்கையே இல்லை. காரணம் கார்ப்பரேட்டின் கைப்பிடிகளான அரசியல் அமைச்சர்களும், தளபதிகளும் அடிக்க இருக்கும் கோடிகளுக்காக மக்களின் வாழ்வாதாரங்களோடு விளையாடும் நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி இன்னும் கிடைத்தபாடில்லை.

ஓரிரு வாரங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் ஒரு வீடியோ காணக்கிடைத்ததது. கண்டதும் அதிர்ச்சியாகவே இருந்தது. நீங்களும் அதிர்வதற்காக கீழே லிங்க்கை தந்துள்ளேன்.

Light Your Water On Fire from Gas Drilling, Frack…:
http://youtu.be/4LBjSXWQRV8
 Fracking என்பது ஒரு பாதுகாப்பான மீத்தேன் இயற்கை வாயுக்களை உறிஞ்சும் ஒரு பாதுகாப்பான முறை என்று விலைபோன அறிவியல் அறிஞர்களால் சான்று கொடுக்கப்பட்டாலும் இதை எதிர்ப்பவர்களை இதற்கு பின்புலத்தில் உள்ள அரசியல் காரணங்களோடு தொடர்புபடுத்தி வாதிட்டாலும் குடிதண்ணீர் எப்படிப்பா எரியும் என்று கேட்டால் மலுப்பலே பதில். 😟

இவைகள் அனைத்தும் நமக்கு முன்னால் இம்மாபாதக திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீருக்கு பிறகு நாம் தெரிந்து கொண்டவை. ஆனால் இவைகளை விட பல மடங்கு பாதிப்பிற்குள்ளாக இருப்பவர்கள் தான் காவிரிப்படுகையின் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் நாம். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எதிர்காலத்தில் காவிரி நீர் ஓடினாலும் பயிர்கள் விளையா பாலைவனமாகப் போகும் அபாயம்.

கருத்துரை தகவல் Fouzul Ameen
காவிரிப்படுகையில் மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ...
 மீத்தேன் அரக்கன்! - ஆனந்த விகடன் ...
 https://www.facebook.com/

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!