Thursday, December 18, 2014

மறந்து விட்டீர்களே ..!

வாணவேடிக்கை பார்த்த எங்களுக்கு
வாழ்க்கையே வேடிக்கை ஆகி விடும்
என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே ....!

மத்தாப்பு வெடியில் கூட பாசானம் இருப்பதை சொல்ல மறந்து விட்டீர்களே !

பொம்மை துப்பாக்கியில் கூட குண்டுகள் இருப்பதை
சொல்ல மறந்து விட்டீர்களே !

கோலி குண்டு விளையாடும்
எங்களுக்கு நிஜக்குண்டுகளை காட்ட
மறந்து விட்டீர்களே ..!
படிக்கும் இடத்தில் கூட குண்டுகள் வெடிக்கும் என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே ...!

யுனிபாஃர்ம் போட்ட எங்களுக்கு கூடவே புல்லட் புரூஃப் போட மறந்து விட்டீர்களே ...!

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று சொன்ன எங்களிடம்
பள்ளியிலும் சாவுன்னு சொல்ல மறந்து விட்டீர்களே !

வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்த எங்களுக்கு இந்த பாவிகளை சொல்ல மறந்து விட்டீர்களே ...!

இப்படி எல்லாம் சொல்ல மறந்ததினால்
எங்களிடம் மறைத்ததினால்
உங்களை நாங்கள் மறந்து விட்டோம் ..!

‪#‎உரியவனிடம்‬ போய் சொல்லுவோம் ...!
அவனிடமே நாங்கள் துயில் கொள்ளுவோம்...!!
 Saif Saif‎அபு ஹாஷிமாவின் புகைப்பட அரங்கு
  Saif Saif and Ubaithulla Ubaith posted in அபு ஹாஷிமாவின் புகைப்பட அரங்கு.

No comments: