பிறந்தநாளும் கொண்டாட்டங்களும் பின்னே நானும்..!!
-நிஷா மன்சூர்
பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் கொண்டவன் அல்ல நான்.என் பிறந்ததினம் என்பது ஆவணங்களில் புழங்கப்படும்
எண்கள் மட்டுமே.
வறுமை நெரித்த பால்யத்தில்
ஏன்தான் பிறந்தோமோ என்று வருந்தியதுணடு.
பின்பு 90களில் எழுத ஆரம்பித்தபோது பேனா நண்பர்கள் பலரும்
பிறந்ததேதி பகிர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதுண்டு
இடையில் வாழ்வின் மேடுபள்ளங்களில்
எல்லாம் மறைந்துபோயின
குடும்பம் குழந்தைகள் என்றானபின்
சில புன்னகைகளுடனும் மெல்லிய
வாழ்த்துக்களும் வருடிப்போயின

.jpg)






