Tuesday, August 12, 2014

மதம் / மார்க்கம்

மதம் தவறான வார்த்தை அல்ல
மதம் என்ற வார்த்தை அதனோடு இணையும் வார்த்தையைப் பொறுத்து பல பொருளைத் தரலாம்
மதம் என்றால் மார்க்கம் என்று பொருளும் கொள்ளலாம்
மதங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலானவை.
நம்பிக்கை இல்லை என்றால் மதத்தில் பிடிப்பு இல்லை
நம்பிக்கைகள் அறிந்து வாழும் முறைக்கு நேர் எதிரானதாகவும் அமையும்
மதமே மனிதனுக்கு இறுதி அடைக்கலம்
மதம் ஒரு மனிதனுக்கு வழிகாட்டி ,ஏணி
மதம் கெடுதல் செய்வதை தடுக்கும் வேலி

இதுதான் இஸ்லாம்

ஓ.... மன்னா!

நாங்கள்
அறியாமையிலும்
ஒழுக்கக் கேட்டிலும்
மூழ்கிக் கிடந்தோம்

சிலைகளை
வணங்கிக் கொண்டும்
செத்தவைகளைப்
புசித்துக் கொண்டும்
வாழ்ந்திருந்தோம்

அப்பாவின் நினைவாக....

அந்த இரவில் என்னால் தூங்கவே முடியவில்லை.

எப்போதும் என்மீது செல்லமாகவே இருக்கும் அப்பாவின் கையால் அடிவாங்கிய இரவு அது. அடித்தது வலிக்கவில்லை. அடித்து விட்டாரே எனும் எண்ணம் தான் வலித்துக் கொண்டிருந்தது.

எனக்கு அப்போது ஐந்து வயதோ, ஆறு வயதோ இருக்கலாம். ஒழுங்காக டவுசர் உடுக்கத் தெரியாத வயது. ஆனாலும் அந்த வலியை மனதுக்குள் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகும் மீண்டெடுக்க முடிகிறது.

தூங்காமல் கண்ணை மூடியபடி படுத்துக் கிடந்த எனக்குள் சின்ன வயது சிந்தனைகள் நிரம்பின. “அப்பாவுக்கு என் மேல பாசமே இல்லை. இல்லேன்னா இப்படி அடிச்சிருப்பாரா?” என்பதே எனது மனசில் எழுந்து கொண்டிருந்த ஒரே கேள்வியாய் இருந்தது. அந்தக் கேள்வி எனக்குள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்ததால் என்னால் தூங்கமுடியவில்லை.

Sunday, August 10, 2014

உங்களால் கட்டவும் ,இடிக்கவும் முடியும்! பழைமையின் தனித்தன்மையை கொண்டு வர முடியாது.

உங்களால் அழகிய அரண்மனையை கட்ட முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தர முடியும்
உங்களால் அழகிய அரண்மனையை இடித்துத் தள்ளவும் முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தகர்த்துத் தள்ளவும் முடியும்

உங்களால் இங்கும் அங்கும் கட்டடங்கள் கட்ட முடிந்தாலும்
உங்களால் இங்கும் அங்கும் ஆட்சியை அமைக்க முடிந்தாலும்

உங்களால் கட்டப்பட்ட கட்டிடங்களிலும்
உங்களால் உருவாக்கப் பட்ட ஆட்சிகளிலும்
உங்களால் பழமையின் தனித்தன்மையை
உங்களால் ஒருபோதும் கொண்டு வர முடியாது

Saturday, August 9, 2014

நட்வர் சிங் உண்மைகளின் பலம் என்ன?




”இந்தியாவுக்கு என்று தனி பாரம்பரியம் உண்டு. நம்முடைய பண்பாடு, கலாசாரம், மதிப்பீடுகள் உன்னதமானவை. ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் பிறந்து வளர்ந்த எவரும் வயதில் பெரியவர்களை அவமானப்படுத்த மாட்டார்கள். உதவி செய்தவர்களை எட்டி உதைக்க மாட்டார்கள். நெருக்கடியில் கூட இருந்தவர்களை ஒதுக்கி வைக்க மாட்டார்கள்.


”ஆனால் சோனியா காந்தி இது அனைத்தையும் செய்தார். இந்தியாவுக்கு வந்து இங்கே குடியேறி, மிக உயர்ந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினராக 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பிறகும்கூட எந்த ஒரு இந்திய பெண்ணும் செய்ய துணியாத காரியங்களை அவர் செய்தார். இதற்கு காரணம், அவர் இன்னமும் உண்மையில் ஓர் இந்தியனாக மாறவில்லை என்பதாகவே இருக்க முடியும்”.

இப்படி சொல்லி இருக்கிறார் நட்வர் சிங். முன்னாள் அதிகாரி. அரசியல்வாதி. அமைச்சர். 40 ஆண்டுகளாக நேரு குடும்பத்தின் விசுவாசியாக தன்னை காட்டிக் கொண்டதில் பெருமை அடைந்தவர். ஒரு ஜென்ம்ம் போதாது என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்கள் என்று பல விஷயங்களை அள்ளி தெளித்து இருக்கிறார்.

Friday, August 8, 2014

முதுமை தீபத்தின் கால்களில்


முதுமையின்
ஓய்வுப் படுக்கையை...
குழந்தையாகவே ஆகிப்போகும்
இயற்கை மாற்றத்தை...
மரணப்படுக்கையாக
மாற்றிக் கண்டு
பதறுகிறது
பாசம்

அது
பாசத்தின் இயல்புதான்
பிழையில்லை என்றாலும்...

Thursday, August 7, 2014

உலக முஸ்லீம் விஞ்ஞானிகளில் சிலர் / Muslim scientists of the world

 இஸ்லாமியர்களில் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்காதவை
கி .பி. 700 முதல்1200 வரை இஸ்லாமியர்களின் கண்டுபிடிப்புகள் ஏராளம் .
முஸ்லிம்கள் கண்டுபிடிப்புகளில் ஒன்று கூட மக்களை அழிக்கக் கூடிய கண்டுபிடிப்புகளாக இருந்ததில்லை.
 முஸ்லிம்கள் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும்  பல்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்புகளை உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தந்துள்ளார்கள் .அவர்கள்  விஞ்ஞானத்திலும் சிறந்த சேவை செய்துள்ளார்கள்.
அந்த விஞ்ஞானிகள் மார்க்க பற்றிலும் தங்களை உட்படுத்திக் கொண்டு சிறந்த சேவை செய்துள்ளார்கள்.
அவர்களது உடுத்தும் உடைகள் மற்றும் வாழ்வின் நெறி முறைகள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையிலேயே இருக்கும்.
----------------------------------
அறிவு சார்ந்த சமுதாயமே இனி வரும் காலங்களில் அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் காண முடியும் அதிகாரமும் அவர்கள் கையில் நிற்கும் .

தேவையான கல்வி இல்லாமையும அதனை முறையாக பயன் படுத்தாமையும்தான் பின்தங்கிய நிலையில் நம்மை நிறுத்தி வைகின்றது .அதிலும் ஒற்றுமை அற்ற குணம் மேலோங்கி நிற்கின்றது இது இஸ்லாத்திற்கு உடன்பாடானதல்ல

நாம் அனைவரும் அல்லாஹ்விடம் எங்கள் தோல்விக்கு நாங்களே வழி வகுத்துக் கொண்டோம் . இறைவா ! நீ அனைத்து வளங்களையும் தந்தாய் நாங்கள்தான் அதனை முறையாகப் பயன்படுத்தவில்லை என மன்றாடி மன்னிப்பு கேட்டு இனியாவது நாங்கள் நீ கொடுத்த அறிவை விசாலமாக்கி அந்த அறிவைக் கொண்டு உன்னை தொழுவதோடு உன்னால் கொடுக்கப்பட்டதனை முறையாகப் பயன் படுத்தி இன்ஷா அல்லாஹ் ஆற்றல் மிக்க முஸ்லிம்களாக இருக்கின்றோம் அதற்க்கு நீயே துணை நின்று அருள்வாயாக! ஆமீன் 
--------------------------------

அன்புடன் ,
முகம்மது அலி ஜின்னா