வாழ்த்துகள் to நஃபீலா- Nafilah
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts
Monday, October 20, 2014
Wednesday, January 29, 2014
Two Hundred 200 Videos காணொளிகள் (English/தமிழ்)..!
| Doha | View | |||
| Makkah Metro | View | |||
| ASSALAMUALAIKUM =Peace Be Upon You | View | |||
| "How can you Deny?".. | View | |||
| Sami Yusuf - Healing | View | |||
| ஆப்கானிஸ்தான் அலைக்கழிக்கப்படும் நிலை | View | |||
| பார்க்க வேண்டிய "ஆசை " | View | |||
| ஒரு நிமிட உயர்ந்த படம் காட்டும் பாதை ! | View | |||
| எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் | View | |||
| surah yaseen full | View | |||
| The story of Mary and the birth of Jesus in Islam | View | |||
| Preventing Arthritis Pain | View | |||
| Misconceptions about Islam | View | |||
| நல்ல நாள் : கெட்ட நாள் நாள் உண்டா? | View | |||
| Surah (Chapter) 19 Maryam (Mary) Ayat (verses) 16 to 33 - about Mary (Maryam) and Jesus ('Isa) | View | |||
| உறக்கம் / தூக்கம் | View | |||
| the best film or movie I have seen in my life | View | |||
| British Boy Became Father at the age of 13 Amazing | View | |||
| How To Start a Blog - Wordpress | View | |||
| Blogger: How to start a blog | View | |||
| How to post to your blog from your mobile phone | View | |||
| உலகம் இறைவனின் சந்தை மடம்--- E M ஹனிபா | View | |||
| Hui Muslim Wedding (穆斯林的婚礼) [English Sound Track] | View | |||
| The Grand Mosque of Xian | View | |||
| AR Rahman Performance - The Nobel Peace Prize Concert 2010 | View | |||
| Video Encyclopedia of Kazakhstan (MUST SEE) | View | |||
| Urinary Tract Infection | View | |||
| ayat kursi ஆயத்துல் குர்ஸி . | View | |||
Sunday, March 25, 2012
இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர்?
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார். இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.
Source : http://onlyoneummah.blogspot.in/\
I read the Holy Quran everyday: Tony Blair
LONDON: In a startling revelation during an interview to The Observer magazine, the former British Prime Minister Tony Blair confessed to reading the Holy Quran, the holy scripture for the 1.5 billion global Muslim population, as reported by the Daily Mail.Blair, who was famously reluctant to discuss his faith during his time in office, converted to Catholicism months after leaving 10 Downing Street in 2007, and set up the ‘Tony Blair Faith Foundation’, to promote respect and understanding between the major religions.
Please click Read more I read the Holy Quran everyday: Tony Blair
Source ; http://tribune.com.pk/story/
Sunday, June 19, 2011
தினமும் தாய் தந்தையர் தினமாக கொண்டாடுவோம் !
தந்தையர் தினம் ஜூன் மாதத்தில் தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். அமெரிக்காவில் தோன்றியது இந்த தந்தையர் தினம்.
தமிழ்நாட்டில் “அப்பா” என்று அன்பாக தனது தந்தையரை அழைப்பார்கள். நல்லவேளை இதற்கென விடுமுறை இருந்து காலத்தினை வீணாக்கவில்லை. தனது தந்தையரை தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் அத்தா என்று அழைப்பார்கள். அத்தா என்பதும் தமிழ் சொல்தான்.

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்
. அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள். பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம். அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும். "அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம். "அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம். -
அன்புடன் புகாரி
அம்மா அப்பா இருவரும் நாம் வர வழி வகுத்தவர்கள் . ஆனால் அம்மாவுக்கு நாம் முதல் இடம் தருவது இயல்பு . காரணம் அவள் பாசத்திற்காக ஏங்குபவள். தகப்பன் கெட்டலைந்து தாய் அவதிகுள்ளாகிய நிலை கண்ட பையன் மனமுருகி தாய் மீது வைத்துள்ள பாசம் அவனை செம்மையாகவும் சிறப்பாகவும் வளர வைக்கின்றது, அதே நேரத்தில் தாய் கெட்டவளாக இருந்துவிட்டால் தகப்பன் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் அந்த குடும்பம் நன்றாக அமையாது. நாம் காட்டும் பாசம், அன்பு,இறக்கம் மற்ற அனைத்தும் தாய் தந்தையர் இருவரிடமும் மேலோங்கி நிற்க விரும்புவோம் . ஆதலால் தாய் தந்தையர் தினத்தினை பிளவுபடுத்தாமல் தினமும் தாய் தந்தையர் தினமாக கொண்டாடுவோம். அவர்களுக்காக எப்பொழுதும் இறைவனிடம் பிரார்த்திப்போம்,நாம் நன்றாக் இருக்க பெற்றோர்களின் பிரார்த்தனையை வேண்டி நிற்போம்
Monday, April 25, 2011
தினம் இரவினில் நாம் தூங்கிடும் நேரம்...
தூக்கம்
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.
1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்”.http://www.islamkalvi.com/
The Prophet also said: ‘When you are about to sleep recite aayat-ul-kursiyy till the end of the verse for there will remain over you a protection from Allaah and no devil will draw near to you until morning.’
பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,
Sunday, October 17, 2010
புனித ஹஜ்ஜின்பிரயாணமும் பயணக் குறிப்புகலும்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
புனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்
தொகுப்பு
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்,
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
லப்பைக்க அல்லாஹ{ம்ம லலப்பைக்க
லப்பைக்க லாஷரீ கலக்க லப்பைக்க
இன்னல் ஹம்த வன்னிஃமத்த
லகவமுல்க லாஷரீகலக்க
தல்பியா
வந்துவிட்டேன் இறiவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை
'தமிழ் மாமணி' நீடூர் அ.மு.சயீத்
'தமிழ் மாமணி' நீடூர் அ.மு.சயீத்
சிந்தனைச் சித்தர், தமிழ்மாமணி நீடூர் அ.மு. சயீத் அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடும் முயற்சியினை நவமணி பதிப்பகத்தின் சார்பில் மயிலாடுதுறை நம்ம ஊரு செய்தி மாத இதழ் ஆசிரியர் முனைவர் அ. அய்யூப் மேற்கொண்டுள்ளார்.அல்ஹாஜ் அ.மு. சியீத் நாடறிந்த எழுத்தாளர். தீந்தமிழ்ப் பேச்சாளர். திக்கெட்டும் புகழ் பரப்பும் வழக்கறிஞர்.
நீடூரில் 09.10.1933 இல் பிறந்த இவர் எழுபதைத் தாண்டிய இளைஞர். நெடுங்கால சமுதாய ஊழியர். நீடூர் நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியின் தலைவராக பல ஆண்டுகள் சேவை செய்தவர். .
சென்னை வானொலியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சுழற்ச் சங்கத்தின் (ரோட்டரி கிளப்) முன்னாள் தலைவர். மயிலாடுதுறை பல்சமய உரையாடல் மையத்தின் இஸ்லாமியப் பிரிவுத் தலைவராக இருந்தவர்
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரான இவர் உலகளாவிய நிலையில் பத்து மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இலங்கை, தெற்கு வியட்நாம், சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர். ஹஜ் கடமையை ஆறு முறையை நிறைவேற்றிய பேறு பெற்றவர்.
தமிழ் மாமணி, சிந்தனைச் சித்தர், சிந்தனைச் செம்மல், பொன்மொழிச் செம்மல், போன்ற சிறப்புப் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
சிந்தனைக் களஞ்சியம், சிந்தனைத் துளிகள், இஸ்லாமியச் சட்டம், சிந்தனைச் செல்வம், புனித ஹஜ் உம்ரா பயணக் குறிப்புகள், பெருமானாரின் புனித ஹஜ் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.
இவரது ஆக்கங்கள் மணிச்சுடர், மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, மனாருல் ஹ�தா, மஞ்சரி, பிறை, சமரசம், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தமிழக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இதழ்களில் வெளிவந்துள்ளன.
Monday, October 11, 2010
பார்க்க பார்க்க பரவசமூட்டும் அழகிய பிரான்ஸ் , பாரிஸ்.
பிரான்ஸ் சென்று வர பணம் அதிகம் தேவை .இருப்பினும் பார்க்க வேண்டிய நாடு. ஆங்கிலம் அறிந்தால் பிரான்ஸ் சுற்றி வர எளிது என்ற எண்ணம் வேண்டாம்.ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். எங்கள் நாட்டுக்கு வருபவர்கள் எங்கள் மொழி அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.பொதுவாக ஐரோப்பாவில் இங்கிலாந்தினை தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பயன்படாது .
உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழுபவர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்துவிடுங்கள் மற்றதனை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்ற பழமொழி உண்டு.அதனால் அந்த நாட்டு பிரஜையாகவும் ஆகி விடலாம் .அல்லது அந்த நாட்டு உரிமை பெற்றவர்களை(பிரஜை) திருமணம் செய்து கொண்டாலும் அது கிடைக்கும்.
பிரான்ஸ் சென்று பார்த்து மகிழந்து வர வாழ்த்துக்கள் அதுவரை இங்கு படம் பார்த்து மகிழுங்கள்

Wednesday, October 6, 2010
குடிநீர் கிணற்றைக் காணவில்லை - உயர் நீதிமன்றத்தில் விநோத வழக்கு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் தனது வக்கீல் ஏ.காஜாமுகைதீன் மூலம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
நிலக்கோட்டை தாலுகா கோம்பைபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னுப்பட்டியில் 39 சென்டு இடத்தில் பொதுகுடிநீர் கிணறு இருந்து வந்தது. இதை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக கிணற்றை மூடிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டி உள்ளனர். அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் அதே நபர்கள் 49 சென்டு வண்டி பாதையாகிய பொது நடைபாதையை ஆக்கிரமிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த சட்டவிரோத செயலை மறைப்பதற்காக, அதிகாரிகள் துணையுடன் வருவாய் ஆவணங்களை திருத்த முயன்று வருகின்றனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பொது குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். பொது குடிநீர் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பொது பாதையை மக்கள் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் பயன்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்று நடித்து இருப்பார். நகைச்சுவைக்காக அந்த காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையிலேயே ஒரு கிராமத்தில் குடிநீர் கிணற்றை காணவில்லை என்றும், அதை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------
காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன்
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்
காதோடு தான் நான் பாடுவேன்...
வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?
காதோடு தான் நான் பாடுவேன்....
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
Hassane Marecan
Sunday, October 3, 2010
டெல்லி காமன்வெல்த் போட்டி: பிரமாண்டமாக தொடங்கியது + காமன்வெல்த் கேம்ஸ் 2010 டெல்லி தீம் சாங் [HD] by A R ரஹ்மான்
அனைத்து மாநில கலைஞர்களும் தங்களது பாரம்பரிய இசைக்கருவியை வாசித்து பார்வையாளர்களை அசத்தினர். கண்கவர் வாண வேடிக்கைக்குப் பிறகு வண்ண விளக்குகளுடன் உலகின் மிகப்பெரிய ஹீலியம் பலூன் பறந்தது. அதில், பல்வேறு விளையாட்டுகளைக் குறிக்கும் வகையிலான உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில், 7 வயது சிறுவன் கேஷவ், மிகச்சிறப்பாக தபேளா வாசித்து அனைவரையும் கவர்ந்தான். விழா ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாகவும் அற்புதமாகவும் உள்ளதாக வெளிநாட்டு விருந்தினர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Source: http://www.inneram.comடெல்லி காமன்வெல்த் போட்டி: பிரமாண்டமாக தொடங்கியது
-------------------------------------------------------------------------------------------------------
Sunday, September 26, 2010
கருக்கலைப்பு + குடும்ப கட்டுப்பாடு (வீடியோ )
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.திருக்குர்ஆன்-17:31
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.
திருக்குர்ஆன்6:140
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம்.பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாகஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
23:14திருக்குர்ஆன்
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்ப டுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
திருக்குர்ஆன்22:5
உயிருக்கு ஆபத்து அல்லது தாயின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் பெரிய தீங்கில் இருந்து தப்பிக்க சிறிய தீங்கைச் செய்யலாம் என்ற அடிப்படையில் அது குற்றமாகாது.
.அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
திருக்குர்ஆன் 4:17,18
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
திருக்குர்ஆன் 39:53
கருக்கலைப்பு--- by நிந்தவூர் ஷிப்லி
ஜனனங்களுக்காய்படைக்கப்பட்ட
கருவறைகள்..
இன்றோ
மரணங்களுக்கான
கல்லறையாய
புதிய பரிமாணம்
உயிரணுக்களின்
உயிர்கள்
அணுவணுவாய்
கொல்லப்படுகிறது
மருத்துவச் சித்ரவதைகளுடன்....
தொப்புள்கொடிகளே
தூக்குக்கயிறுகளாகின்றன
இந்தக்கருக்கலைப்பில்....“
புக்களை தீயிட்டு
எரிப்பதைப்போல”
என்பதை தவிர
வேறெந்த உவமைகளும்
பொருந்தப் போவதில்லை
இந்த அகால மரணங்களுக்கு...
மனிதாபிமானம்
செத்துப்போய்விட்டதை
பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா
சிசுக்கொலைகள்...?
உண்டான பிறகு
சிதைப்பதை விட்டுவிட்டு
உண்டாகும் முன்
சிந்தியுங்கள்
ஏனெனில்நீங்கள்
சிதைப்பது உயிர்களை அல்ல
இவ்வுலகின்
கருக்கலைப்பு
Saturday, September 25, 2010
தமிழ் அல்-குர்ஆன் - 96 சூரத் அல் -`அலக் (The Clot) - (Tamil Quran - 96 Surat Al-`Alaq (The Clot) - سورة العلقسورة العلق
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
அல்-குர்ஆன் 96:2
´அலக்´ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:6
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
96:7
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
96:8
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
96:9
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
96:10
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
96:11
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
96:12
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
96:13
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
96:14
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:15
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
96:16
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
96:17
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96:18
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
96:19
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
Tuesday, August 24, 2010
எபிசோட் 26 - சிட்டி ராப் - துபாய் TV - துபாய் மீடியா - Episode 26 - City Wrap - Dubai TV - Dubai Media
இண்டர்வியு துபாய் டிவி சேனல் . துபாய் .
புனித ரமளான் நோன்பினை தென் இந்திய முஸ்லிம்கள் எவ்விதம்
நோன்பு மாதத்தை கடைபிடித்து வருகிறார்கள். உணவுப் பழக்கம் என்ன
என்பதனை தனது பேட்டியில் கருத்துக்களை சொல்கின்ரார்:.
இதனைக் காண இங்கு கிளிக் செய்யவும் Episode 26 - City Wrap -
Dubai TV - Dubai Media
புனித ரமளான் நோன்பினைப் பற்றி - அமீரா ஜபீன்
பேட்டி - துபாய் டிவி சேனல் . துபாய் .
எபிசோட் 26 - சிட்டி ராப் - துபாய் TV - துபாய் மீடியா -
சீசன்ஸ் நீடூர்,
seasonsali
நீடூர் சீசன்ஸ்
உளமாற வாழ்த்துகிறது
Sunday, August 22, 2010
மதீனா நேரலை - வலைத்தளங்களுக்காக
மதீனா நேரலை - வலைத்தளங்களுக்காக
மதீனா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html scriptயை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
-அதிரைநிருபர் குழு
நன்றி: அப்துல் ரஹ்மான்
http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_2508.html
மதீனா நேரலை
மதீனா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html scriptயை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
உங்கள் வலைத்தளங்களுக்கு தகுந்தது போல் விடியோ அளவை சரிசெய்துக்கொள்ளுங்கள்.
பாவங்களை அள்ளித்தரும் பொழுதுப்போக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த புனித மக்கா, மதீனா நேரலையை கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாமே.
-அதிரைநிருபர் குழு
நன்றி: அப்துல் ரஹ்மான்
http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_2508.html
மக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக
மக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக
மக்கா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html script யை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
மக்கா நேரலை
உங்கள் வலைத்தளங்களுக்கு தகுந்தது போல் விடியோ அளவை சரிசெய்துக்கொள்ளுங்கள்.
பாவங்களை அள்ளித்தரும் பொழுதுப்போக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த புனித மக்கா, மதீனா நேரலையை கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாமே.
http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_4245.html
http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_4245.html
Saturday, August 21, 2010
Friday, August 20, 2010
Friday, August 13, 2010
Friday, August 6, 2010
எங்கம்மாகிட்டே கைக்கூலி (Dowry ) - தமிழ் முஸ்லிம் பாடல் by தேரிழந்தூர் தாஜுத்தீன் + வேண்டாம் வரதட்சணை by இப்னு மர்யம்
எங்கம்மாகிட்டே கைக்கூலி எங்கப்பா வாங்கினாரு
தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய உலக தமிழ் குடும்பம் விரும்பும் வரதட்சணைக்கு எதிரான சிறந்த தமிழ் பாடல்.
நீங்கள் பாடகர் தாஜுத்தீனை பாராட்ட அல்லது விமரிசிக்க விரும்பினால் ISD +971505429422 என்ற கைபேசிக்கு தொடர்பு கொள்ளவும் அல்லது குறுந்தகவல் (SMS) அனுப்பவும்.
வேண்டாம் வரதட்சணை இப்னு மர்யம்
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)
ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.
வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.
தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.
பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.
இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.
ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.
யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.
மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.
திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தமது வீட்டில் தமது உறவினர்களுடன் வழக்கம் போலவே இருந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது தாய், தந்தை, உற்றார், உறவினர், ஊர் அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர். பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருத முடியாது. பெண்களில் இந்த தியாகத்துக்காக ஆண்கள் பெண்களுக்குக் கொடுப்பது தான் நியாயமானது.
பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.
இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள்.
இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாகப் பொவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு மறுஜென்மம் எடுக்கிறாள். செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது.
ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!
கழுவிக்குளிப்பாட்டி சீராட்டி அழகு பார்க்கிறாள்! ஒவ்வொரு பருவத்திலும் குழைந்தைக்காக தன்னையே அர்ப்பணித்து விடுகிறாள்! இதற்காகவும் ஆண்கள் தான் கொடுக்கவேண்டும். இப்படிச் சிந்த்தித்துப் பார்த்தால் இன்னும் பல காரணங்களைக் காணலாம். இதன் காரணமாகத் தான் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணக்கொடையை மனமுவந்து வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.
வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.
தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.
பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.
இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.
ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.
யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.
மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.
திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தமது வீட்டில் தமது உறவினர்களுடன் வழக்கம் போலவே இருந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது தாய், தந்தை, உற்றார், உறவினர், ஊர் அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர். பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருத முடியாது. பெண்களில் இந்த தியாகத்துக்காக ஆண்கள் பெண்களுக்குக் கொடுப்பது தான் நியாயமானது.
பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.
இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள்.
இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாகப் பொவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு மறுஜென்மம் எடுக்கிறாள். செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது.
ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!
மணக் கொடை என்பது நூறோ இருநூறோ வழங்கி ஏமாற்றுவது அல்ல! நமது சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கலாம். ஒரு குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.
பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மண முடிக்க வேண்டிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களிடமே கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரவேண்டும். கொடுக்காமல் இருந்தது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு குற்றங்களைச் சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.
வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்! வல்ல இறைவன் இதற்கு அருள் புரியட்டும்!
நன்றி http://www.readislam.net/dowry.html
Subscribe to:
Posts (Atom)