இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மயிலாடுதுறையில்
முஸ்லிமல்லாத மக்களுக்கான இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் P Jainul Abdeen
Showing posts with label இஸ்லாம் ISLAM. Show all posts
Showing posts with label இஸ்லாம் ISLAM. Show all posts
Wednesday, April 13, 2011
Monday, October 18, 2010
நேரந்தவறாமை
நேரந்தவறாமை
தொழுகையானது (மூமினான) விசுவாசிகள் மீது நேரங்குறிக்கப்பட்ட கடமையாகும்.
நிஸா 103, குர்ஆன்
குறித்த நேரத்தில் தொழுகையைச் சரியாக நிறைவேற்றாதவன், எதையுமே குறித்த நேரத்தில் செய்ய மாட்டான்.
பொன்னுக்கும், மண்ணுக்கும், முத்துக்கும், மணிக்கும் விலையும் பெரிய மதிப்பு உண்டு, ஆனால் நேரத்திற்கு விலைமதிக்க முடியாது.
தனது நேரத்தின் பெறுமதியை மதிக்காதவன் பிறர் நேரத்தின் பெறுமதியையும் மதிக்க மாட்டான்.
குறித்த நேரந்தவறாமல் காரியம் பார்த்தோர் வாழ்க்கையில் வெற்றி பெற்று எங்கேயோ சென்று விட்டார்கள். நேரந்தவறிக் காரியம் பார்த்தோர் கோட்டையும் விட்டு, கொட்டாவியும் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விளங்கவில்லையே! என்ன சொல்கிறீர்கள்?
நான் மட்டும் ஐந்து நிமிடம் முன்னர் குறித்த நேரத்தில் நேரந்தவறாமல் பரீட்சை மண்டத்திற்கு வந்திருந்தால் ஒரு வருடம் முன்னரே நான் எனது டாக்டர் பட்டத்தைப் பெற்றிருப்பேன். பரீட்சைக்கு ஐந்து நிமிடம் பிந்தியதால் வைத்தியக்கல்லூரி பிரவேசம் ஓராண்டு தள்ளப்பட்டு விட்டதே.
ஆயுள் பூராவும் ஆயத்தம் செய்து வந்த எனது புனிதப்பயணம் அரை மணி நேரம் பிந்தி விமான நிலையம் வந்த படியால், தடைபட்டு விட்டதே. இனி அடுத்த ஆண்டில் தானே ஹஜ் செய்ய முடியும். ஆரை மணி நேரம் தாமதம் ஓராண்டு காலத்துக்கு என்னை ஏங்க வைத்து விட்டதே.
-ஹஜ் விமானத்தைத் தவறவிட்டவரின் புலம்பல்
“மின்சார வரியையும், தண்ணீர் வரியையும் நேரந்தவறிச் செலுத்தினேன். ஆவை துண்டிக்கப்பட்டு வீண் சிரமத்திற்கு ஆளானேன்.”
இவர்கள் யாவரும் நேரத்தின் பெறுமதியை மதியாதபடியால், நேரந்தவறி வேலைகளைச் செய்து வாழ்வில் ஏமாற்றங்களுக்கு ஆளானோர். கடுமையான தோல்விகளையும், ஏமாற்றத்தையும், கவலைகளையும் தவிர வேறென்ன தான் இவர்களுக்கு மீதப்படப்போகிறது?
நேரந்தவறாமல், குறித்த வேளையில் குறித்த வேலை செய்து வருவோர் வாழ்வின் சகல துறைகளிலுமே சிறப்பாக – சீர் வெற்றி பெறுவர் என்பதை யார் தான் மறுக்க முடியும்?
அற்ப உலகின் சொற்ப கால வாழ்வின் நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் அறிவுடமையுடனும் பயன்படுத்திய மணித்துளிகள் இம்மை மறுமை இரண்டிலுமே ஒரு மனிதனுக்குக் கை கொடுக்கும்.
வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி வாகை சூடிய இறை நேசர்களாம் வலிமார்கள் தமது நேரத்தை முறையாக வகுத்து, நேரந்தவறாது தொழில்பட்டதாலேயே ஈருலகப்பெருவாழ்வு கண்டார்கள்.
நேரந்தவறித் தொழும் தொழுகையோ, நேரந்தவறிச் செய்யும் உபதேசமோ, நேரந்தறவறி உட்கொள்ளும் உணவோ, நேரந்தவறி உறங்கும் உறக்கமோ, நேரந்தவறி உபயோகிக்கும் மருந்தோ, நேரந்தவறிச் செல்லும் பயணமோ, நேரந்தவறிச் செய்யும் திருமணமோ நேரந்தவறிச் செய்யப்படும் விவசாயமோ நேரந்தவறி அடைகாத்த கோழியோ உரிய பயன் நல்கப்போவதில்லை.
மதினாவில் கண்ட ஸவாத்
ஸ்ரீ லங்கா, அல்-ஹாஜ் மௌலவி ர். ஸலாஹ{த்தீன்
தொழுகையானது (மூமினான) விசுவாசிகள் மீது நேரங்குறிக்கப்பட்ட கடமையாகும்.
நிஸா 103, குர்ஆன்
குறித்த நேரத்தில் தொழுகையைச் சரியாக நிறைவேற்றாதவன், எதையுமே குறித்த நேரத்தில் செய்ய மாட்டான்.
பொன்னுக்கும், மண்ணுக்கும், முத்துக்கும், மணிக்கும் விலையும் பெரிய மதிப்பு உண்டு, ஆனால் நேரத்திற்கு விலைமதிக்க முடியாது.
தனது நேரத்தின் பெறுமதியை மதிக்காதவன் பிறர் நேரத்தின் பெறுமதியையும் மதிக்க மாட்டான்.
குறித்த நேரந்தவறாமல் காரியம் பார்த்தோர் வாழ்க்கையில் வெற்றி பெற்று எங்கேயோ சென்று விட்டார்கள். நேரந்தவறிக் காரியம் பார்த்தோர் கோட்டையும் விட்டு, கொட்டாவியும் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விளங்கவில்லையே! என்ன சொல்கிறீர்கள்?
நான் மட்டும் ஐந்து நிமிடம் முன்னர் குறித்த நேரத்தில் நேரந்தவறாமல் பரீட்சை மண்டத்திற்கு வந்திருந்தால் ஒரு வருடம் முன்னரே நான் எனது டாக்டர் பட்டத்தைப் பெற்றிருப்பேன். பரீட்சைக்கு ஐந்து நிமிடம் பிந்தியதால் வைத்தியக்கல்லூரி பிரவேசம் ஓராண்டு தள்ளப்பட்டு விட்டதே.
ஆயுள் பூராவும் ஆயத்தம் செய்து வந்த எனது புனிதப்பயணம் அரை மணி நேரம் பிந்தி விமான நிலையம் வந்த படியால், தடைபட்டு விட்டதே. இனி அடுத்த ஆண்டில் தானே ஹஜ் செய்ய முடியும். ஆரை மணி நேரம் தாமதம் ஓராண்டு காலத்துக்கு என்னை ஏங்க வைத்து விட்டதே.
-ஹஜ் விமானத்தைத் தவறவிட்டவரின் புலம்பல்
“மின்சார வரியையும், தண்ணீர் வரியையும் நேரந்தவறிச் செலுத்தினேன். ஆவை துண்டிக்கப்பட்டு வீண் சிரமத்திற்கு ஆளானேன்.”
இவர்கள் யாவரும் நேரத்தின் பெறுமதியை மதியாதபடியால், நேரந்தவறி வேலைகளைச் செய்து வாழ்வில் ஏமாற்றங்களுக்கு ஆளானோர். கடுமையான தோல்விகளையும், ஏமாற்றத்தையும், கவலைகளையும் தவிர வேறென்ன தான் இவர்களுக்கு மீதப்படப்போகிறது?
நேரந்தவறாமல், குறித்த வேளையில் குறித்த வேலை செய்து வருவோர் வாழ்வின் சகல துறைகளிலுமே சிறப்பாக – சீர் வெற்றி பெறுவர் என்பதை யார் தான் மறுக்க முடியும்?
அற்ப உலகின் சொற்ப கால வாழ்வின் நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் அறிவுடமையுடனும் பயன்படுத்திய மணித்துளிகள் இம்மை மறுமை இரண்டிலுமே ஒரு மனிதனுக்குக் கை கொடுக்கும்.
வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி வாகை சூடிய இறை நேசர்களாம் வலிமார்கள் தமது நேரத்தை முறையாக வகுத்து, நேரந்தவறாது தொழில்பட்டதாலேயே ஈருலகப்பெருவாழ்வு கண்டார்கள்.
நேரந்தவறித் தொழும் தொழுகையோ, நேரந்தவறிச் செய்யும் உபதேசமோ, நேரந்தறவறி உட்கொள்ளும் உணவோ, நேரந்தவறி உறங்கும் உறக்கமோ, நேரந்தவறி உபயோகிக்கும் மருந்தோ, நேரந்தவறிச் செல்லும் பயணமோ, நேரந்தவறிச் செய்யும் திருமணமோ நேரந்தவறிச் செய்யப்படும் விவசாயமோ நேரந்தவறி அடைகாத்த கோழியோ உரிய பயன் நல்கப்போவதில்லை.
மதினாவில் கண்ட ஸவாத்
ஸ்ரீ லங்கா, அல்-ஹாஜ் மௌலவி ர். ஸலாஹ{த்தீன்
Thursday, September 30, 2010
ஆண்களைக் கெடுக்கும் பெண்களின் கவர்ச்சி ஆடைகள்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்....
ஆண்களைக் கெடுக்கும் பெண்களின் கவர்ச்சி ஆடைகள்.
அமெரிக்க ஆய்வாளா்கள் இன்றுதான் சொல்கிறார்கள்
இஸ்லாம் அன்றே சொன்னது
தொகுப்பு Muaadh M.I.Sc
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும் கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும்இ முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில்இ நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும்இ வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும்இ ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும்இ அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும்இ தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும்இ நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.
அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும் உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை.
இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.
அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும் பணித்தளங்களிலும் பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும் உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும் ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.
முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.
பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில்இ தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.
ஆடை பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள்இதமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் (24 : 31)
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும்இ தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன: (33 : 59)
திருக்குர்ஆன் 24:31 வது வசனத்தில் ''பெண்கள் அலங்காரத்தை வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது'' எனக் கூறப்படுகிறது.
இங்கே 'ஜீனத்' என்ற மூலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஜீனத் என்றால் அலங்காரம் என்பது பொருள்.அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள்ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.
உதட்டுச் சாயம் பூசுவது நகைகளால் ஜோடனை செய்வது 'மேக்கப்' பொருட்களைப் பயன்படுத்துவது ஆடைகளால் அழகை அதிகரிப்பது இவை ஜீனத் என்ற சொல்ரிலில் அடங்கும்.
எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக்கூடாது.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள 'ஜீனத்' என்பதைச் சிலர் அழகு என விளங்கிக் கொண்டனர். அழகு வேறுஇ அலங்காரம் வேறு என்பதை அவர்கள் உணர்வதில்லை.
சீலையை பெண்கள் உடுத்தும் வழக்கம் நம் நாட்டில் உள்ளதால் இஸ்லாமிய பெண்களும் சீலையை உடுத்துகிறார்கள். ஆனால் இந்த ஆடை பெண்களின் இடுப்புப்பகுதியையும் முதுகுப்பகுதியையும் மணிக்கட்டிற்கு மேலே உள்ள கைப்பகுதிகளையும் வெளிப்படுத்திக் காட்டும் விதத்தில் அணியப்படுகிறது.
பின்வரும் செய்தியை கவனத்தில் வைத்துக்கொண்டு ஹிஜாப் விஷயத்தில் பேணுதலாக பெண்கள் நடந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும்இ தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன: (33 : 59)
திருக்குர்ஆன் 24:31 வது வசனத்தில் ''பெண்கள் அலங்காரத்தை வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது'' எனக் கூறப்படுகிறது.
இங்கே 'ஜீனத்' என்ற மூலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஜீனத் என்றால் அலங்காரம் என்பது பொருள்.அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள்ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.
உதட்டுச் சாயம் பூசுவது நகைகளால் ஜோடனை செய்வது 'மேக்கப்' பொருட்களைப் பயன்படுத்துவது ஆடைகளால் அழகை அதிகரிப்பது இவை ஜீனத் என்ற சொல்ரிலில் அடங்கும்.
எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக்கூடாது.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள 'ஜீனத்' என்பதைச் சிலர் அழகு என விளங்கிக் கொண்டனர். அழகு வேறுஇ அலங்காரம் வேறு என்பதை அவர்கள் உணர்வதில்லை.
சீலையை பெண்கள் உடுத்தும் வழக்கம் நம் நாட்டில் உள்ளதால் இஸ்லாமிய பெண்களும் சீலையை உடுத்துகிறார்கள். ஆனால் இந்த ஆடை பெண்களின் இடுப்புப்பகுதியையும் முதுகுப்பகுதியையும் மணிக்கட்டிற்கு மேலே உள்ள கைப்பகுதிகளையும் வெளிப்படுத்திக் காட்டும் விதத்தில் அணியப்படுகிறது.
பின்வரும் செய்தியை கவனத்தில் வைத்துக்கொண்டு ஹிஜாப் விஷயத்தில் பேணுதலாக பெண்கள் நடந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.
அறிவிப்பவர் ; அபூஹ‚ரைரா (ர¬)
நூல் : முஸ்லிம் (3971)
வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டப் பகுதி
பெண்கள் தமது உடல் அழகில் கைகள்இ முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிரிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தை கடைபிடிக்கும் மாறும் இறைவனுக்கும் மாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வலங்கினார்கள் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள் மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள் அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள் அதறட்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள் நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள் அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1612)
('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகான வராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (6228)
கொடுக்கல்இ வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும்.
பெண்கள் முழங்காலிலிருந்து ஒரு முழம் வரை உள்ள பகுதிகளை மறைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முழங்காலிலிருந்து ஒரு முழம் என்பது கரண்டை வரைக்கும் வரும். எனவே கரண்டைக்குக் கீழே உள்ள பாதத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
பெருமைகொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா (ரலி) அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (முழங்காலிலிருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா (ரலி அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ; இப்னு உமர் (ரலி)
நூல் : திர்மிதி (1653)
முகத்தை மறைப்பதில் தவறில்லை.
பெண்கள் முகத்தை மறைத்துக்கொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக்கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்யவில்லை.
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1838)
முகத்திரை அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் இஹ்ராமின் போது மாத்திரம் அதை அணியக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இஹ்ராம் அணியாத மற்ற பெண்கள் முகத்திரை அணிவதற்கு தடை இல்லை என்பதை இதி¬ருந்து விளங்கிக்கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு போருக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த போது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒரிடத்தில் ஆயிஷா (ரலி அவர்கள் ஒட்டகச் சிவிகையில் இருந்து இறங்கினார்கள். ஆயிஷா (ரலி அவர்கள் திரும்பி வருவதற்குள் படை சென்றுவிட்டது. ஸஃப்வான் பின் முஅத்தல் என்ற நபித்தோழர் ஆயிஷா (ரலி) அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஆயிஷா (ரலி) அவர்கள் தம் முகத்தை மறைத்துக்கொண்டார்கள்.
ஸஃப்வான் பின் முஅத்தல் என்னை அறிந்து கொண்டு இன்னா¬ல்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (4750)
எனவே பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை. என்றாலும் முகத்தை மறைப்பதால் நம் வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆண்களாயினும் பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.
ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
பெண்கள் தாம் என்று இல்லை. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.
தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையை கேடையமாக பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாக செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
by mail from Fajur Hadi
Sunday, September 26, 2010
கருக்கலைப்பு + குடும்ப கட்டுப்பாடு (வீடியோ )
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.திருக்குர்ஆன்-17:31
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.
திருக்குர்ஆன்6:140
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம்.பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாகஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
23:14திருக்குர்ஆன்
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்ப டுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
திருக்குர்ஆன்22:5
உயிருக்கு ஆபத்து அல்லது தாயின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் பெரிய தீங்கில் இருந்து தப்பிக்க சிறிய தீங்கைச் செய்யலாம் என்ற அடிப்படையில் அது குற்றமாகாது.
.அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
திருக்குர்ஆன் 4:17,18
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
திருக்குர்ஆன் 39:53
கருக்கலைப்பு--- by நிந்தவூர் ஷிப்லி
ஜனனங்களுக்காய்படைக்கப்பட்ட
கருவறைகள்..
இன்றோ
மரணங்களுக்கான
கல்லறையாய
புதிய பரிமாணம்
உயிரணுக்களின்
உயிர்கள்
அணுவணுவாய்
கொல்லப்படுகிறது
மருத்துவச் சித்ரவதைகளுடன்....
தொப்புள்கொடிகளே
தூக்குக்கயிறுகளாகின்றன
இந்தக்கருக்கலைப்பில்....“
புக்களை தீயிட்டு
எரிப்பதைப்போல”
என்பதை தவிர
வேறெந்த உவமைகளும்
பொருந்தப் போவதில்லை
இந்த அகால மரணங்களுக்கு...
மனிதாபிமானம்
செத்துப்போய்விட்டதை
பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா
சிசுக்கொலைகள்...?
உண்டான பிறகு
சிதைப்பதை விட்டுவிட்டு
உண்டாகும் முன்
சிந்தியுங்கள்
ஏனெனில்நீங்கள்
சிதைப்பது உயிர்களை அல்ல
இவ்வுலகின்
கருக்கலைப்பு
Friday, September 17, 2010
இஸ்லாமியச் சட்டம் (11)
இஸ்லாமியச் சட்டம் (11)
மறுக்கப்படும் மனித உரிமைகள்
மனித உரிரிமை உணர்வில்லாத கடமையோ பரிணமிக்க முடியாது. சுதந்திரம் என்பது சமூகத்திடையே உள்ள ஒரு ஒப்பந்தமேயாகும். நமது உரிமையை உபயோகிக்க விரும்புகிற போது மற்றவர் உரிமையையும் மதித்து நமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.
கண்களுக்கு ஒளி எப்படி அவசியமோ, சுவாசப்பைக்கு காற்று எப்படி தேவையாக இருக்கிறதோ, இதயத்துக்கு அன்பு எப்படி வேண்டப்படுகிறதோ அது போன்று தான் மனித நேயத்துக்கு உரிமை இன்றியமையாததாக இருக்கிறது.
பிறர் உரிமையைப் பறிப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதும் குற்றமாகும். அதனால்தான் "Your Liberty ends, where my nose begins" என்று ஆங்கிலத்திலே ஒரு பொன்மொழியைச் சொல்வார். ஒரு குச்சியைக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் சுழற்றும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் அது என் மூக்கின் மேல் பட்டுவிடக்கூடாது என்பது தான் அதன் பொருள். ஒரு சமுதாயத்தின் வலிமை உடையவர்களிடமிருந்து தயக்கமின்றி உரிமை கிடைக்க வேண்டும் என்பதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சபைகளிலோ அல்லது கடைத்தெருவிலோ உங்களில் எவரும் தம்கையில் ஈட்டியுடன் நடந்து சென்றால் அதன் நுனி மற்றவரின் மீது குத்திவிடாமல் இருக்கும் பொருட்டு அதனை கையில் பிடித்துக் கொள்ளவும் என்று சொன்னார்கள். இந்த நபி மொழியை அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரே சமூகம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம் போன்ற ஒற்றைச் சிந்தனை மனித உரிமைக்கு எதிரானது. ஒற்றைத் தன்மை மனித உரிமையை சிதைக்கும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை மனித உரிமையை வளர்க்கும்.
மெளலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உலகிலுள்ள மதங்கள் குறித்து அதைப் பற்றி சிந்தித்து நீங்கள் குழம்ப வேண்டியதில்லை. மதத்துக்கு மதம் கருத்து வேறுபாடு இருக்கிறதா? அது எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதை உங்களாலோ என்னாலோ மாற்ற முடியாது. ஒரே குறிக்கோளுக்கு பல வழிகள். அந்த வழிகளில் சிறந்தது உங்களிடம் இருக்கிறது. அதனை முறைப்படி பின்பற்றுங்கள். அது போதும் அந்த வேறுபாடுகளையயல்லாம் அழிக்க நினைத்தால் அது இயலாது, என்று சொன்னார்கள். குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் பல ரீதியில் மனித உரிமைகளை பாதுகாப்பதாகவே அமைந்துள்ளது. எந்த அளவிற்கு அத்தண்டனை கடினமாக்கப்படுமோ அந்த அளவு மனித உரிமைகள் அதிகம் பேணப்படுகிறது என்று பொருள். இக்கோணத்தில் பார்க்கும் போது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் பார்ப்பதற்கு கடினமாகத் தெரிந்தாலும் அவைகள் மூலம் மனித உரிமைகள் அதிகம் பேணப்பட்டது, பேணப்படுவது போன்ற வேறு சட்டங்கள் மூலம் பேணப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இஸ்லாமிய சட்டங்களை ஏற்றுக் கொள்ளாத நாட்டில் எவ்வளவு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது என்பதைப் பாருங்கள். அமெரிக்காவின் சிறைகளில் சிறை அதிகாரிகளாலும், சக கைதிகளாலும், பெண் கைதிகள் கற்பழிக்கப்படுகிறார்கள். 1987ம் ஆண்டு பெண் கைதிகள் அமெரிக்காவில் ஒரு லட்சத்து முப்பத்தெட்டாயிரம் பேர் 1985ம் அண்டில் இருந்ததை விட இது மூன்று மடங்கு அதிகம். இங்கிலாந்து மனித உரிமைக் கழகம் இது பற்றி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பெண் காவலர்கள் குறைவு என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நம்நாட்டின் தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வுத்துறை இயக்குனர் கார்த்திகேயன் 02.03.1999ல் ஒரு அறிக்கையில் குறிப்பிடும் போது ஒரு வருடத்திற்கு மனித உரிமை குற்ற முறையீடுகள் 40 ஆயிரம் வருவதாகச் சொன்னார். கீழ்மட்ட காவல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பேரிலும் புகார்கள் அதிகமாக வருவதாகச் சொன்னார். குற்றம் செய்பவர்களை தண்டிப்பது என்பதை விட திருத்துவது என்பது முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு அவர் அறிவுரை கூறினார். புலனாய்வுத் துறை என்பது ஒரு புனிதமான கடமைப் பொறுப்பு என்பதால் அது களங்கப்படாமலிருக்க அரசியல்வாதிகளின் தொடர்போ குறுக்கீடோ இல்லாதிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அனைத்துலக பொது சபை 10.12.1948 (General Assembly) உலகளாவிய தேசிய ஒருமை உறுதிமொழி பறையறிவிப்பை ஏற்றுக் கொண்டது. 30 விதிகளைக் கொண்ட அந்த அறிவிப்பு அனைத்து நாடுகளிலும் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவான தேசிய உரிமைப் பற்றிய விதியை அறிவித்தது. தற்போதிருக்கும் ஐக்கிய நாட்டுச் சபையின் 56வது விதியும் மனித உரிமையைப் பற்றி குறிப்பிடுகிறது. இந்திய அரசியல் நிர்ணயசாசனப்படி சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் தங்களுடைய நியாயங்களையும் உரிமைகளையும் வலியுறுத்தவும் பெரும்பான்மை வகுப்பினர் அறிந்தோ அறியாமலோ விளைவிக்க முற்படும் அநீதிகளை எடுத்துக்காட்டி எச்சரிக்கவும் தங்களுடைய மதம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும் உரிமைகள் தரப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அதை செயல்படுத்தாத சமுதாய சூழ்நிலை உருவானது.
மனித உரிமையை காப்பதற்கும் மனித நேயத்தை வளர்ப்பதற்கும்
1. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 (பழைய சட்ட எண்.10/1994)
2.தேசிய மனித உரிமைகள் பொறுப்பாணைக்குழு (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள் -1994, 3. மாநில மனித உரிமைகள் பொறுப்பாண்மைக் குழு - தமிழ்நாடு - (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள் - 1997,
4. Universal Declaration of Human Rights - 1948.5. Basic Internation Human Rights Instruments. ஆகியவை அரசாங்கத்தில் இயற்றப்பட்டன.
இந்திய அரசியல் சாசன சட்டத்தில் 3வது, 4வது பகுதியின் முன்னுரை, Universal Declaration of Human - 1948 என்பதன் அடிப்படையை வைத்தே, அமைக்கப்பட்டிருந்தது. இந்திய குடியரசு சட்டம் 25(1)ல் பொது அமைதிக்கும் ஒழுக்கத்துக்கும், சுகாதாரத்துக்கும் இப்பிரிவின் மற்ற ரத்துக்களுக்கும் உட்பட்ட முறையில் அனைவருக்கும் தங்கள் மனசாட்சிபடி நடக்கவும் தங்களுக்கு விருப்பமான மதத்தை தாராளமாக அனுசரிக்கவும் பிரச்சாரம் செய்யவும் உரிமையுண்டு.
சீக்கியர்கள் கிர்பான வைத்துக் கொள்ள தடையில்லை என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் பொதுத்துறையிலோ தனியார் துறையிலோ பணியாற்றினாலும் அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் சீக்கியர்கள் தலைப்பாகை தாடி போன்றவற்றை கடைபிடிக்காமலிருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது. மிக முக்கியமான சுன்னத்துகளைக் கூட அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றுவதில்லை. அது பற்றி சங்கை மிகு மார்க்க அறிஞர்கள் அறிவுரை கூறினால் ''சுன்னத்துதானே'' என்று அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள். பலமுறை ஹஜ்ஜுக்கு சென்ற சில சகோதரர்களிடத்திலும் சுன்னத்தான தாடியைப் பார்க்க முடியவில்லை. தொப்பி போட்டு தொழுவதுகூடி தேவையில்லை என்று சொல்லும் இளைஞர் கூட்டம் பெருகி வருகிறது.
இதன் காரணமாக காவல்துறையிலோ இன்னபிற. உயர்ந்த அரசுப் பணியிலோ அபூர்வமாக நியமிக்கப்படும் முஸ்லிம் சகோதரர்கள் நிரந்தரமாக தாடி வைப்பதற்கோ, தொப்பி அணிவதற்கோ முடியாமல் பெரும்பாலும் தடுக்கப்படுகிறார்கள்.
07.08.1986ம் ஆண்டு அப்போதைய நீதியரசர் மோகன் தன்னுடைய தீர்ப்பில் 1957ம் ஆண்டு ஆணையில் திருத்தம் கொடுத்து நான்கு மாதங்கள் மட்டுமே அனைத்து மதத்தைச் சார்ந்த காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தாடி வைக்க அனுமதி உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தின்படி தாராளமாக நடக்க இந்திய குடியரசுச்சட்டம் முழு உரிமை அளித்த பின்பும் இங்கு மனித உரிமை மீறல் தென்படுகிறது. சீக்கியர்களை விட பன்மடங்கு நாம் பல்கிப் பெருகி இருந்தும் கூட இந்த உரிமை மீறல்களை நாம் தட்டிக் கேட்க இதுவரை துணியவில்லை. நமது துணிவின்மைக்கு மார்க்கக் கடமைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துக்களையும் நாம் அனைவரும் பின்பற்றாமல் இருப்பதும ஒரு காரணம் என்பதை மறந்து விடக் கூடாது. வாழ்க்கையின் நட்சத்திரங்கள் எரிந்து விழலாம். ஆனால் உயிரினும் இனிய நம் ஈமானின் நம்பிக்கைள் எரிந்து விழக்கூடாது.
திருடினால்...
இந்தியாவில் உள்ள அனைத்து சமய இனமக்களுக்கும் பொதுவான ஒரு சட்டவியல் குற்றத் தொகுப்பு அவசியம் என்ற கருத்தின் அடிப்படையில் 1860ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை அமுலில் இருந்து வருகிறது.
511 பிரிவுகளைக் கொண்ட இத்தண்டனைச் சட்டத் தொகுப்பு 378வது பிரிவிலிருந்து 382வது பிரிவு வரை சொத்துக்களைப் பற்றிய குற்றங்கள் : திருட்டு என்ற தலைப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 17வது அத்தியாத்தில் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம் 379-வது பிரிவின்படி ''திருட்டுக்குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 380வது பிரிவின்படி குடியிருப்பதற்காக பயன்படும் அல்லது சொத்துக்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படும் வீடு, கூடாரம் அல்லது கப்பலில் திருடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனைச் சட்டம் 381வது பிரிவின்படி ஒருவரிடம் பணியாளராக அல்லது எழுத்தாளராக பணிபுரியும் ஒரு நபர், தம்முடைய முதலாளியின் பொருளைத் திருடினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.
382வது பிரிவின்படி திருடுவதற்காக அல்லது திருடியபின் பிடிபடாமல் தப்பிக் கொள்வதற்காக அல்லது காயம் அல்லது தடுத்தல் ஆகியவற்றிற்கான ஆயத்தங்களை செய்துவிட்டு யாரேனும் திருடினால், அந்த நபருக்கு பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி மூன்றாண்டு, ஏழாண்டு, பத்தாண்டு தண்டனை ஏற்படுத்தப்பட்ட போதிலும் நூற்றுக்கணக்கான தடவைகள் திருட்டுக் குற்றத்திற்காக தண்டனை பெற்ற சிறைச்சாலைக்கு செல்பவன் சிறைப் பறவையாக வெளிவருகின்றானே தவிர அவன் திருடுவதை நிறுத்தவில்லை.
பழந்தமிழ் நாட்டில் திருட்டுக் குற்றத்திற்காக கடுமையான தண்டனைகள் விதித்து வந்தார்கள். முதலில் திருடியவர்களுக்கு சில நேரங்களில் மன்னிப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலான குற்றங்களுக்கு ஒரு கையை துண்டிப்பது திருட்டுக்குற்றத்தின் தண்டனையாக இருந்தது. இரண்டாவது முறை திருடினால் ஒரு காலைத் துண்டித்தார்கள். இதனால் பழந்தமிழ் நாட்டில் திருட்டுக்குற்றங்கள் குறைவாக இருந்தன. ஏழை பணக்காரன் அரசன், ஆண்டி என்ற வேறுபாடு இல்லாமல் குற்றத்திற்கான தண்டனைச் சட்டம் அமுலில் இருந்தது. (இது இஸ்லாமிய சட்டத்திற்கு நெருக்கமானது என்பது தெளிவான வியம்) குற்றத்திற்கான தண்டனை இஸ்லாமிய நாடுகளிலும் சிங்கப்பூர், சீனா போன்ற மற்ற உலக நாடுகளிலும் கடுமையாக இருப்பதால் அங்கு குற்றப்பதிவுகள் குறைவாகவே இருக்கின்றன.
டான்லால் தாஸ்வானி என்ற அறிஞர் ''குற்றச் செயலுக்கான நீதி இஸ்லாமிய சட்டத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. எல்லாக் காலத்திற்கும் சமமான தண்டனையே அது வழங்குகிறது. சவூதி அரேபியா மன்னராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாத நபராக இருந்தாலும் இஸ்லாமிய சட்டத்தில் தண்டனை அனைவருக்கும் சமமாகவே இருக்கின்றது'' என்று கூறி இருப்பது நினைவு கூறத்தக்கதாகும். உழைப்பை வலியுறுத்தி, உழைக்கும் கரங்களை மதிக்கின்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனிதனுடைய கரங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.
1. உழைக்கும் கரம் : -இதை இஸ்லாம் மதிக்கின்றது.
2.பலனற்று இருக்கும் கரம் : இதனைக் கொண்டு எப்படி தொழில் செய்யலாம் என்று இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது.
3. பலஹீனமான கரம் : இதற்கு இஸ்லாம் உணவளிக்கின்றது.
4. சமூகத்தில் கொடுமையாக விளையாடும் கரம் : இதைத் துண்டித்துவிட ரீஅத் சட்டங்களை பிறப்பிக்கின்றது. அதற்காக கண்மூடித்தனமாக கையை வெட்டக் கூறவில்லை. ஒருவன் திருடினான் என்று குற்றவாளிக் கூண்டிலல் நிறுத்தப்பட்டடால் சாட்சியங்களோடு அது நிரூபிக்கப்பட வேண்டும். நியாய விரோதமாக கரத்தை வெட்டினால் 50 ஒட்டகையை இழப்பீடாகத் தர வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இச்செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டான தண்டனையாகும். அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமுடை யோனுமாக இருக்கிறான் (அல்குர்ஆன் 5:38) என திருக்குர்ஆன் வசனம் திருட்டுக் குற்றத்திற்கான தண்டனை பற்றி தெளிவாகக் கூறுகிறது.
''உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு ஜீவராசியும் பூமியில் இல்லை'' என்று திருமுறையில் (11:6) தூயவன் அல்லாஹ் வாக்களிக்கின்ற போது மனிதன் வறுமைக்கு அஞ்சியும், பொருளாசை காரணமாகவும் திருடும் தீயசெயலில் ஈடுபடுவது முறையாகுமா? ஒரு பொருள் திருடப்படுவதன் காரணமாக பொருளை இழந்தவனுடைய மன உளைச்சலும் பேரிழப்பும் மிக அதிகமாக இருக்கின்றன.
உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை நம் கவனத்தில் கொள்வோம்.
திருமணமான ஒரு பெண் தனிமையில் ரயிலில் பயணம் செய்தாள். திருடன் ஒருவன் அப்பெண்ணின் பணப்பையைத் திருடிச் சென்றுவிட்டான். பயணச்சீட்டு பரிசோதகர் வந்தபோது, இத்துயரச் சம்பவத்தை அப்பெண் விளக்கிச் சொல்லியும் அப்பெண்ணை சிற்றூரின் ஒரு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். சமூக விரோதிகள் பெண்ணின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு மிருகவெறி மேலோங்கி அப்பெண்ணை கற்பழித்து விட்டார்கள். கற்பிழந்தபின் வாழ்வெதற்கு என்று அந்தப் பெண் ஏங்கி தற்கொலை செய்து கொண்டாள்.
திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுவது காட்டு மிராண்டித்தனம் என்று கூச்சலிடுகின்ற விவேகமில்லாத விமர்சர்கள் இந்த நிகழ்ச்சியை ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒரு ரயில் பயணச்சீட்டுத் தானே திருடப்பட்டிருக்கிறது! ஆனால் விலை மதிக்க முடியாத ஒரு மனித உயிரல்லவா பலியாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கவனங்களினால்தான் திருட்டுக் குற்றத்திற்கு கடுமையான தண்டனையை இஸ்லாமிய ஷரீ அத் சட்டம் விதிக்கிறது.
உன்னுடைய குழந்தை என்னுடைய சகாக்களிடம் அகப்பட்டுக் கொண்டது. எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுக்காவிட்டால் உன்னுடைய குழந்தையை கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்தி ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. இதனை அச்சுறுத்திப் பொருள்பறித்த குற்றமாக கொள்ள வேண்டும். குழந்தையை உடனே கொன்று விடுவார்கள் என்ற அச்சம் உண்டாக்கப்பட்டதால் தான் இந்தக் குற்றம் கொள்ளை ஆகும்.
390வது பிரிவில் கொள்ளையில் திருட்டு அல்லது அச்சுறுத்திப் பொருள் பறித்தல் என்பது பற்றிய மேற்குறிப்பிட்ட உதாரண நிகழ்ச்சி தரப்பட்டிருக்கிறது.
பொதுவாக அசையும் பொருள்களை அனுமதியின்றி எடுக்கும் போது அது திருட்டுக்குற்றம் என்று சொல்லப்பட்டாலும் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை அனுமதியின்றி உபயோகித்தாலும் திருட்டுக் குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.
தமிழ்நாட்டில் 1985ம் ஆண்டின் தமிழ்நாடு மின்சார வாரியம், அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தியதற்காக D.K.K முதலியார் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்திய தண்டனைச் சட்டம் 378வது பிரிவின்படி இது திருட்டுக் குற்றம் இல்லையயன்றாலும் இந்திய மின்சாரச் சட்டம் 1901ன் 39வது பிரிவின்படி இது திருட்டுக் குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் 379வது பிரிவில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். (T.N.Electricity Board - V.D.K.K. Mudaliyar 1985 Cr.II 561(Mqd)
ஒருவர் தம் வசம் வைத்திருக்கும் அசையும் பொருளை அவருடைய சம்மதமின்றி, நாணயமற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் பொருளை அப்படி எடுத்துக் கொள்வதற்காக நகர்த்துவதை திருட்டு என்று கூறுகின்றோம். உதாரணமாக ஒருவருடைய தோட்டத்தில் உள்ள மரத்தை ஒருவன் வெட்டுகிறான். நாணயமற்ற முறையில் அப்படி வெட்டப்பட்ட மரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவன் செயல்பட்டால் மரம் வெட்டிய உடனேயே திருட்டுக் குற்றம் நிறைவேறி விடுகிறது.
ஒரு நபருடைய நூலகத்திலிருந்து அவருடைய சம்மதம் பெறாமலும் அவர் அங்கு இல்லாத போது புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறோம். அதனைப் படித்துவிட்டு திரும்பத் தந்து விட வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் புத்தகம் எடுக்கப்படுகிறது. அந்தப் புத்தகத்தை அப்படி எடுப்பதற்கு நண்பர் ஆட்சேபிக்க மாட்டார் என்ற நினைப்பில் அந்தச் செயல் புரியப்பட்டிருந்தால் அது திருட்டுக் குற்றம் ஆகாது.
திருட்டுக் குற்றத்திற்கு இஸ்லாமியச் சட்டம் வழங்கும் தண்டனை கையை வெட்டுதல் என்றாலும் ஒருவன் தனது தாங்க முடியாத பசிக்காகவோ, இன்றியமையாத தவிர்க்க முடியாத தேவைகளுக்காகவோ இக்குற்றம் புரிந்தால் தண்டனை கிடையாது. ஏனென்றால் பசியும் மற்ற தீர்க்கப்படாத தேவைகளும் சமுதாயத்தின் குற்றம் என்று ரீஅத் சட்டம் கூறுகிறது.
நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறபோது திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டக் கூடாது என்று உலகப் புகழ்பெற்ற கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். மெத்தப் படித்தவர்களும் சில நேரங்களில் நவீனகால சூப்பர் மார்க்கெட் என்று சொல்கிற பல்பொருள் அங்காடியில் ஏதாவது ஒரு பொருளை திருடியிருக்கிற சம்பவங்களும் நடந்திருக்கிறது. லண்டன் மாநகரில் தூதரகத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி இத்தகைய குற்றத்தைச் செய்ததை அங்குள்ள தொலைக்காட்சி காட்டிக் கொடுத்துவிட்டது.
இத்தகையவர்கள் இளம் வயதில் இந்தப் பழக்கத்தை மேற்கொள்ளும் போத பெற்றோர் கண்டிக்காமல் தண்டிக்காமல் விட்டதன் விபரீத விளைவுகள்தான் இது.
வீட்டில் நம் பிள்ளைகள் திருடும் போது சிறு பிள்ளை என்றும் நம் வீட்டில்தானே எடுத்தான் என்றும் காரணம் கூறி கண்டிக்காமல் விட்டுவிடுகிறோம்.
இப்பழக்கம் அவர்களிடம் ஊடுருவி பெரிய வயதான பின்னரும் எவ்வளவுதான் வசதி பெற்றாலும் அடுத்தவர்களின் பொருள்களைத் திருடுகிறார்கள். அதனால் மற்றவர்கள் அவர்களை மட்டமாக மதிப்பதைக் காண்கிறோம், என்று வேலூர் மல்லானா .கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
Monday, September 13, 2010
திருக்குர்’ஆனை அழிக்க முடியுமா? by: நாகூர் ரூமி
திருக்குர்’ஆனை அழிக்க முடியுமா?
சில நாட்களாக இந்த பிரச்சனை பலரின் மனதை ஆக்கிரமித்துள்ளது. இது எப்படி முடியப் போகிறது என்று நமக்கெல்லாம் தெரியும்.
வரும் செப்டம்பர் 11 அன்று, மாலை 6-லிருந்து 9 வரை குரானுடைய பிரதிகளை எரிக்கப் போவதாக அவர் பிரகடனப் படுத்தியிருக்கிறார். உலக வர்த்தக மையக் கட்டிடத்தை அழித்தற்கு எதிரொலியாகவாம். யார் யாரோ எவ்வளவோ சொல்லியும் அவர் இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார்.
இதுபற்றி முன்னால் அமெரிக்க அதிபரின் மனைவி ஹிலரி க்ளிண்டன் தன்னுடைய கண்டனத்தை கடுமையான வார்த்தைகளில் கூறியிருக்கிறார். இந்த திட்டம் “அராஜகமானது, கேவலமானது, அவமானப்பட வேண்டியது” என்றும், “உலகத்தின் கவனத்தைக் கவருவதற்காக 50 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு தேவாலயத்தின் பாஸ்டர் இப்படிச் செய்திருக்கிறார். அவர் செய்ய நினைக்கும் காரியம் அமெரிக்காவையோ, அமெரிக்கர்களையோ பிரதிநிதித்துவப் படுத்தும் செயலல்ல” என்று கூறியிருக்கிறார்.
அதிபர் ஒபாமா இது பற்றிய தொலைக்காட்சி நேர்காணலில், இது ஒரு ”ஸ்டண்ட்” (விளம்பரத்துக்காகவும் பகட்டுக்காகவும் செய்யப்படும் வித்தை) என்று வர்ணித்துள்ளார். “அமெரிக்க முப்படைகளின் தளபதி என்ற முறையில் நான் சொல்கிறேன், இச்செயல் நிச்சயமாக ஈராக், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க வீரர்களின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும்” என்றும், அவர் செய்ய நினைக்கும் காரியம் “அமெரிக்கர்கள் என்ற முறையில் நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கு முற்றிலும் எதிரானது” என்றும், ”மத ரீதியான சுதந்திரம், மத ரீதியான சகிப்புத் தன்மை” ஆகியவற்றின்மீது கட்டப்பட்டது இந்த நாடு என்றும், பாஸ்டர் டெரி ஜோன்ஸின் இந்த ஸ்டண்ட் அல்காயிதாவில் இன்னும் நிறைய பேர் சேருவதற்குத்தான் துணை போகும் (ரெக்ரூட்மெண்ட் பெனான்ஸா) என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை தனக்கு 100-க்கும் மேற்பட்ட மரண மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், அதனால் பிஸ்டலும் கையுமாகவே தான் இருப்பதாகவும் டெரி ஜோன்ஸ் கூறியுள்ளார்.
தகவல்கள் இருக்கட்டும். இதுபற்றி நாம் வேதனையடையவோ, கொதிப்படையவோ தேவையில்லை. வரலாற்றில் இதுபோன்ற மடத்தனங்களை எவ்வளவோ நாம் பார்க்க முடியும். எனக்குத் தெரிந்த வரையில், திருமறையை அழிக்கவே முடியாது. கோடிக்கணக்கான இதயங்களில் அது குடியிருக்கிறது. முழு குரானையும் மனனம் செய்த ஹாபிஸ்கள் லட்சக் கணக்கில் இருக்கின்றனர். ஒரு ஊரில் பத்து பள்ளிவாசல்கள் இருக்குமானால், அதில் ஐந்திலாவது ஒரு ஐம்பது பேர் குரான் மனனம் செய்யும் படிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாதத்துக்காகச் சொல்கிறேன், இந்தக் கணத்தில் இந்த உலகில் இருக்கும் குரான் பிரதிகள் அனைத்தும் எரிக்கப்பட்டாலும் — அஸ்த’ஃபிருல்லாஹ் — 24 மணி நேரத்துக்குள் மீண்டும் முழு குரானும் லட்சக்கணக்கான பிரதிகள் உருவாகிவிடும்!
இந்த சிறப்பு வேறெதற்கும் இந்த உலகில் கிடையாது! ஏனெனில் குரானைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டுள்ளான்.
Source : http://nagoorumi.wordpress.comதிருக்குர்’ஆனை அழிக்க முடியுமா?
Thursday, September 9, 2010
இனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்

எல்லோரும் இன்புற்று வாழ இவ்வினிய நேரத்தில் எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் (இறைவனது) அருள் நாடி இறைத்தூதர் நபி
அவர்கள்
காட்டிச் சென்ற ஈகைப் பெருநாளில் வேண்டுவோம். அனைத்துப் புகழும்
அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும்
நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
அல்லாஹ்வின் (இறைவனது) அருள் நாடி இறைத்தூதர் நபி
காட்டிச் சென்ற ஈகைப் பெருநாளில் வேண்டுவோம். அனைத்துப் புகழும்
அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும்
நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
=======================================================================
இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே!
-முஹம்மது பெளமி-பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் “ஈத்” என அழைக்கப்படுவது உண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது. ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டு தோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே! அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது. இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது!
பெருநாட்களின் நோக்கம்!
யாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாள். மற்றொன்று ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள்.
பெருநாள் கொண்டாட்டம்!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நன்மைகள் செய்யக் கூடிய நல்வாப்பாகவே பெருநாட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இறைவனை அதிகமாக நினைவு கூர்ந்து திக்ர் செய்தல், அவனுக்கு நன்றி செலுத்தல், தான தருமங்கள் செய்தல், நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளல் மூலம் இணக்கத்தையும் சகோதரத் துவத்தையும் வலிமையாக்கிக் கொள்ளல், பகையும் குரோதமும் களைந்து உற்றார் உறவினர்களை சந்தித்து உறவுகளை பலப்படுத்திக் கொள்ளல், நோயாளிகளை நலன் விசாரித்தல், அண்டை அயலாரோடு பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ளல், பகை கொண்ட உள்ளங்களை சேர்த்து வைத்தல், பெற்றவர்களை மனம் குளிரச்செய்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதுடன் அனுமதிக்கப்பட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு இன்புற்று மகிழுமாறு இஸ்லாம் எமக்கு கற்றுத் தருகின்றது.
இதற்கு மாற்றமாக பண்டிகை என்ற பெயரில் மது அருந்தி, போதையில் மிதந்து, சூதாட்டத்தில் புதைந்து, வீடுகளிலும் வீதிகளிலும் வன்முறையை ஏற்படுத்தி சண்டைசச்சரவுகளில் ஈடுபட்டு, துன்புற்று சீரழியும் நிலையை இஸ்லாம் தடுத்துள்ளது.
உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டாடுவதற்கென்று சில தினங்கள் இருக்கின்றன அந்த தினங்களில் அந்தந்த சமூக மக்கள் தங்கள் மன விருப்பப்படி யெல்லாம் சந்தோஷமாக இருப்பார்கள். குறிப்பாக அந்த தினங்கள் பெருவாரியான மக்களுக்கு கேளிக்கைகளுக்குறிய தினங்களாகவே கழிந்து விடும். முஸ்லிம்களுக்கு மகிழ்சிக் குறிய தினங்களாக இஸ்லாம் இரண்டு தினங்களை ஏற்படுத்தியுள்ளது அதில் ஒன்று நோன்புப் பெருநாள் தினமாகும். ரமளான் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் உலக முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்சிகரமான நாளாகும். ஏனெனில் அன்று பெருநாள் தினம். இதர மக்களைப் போன்று கேளிக்கை விளையாட்டுகளில் இந்த நாள் கழிந்து விடக் கூடாது. மாறாக இறைவனை அதிகம் அதிகம் நினைவுக்கூறுவதிலும், தாளாரமாக தான தர்மங்கள் வழங்கி பிறர் மகிழ்சியில் மன சந்தோஷம் அடைவதிலும் இந்த நாளை கழிக்க முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.
நன்றி :http://kky30100.wordpress.com
Wednesday, September 1, 2010
இஸ்லாமியச் சட்டம் (13) --நீடூர் A.M.சயீத்
இஸ்லாமியச் சட்டம் (13)
[ திருமணத்தின் நோக்கம், முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம், (கருக்)கொலையும் - சட்டமும் ]
திருமணத்தின் நோக்கம்
திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர் என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன் நோக்கமாகும். அன்பு மலர்களால் ஆழ்ந்த பூந்தோட்டம் என்னும் திருமணத்தை தம்பதிகள் தங்களது சுயநலம் காரணமாக போர்க்களமாக ஆக்கிவிடுகிறார்கள்.
கடலில் படகுப்பயணம் செய்பவர்கள் படகில் ஓட்டை ஏற்பட்டால் தண்ணீர் உள்ளே வராதிருப்பதற்கு அதை அடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். முயற்சிகள் தோல்வியடைந்தால் வேறு படகில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவியரிடையே சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. சிந்திக்கத் திறனில்லாமை, ஆத்மீகப் பயிற்சியில்லாமை போன்ற காரணங்களினால் விவாகரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
Tuesday, August 31, 2010
உத்வேகமூட்டும் வாழ்க்கை - ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّعُتبة بن غَزْوان
மதீனாவிற்கு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புலம்பெயர்ந்ததும் பள்ளிவாசல் ஒன்று கட்டினார்கள். அந்தப் பள்ளிவாசலின் பின்புறத்தின் வடபகுதியில் சற்றே உயர்ந்த ஓர் வெற்றிடம் இருந்தது. அதன் பெயர் அஸ்ஸுஃப்பா.
பள்ளிவாசலின் பின்புறச் சுவரை ஒட்டிய திண்ணை, மேலே நிழலுக்கான ஒரு தடுப்பு - அதுதான் அஸ்ஸுஃப்பா. இங்கு அனாதரவான முஸ்லிம் ஆண்கள் தங்கி, வாழ்ந்து வந்தார்கள். தொடக்கத்தில் மக்காவை விட்டு வெளியேறி, மதீனா வந்திருந்த முஹாஜிர்கள்தாம் அங்குத் தங்கியிருந்தனர். பின்னர், வசதி வாய்ப்பில்லாத மற்ற முஸ்லிம்கள் சிலரும் அங்கு வந்து தங்கிவிட்டார்கள். அனைவரும் ஏழைகள். குடும்பம், உறவு என்று எதுவும் அவர்களுக்கு அமைந்திருக்கவில்லை. ஸுஃப்பாதான் அவர்களுக்குத் திண்ணை, பள்ளிக்கூடம், வீடு எல்லாமே. அவர்களெல்லாம் "அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா - أصحاب الصفة" என்று அழைக்கப்பட்டனர் - அதாவது திண்ணைத் தோழர்கள். சுவர் போன்ற தடுப்பு என்று எதுவும் இல்லாததால் எப்பொழுதும் காயும் வெயில், எப்பொழுதாவது பெய்யும் மழை, குளிர்காலத்தின் கடுங்குளிர், புழுதிக் காற்று என்று அனைத்துப் பொழுதும் அங்குதான் அவர்கள் வாழ்க்கை. மானம் மறைக்கும் அளவு மட்டுமே உடை. மற்றவர்கள் அவ்வப்போது கொண்டு வந்து அளிக்கும் உணவுதான் ஆகாரம் என்று அங்கு இஸ்லாத்தைப் பயின்று கொண்டிருந்தனர் அவர்கள். முஹம்மது நபியும் மற்றத் தோழர்களும் உணவு கிடைத்தால் இவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வேறு சிலர் அவ்வப்போது பேரீச்சம் பழக்கொத்தைக் கொண்டுவந்து அங்கு நடப்பட்டிருக்கும் ஒரு தூணில் மாட்டிவிட்டுச் செல்வார்கள். இவர்களும் ஆளுக்கு ஒன்றோ, இரண்டோ சாப்பிட்டுப் பசியாறிக் கொள்வார்கள்.
சில சமயங்களில் உணவென்று எதுவும் இல்லாமல் நாட்கள் கழியும். பசியில் அவர்களது வாட்டம் எந்தளவு இருக்குமென்றால், தொழுகையின்போது மயக்கமுற்றும் விழுந்துவிடுவார்கள். சரி இப்படியெல்லாம் வாடும் இவர்கள், தொழுகை, வழிபாடு என்பது போலான ஓர் ஆன்மிக வாழ்க்கையை மட்டும் சார்ந்தவர்களோ, துறவி போன்றவர்களோ என்றால் அப்படியெல்லாம் இல்லை. போர் என்று அறிவிப்பு வந்தால், "படைக்கு முந்தி" என்று துள்ளியெழுந்து வந்து நின்றார்கள்.
அந்தத் திண்ணைப் பல்கலையில் பயின்று வந்த மேன்மக்கள் ஏராளம். நமக்குப் பரிச்சயமான கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களில் ஒருவர். பிலால், அபூஹுரைரா போன்ற புகழ்பெற்ற தோழர்களும் ஸுஃப்பாவாசிகள்தாம். பிற்காலத்தில் முதலாவது கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்ரு (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மானும் இந்தத் திண்ணையில் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்; வளர்ந்தவர். இவர்களுக்கு நபியவர்களின் அண்மை பெரும் பேறாய்த் தோன்றியது. விண்ணிலிருந்து இறங்கிய ஞானத்தை, முஹம்மது நபியின் நேரடிப் பரிமாறுதலில் பசி தீர்த்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள். அதற்காகக் காலமெல்லாம் அங்கேயே கிடந்து உழலத் தயாராயிருந்த மாபெரும் உன்னதர்களின் கூட்டம் அது.
பின்னர் காணப்போகும் மற்றத் தோழர்களின் வாழ்க்கையை உணரவும் அவசியமென்பதால்தான் இங்கு ஸுஃப்பா பற்றி இந்த அறிமுகம். ஆக, இத்தகையப் பல்கலையின் மற்றொரு முக்கிய மாணவர் ரபீஆ பின் கஅப்.
அப்போது இளவயதுச் சிறுவர் ரபீஆ. முதல் பார்வையில் வெகுசிலரை நமக்குப் பிடித்துப் போகும். அதேபோல் சிலரைப் பார்க்கும்போதே தகுந்த காரணமின்றி நமக்கு வெறுப்பேற்படும். முதன் முதலாய் முஹம்மது நபியைப் பார்த்ததுமே கவர்ந்திழுக்கப்பட்டார் ரபீஆ. உள்ளத்தை இஸ்லாமிய ஆன்மீகம் ஆக்கிரமிக்க, அவருக்கு உள்ளம் கவர்ந்த தலைவன் ஆகிப் போனார் முஹம்மது நபி. வேறு எது பற்றிய சிந்தனையும் இல்லை. சதா சர்வ காலமும் அல்லாஹ்வின் தூதரைப் பற்றிய எண்ணமும் பிரமிப்புமே அவர் மனதை ஆக்கிரமித்திருந்தன. அந்தளவுக்கு அந்தத் தலைவர்மீது அவரது மதிப்பும் மரியாதையும் மிகைத்தது. அந்த அவஸ்தையை அவரால் தாங்க முடியவில்லை. மனம் இறுதியாகக் கூறியது:
"ஏன் இந்தத் தொல்லை?. அவருக்குப் பணிவிடை செய்ய உன்னை ஒப்படைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை ஏன் நீ இலேசாக்கிக் கொள்ளக் கூடாது? போ அல்லாஹ்வின் தூதரிடம். பணிவிடை செய்யும் ஊழியனாய் உன்னை நீ அவருக்கு அர்ப்பணிப்பதாய்ச் சொல். அவர் மட்டும் ஒப்புக்கொண்டால், அவரைக் கண்ணாரக் கண்டுகொண்டே இருக்கும் ஆனந்தம் உனக்குக் கிட்டும். அவரது அன்பையும் அரவணைப்பையும் அடையலாம். இம்மை-மறுமையின் நற்பேறு உனதாகும்".
வருணிக்க எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல இவை. வரலாற்றுக் குறிப்புகள் அவரது வாழ்க்கையை அவரது வார்த்தைகளிலேயே பதிவு செய்து வைத்துள்ளன.
இந்த எண்ணம் தோன்றியவுடன் தாமதிக்கவில்லை ரபீஆ. நபியவர்களை விரைந்து சென்று சந்தித்து, தன் எண்ணத்தை வெளியிட்டார். பேராவலிலும் நம்பிக்கையிலும் அவர் மனது படபடத்தது. நம்பிக்கை வீண் போகவில்லை, ஏற்றுக் கொண்டார் முஹம்மது நபி. உலகின் தலைசிறந்த பல்கலையின் மாணவனாக நேரடி அனுமதி கிடைத்துவிட்டது ரபீஆவிற்கு. சரி, தங்கிப் பயில விடுதி? கிடைத்தது திண்ணை. திண்ணைத் தோழரானார் ரபீஆ பின் கஅப், ரலியல்லாஹு அன்ஹு!
நிழல்போல் தொடர்வது என்று உவமைக்குச் சொல்வோமே, அப்படி நபிநிழலாகிப் போனார் ரபீஆ. நபியவர்களுடன் நெருக்கமாகத் தங்கி, எங்கெல்லாம் அவர் சென்றாரோ அப்படியே இவர் பின்தொடர்ந்தார். நபியவர்கள் இவரைப் பார்த்தாலே போதும்; இவர் எழுந்து அவரிடம் ஓடினார். அவரது எந்த அலுவலாக இருந்தாலும் சரி, ஏதாவது செய்ய வேண்டுமென்றாலும் சரி, விரைந்து சென்று உதவுவது ரபீஆவின் இயல்பாகி விட்டது. சுருக்கமாக, தன்னை முழுக்க முற்றும் அர்ப்பணித்துக் கொண்ட பணிவிடை.
வேறு எதுபற்றிய சிந்தனையும் இல்லை. உலகம் பற்றிய அக்கறை இல்லை. அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இரத்தமும் சதையுமாய் தனது கண்ணெதிரே நடமாடும் நபியும்தான் அவரது உடல், ஆவி, மூச்சு அனைத்திலும் வியாபித்திருந்தனர்.
தேடித் தேடி பணிவிடை செய்வதாக நாள்முழுவதும் கழியும். நாள் முடிந்து இரவின் இறுதி இஷாத் தொழுகை முடிந்து நபியவர்கள் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். அடுத்து என்ன செய்வது? முதலில் திரும்பி விடலாம் என்று நினைப்பார். பின்னர் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றும்:
"ரபீஆ ஏன் போகிறாய்? அனேகமாய் இரவில் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்படலாம்" அவ்வளவுதான். இந்த எண்ணம் தோன்றியவுடன் நபியவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்து விடுவார். இறைவனின் மாபெரும் நபி, அரண்மனை, மாளிகை, சேவகர்கள் என்பதெல்லாம் எதுவுமே இல்லாமல் தனது எளிய குடிலுக்குள் புகுந்து கொள்ள, வாயிற்படியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தோழர்.
தனது அந்த அனுபவத்தை ரபீஆ விவரிக்கும் போது, "நபியவர்கள் இரவில் எழுந்து நின்று தொழுது கொள்வார்கள். சில வேளைகளில் அவர்கள் சூரா அல்-ஃபாத்திஹா ஓதுவதைக் கேட்பேன். அதை அவர்கள் இரவின் பெரும்பாலான பகுதியில் தொடர்ந்து ஓதிக் கொண்டே இருப்பார்கள். சிலவேளை 'தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்' என்பதை சூரா அல்-ஃபாத்திஹாவை விட அதிகமாக உச்சரிப்பார்கள், அதைக் கேட்டுக் கொண்டே அப்படியே அசந்து உறங்கி விடுவேன்"
இப்படியாக அவரது காலம் கழிந்து கொண்டிருந்தது.
மேலும் படிக்கஉத்வேகமூட்டும் வாழ்க்கை - ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّعُتبة بن غَزْوانJazakkallahu khairan
நன்றி : http://iniya-ramadhan.blogspot.com/2010/08/blog-post_717.html
Tuesday, August 24, 2010
எபிசோட் 26 - சிட்டி ராப் - துபாய் TV - துபாய் மீடியா - Episode 26 - City Wrap - Dubai TV - Dubai Media
இண்டர்வியு துபாய் டிவி சேனல் . துபாய் .
புனித ரமளான் நோன்பினை தென் இந்திய முஸ்லிம்கள் எவ்விதம்
நோன்பு மாதத்தை கடைபிடித்து வருகிறார்கள். உணவுப் பழக்கம் என்ன
என்பதனை தனது பேட்டியில் கருத்துக்களை சொல்கின்ரார்:.
இதனைக் காண இங்கு கிளிக் செய்யவும் Episode 26 - City Wrap -
Dubai TV - Dubai Media
புனித ரமளான் நோன்பினைப் பற்றி - அமீரா ஜபீன்
பேட்டி - துபாய் டிவி சேனல் . துபாய் .
எபிசோட் 26 - சிட்டி ராப் - துபாய் TV - துபாய் மீடியா -
சீசன்ஸ் நீடூர்,
seasonsali
நீடூர் சீசன்ஸ்
உளமாற வாழ்த்துகிறது
Sunday, August 22, 2010
மதீனா நேரலை - வலைத்தளங்களுக்காக
மதீனா நேரலை - வலைத்தளங்களுக்காக
மதீனா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html scriptயை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
-அதிரைநிருபர் குழு
நன்றி: அப்துல் ரஹ்மான்
http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_2508.html
மதீனா நேரலை
மதீனா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html scriptயை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
உங்கள் வலைத்தளங்களுக்கு தகுந்தது போல் விடியோ அளவை சரிசெய்துக்கொள்ளுங்கள்.
பாவங்களை அள்ளித்தரும் பொழுதுப்போக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த புனித மக்கா, மதீனா நேரலையை கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாமே.
-அதிரைநிருபர் குழு
நன்றி: அப்துல் ரஹ்மான்
http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_2508.html
மக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக
மக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக
மக்கா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html script யை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
மக்கா நேரலை
உங்கள் வலைத்தளங்களுக்கு தகுந்தது போல் விடியோ அளவை சரிசெய்துக்கொள்ளுங்கள்.
பாவங்களை அள்ளித்தரும் பொழுதுப்போக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த புனித மக்கா, மதீனா நேரலையை கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாமே.
http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_4245.html
http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_4245.html
Tuesday, August 10, 2010
(ரமளானின் )மூன்று பத்துகள்
புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.
நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமளான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமளானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.
கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.
இந்தப் பக்திப் பரவச நிலை, புனித ரமளான் ஒரு மாதத்தில் மட்டுமின்றி தினந்தோரும் இருப்பதுபோல் அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டு, அதன் மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் நன்றன்றோ எனும் ஆவலும் எண்ணமும் நமக்கு ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமளானில் மட்டுமின்றி ரமளானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.
இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல்- ஹதீஸ் ஆதார நூல்: இப்னு குஜைமா பாகம் 3 எண் 191.
இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு
முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறுவதற்குக் கடந்த காலங்களில் முயன்றிருக்கிறோமா என்பதை நினைத்துப் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- தொடரும் இன்ஷா அல்லாஹ்.
- ஆக்கம்: இப்னு ஹனீஃப்பிறை 1 | பிறை 2 | பிறை 3 | பிறை 4 | பிறை 5 | பிறை 6 | பிறை 7 | பிறை 8 | பிறை 9 | பிறை 10 | பிறை 11 | பிறை 12
Source : http://www.satyamargam.com/1306
Friday, August 6, 2010
எங்கம்மாகிட்டே கைக்கூலி (Dowry ) - தமிழ் முஸ்லிம் பாடல் by தேரிழந்தூர் தாஜுத்தீன் + வேண்டாம் வரதட்சணை by இப்னு மர்யம்
எங்கம்மாகிட்டே கைக்கூலி எங்கப்பா வாங்கினாரு
தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய உலக தமிழ் குடும்பம் விரும்பும் வரதட்சணைக்கு எதிரான சிறந்த தமிழ் பாடல்.
நீங்கள் பாடகர் தாஜுத்தீனை பாராட்ட அல்லது விமரிசிக்க விரும்பினால் ISD +971505429422 என்ற கைபேசிக்கு தொடர்பு கொள்ளவும் அல்லது குறுந்தகவல் (SMS) அனுப்பவும்.
வேண்டாம் வரதட்சணை இப்னு மர்யம்
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)
ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.
வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.
தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.
பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.
இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.
ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.
யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.
மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.
திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தமது வீட்டில் தமது உறவினர்களுடன் வழக்கம் போலவே இருந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது தாய், தந்தை, உற்றார், உறவினர், ஊர் அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர். பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருத முடியாது. பெண்களில் இந்த தியாகத்துக்காக ஆண்கள் பெண்களுக்குக் கொடுப்பது தான் நியாயமானது.
பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.
இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள்.
இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாகப் பொவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு மறுஜென்மம் எடுக்கிறாள். செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது.
ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!
கழுவிக்குளிப்பாட்டி சீராட்டி அழகு பார்க்கிறாள்! ஒவ்வொரு பருவத்திலும் குழைந்தைக்காக தன்னையே அர்ப்பணித்து விடுகிறாள்! இதற்காகவும் ஆண்கள் தான் கொடுக்கவேண்டும். இப்படிச் சிந்த்தித்துப் பார்த்தால் இன்னும் பல காரணங்களைக் காணலாம். இதன் காரணமாகத் தான் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணக்கொடையை மனமுவந்து வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.
வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.
தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.
பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.
இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.
ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.
யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.
மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.
திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தமது வீட்டில் தமது உறவினர்களுடன் வழக்கம் போலவே இருந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது தாய், தந்தை, உற்றார், உறவினர், ஊர் அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர். பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருத முடியாது. பெண்களில் இந்த தியாகத்துக்காக ஆண்கள் பெண்களுக்குக் கொடுப்பது தான் நியாயமானது.
பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.
இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள்.
இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாகப் பொவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு மறுஜென்மம் எடுக்கிறாள். செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது.
ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!
மணக் கொடை என்பது நூறோ இருநூறோ வழங்கி ஏமாற்றுவது அல்ல! நமது சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கலாம். ஒரு குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.
பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மண முடிக்க வேண்டிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களிடமே கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரவேண்டும். கொடுக்காமல் இருந்தது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு குற்றங்களைச் சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.
வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்! வல்ல இறைவன் இதற்கு அருள் புரியட்டும்!
நன்றி http://www.readislam.net/dowry.html
Subscribe to:
Posts (Atom)

















