Showing posts with label கட்டுரை -Articles பிரபலங்கள். Show all posts
Showing posts with label கட்டுரை -Articles பிரபலங்கள். Show all posts

Thursday, December 16, 2010

மோகத்தை மாற்ற தேடு காதலை !


மோகத்தை மாற்ற தேடு காதலை
தேடிய காதலை பாசமாக்கிவிடு
பாசம் வந்து  உன்னை ஒட்
டிக்கொள்ளும்
வசந்தம் வீச வாழ்வு மலரும் .

ஒரு பக்கம் வீசும் காதல் கானல் நீர்
இரு பக்கமும் இணைந்தால் அது தென்றல்

காதல் வர காரணம் இல்லை
மோதல்  வர காரணம் உண்டு 

 
காமம் வர காரியம் உண்டு
காதல் வர காரணம் இல்லை
காமத்தில் காதல் இல்லை
காதலில் காமம்  உண்டு

காமம் நிமிடத்தில் நின்று மறையும்
காதல் காலத்தில் ஒன்றி நிற்கும்

காதலுக்கு மொழி இல்லை மரணமும் இல்லை .

காதல் கவிதை எழுத அனுபவம் வேண்டும் என்ற விதி இல்லை காரணம் காதல் உயிருடன் ஒன்றியது அதனை
அறிய அன்புடன் புகாரியுடன் கேட்டு தெரிந்துகொள். 

இறைவன் மீது கொண்ட காதல் சுவனத்தின் வழி
 எனக்கு ஒரு புத்தகம் கிடைத்திருந்தால் நானும் படித்து  ஏதோ எனக்கு தெரிந்தவரை  ஒரு அணிந்துரை மாலை அணிந்திருபேன் . நான் ஒன்றும் பெரிய எழுதாளன் அல்லது கவிதைக் குயவன் இல்லை என்றாலும் .அன்பான வாழ்த்துகள் .உண்மையுடன் நேசிக்கும் அன்பன் முகம்மது அலி

========================================================================== 
நம்பிக்கை வளர்த்தெடுக்க
நாளெல்லாம் கவியெழுதி
தெம்புக்கோர் பாட்டென்று
திசையெங்கும் பாடவைத்து

அன்புமனம் அமுதளக்க
அன்னைத்தமிழ் எழுதுகிறேன்
அன்புக்கரம் வளைத்துலகை
அரவணைத்து வாழுகின்றேன்
                     ---கவிஞர் புகாரி

Monday, October 18, 2010

தாவூத்ஷா

 தாவூத் ஷா

சமயச் சீர்திருத்தம்

   தாவூத்ஷா ஷாவைப் பொருத்தவரை அரசியலுக்கு இரண்டாம் இடந்தான்.  காலத்தின் கட்டாயத்தால் அரசியலில் கலந்து கொண்டார்.
  
அவரது முதல் நோக்கம், முழு உழைப்பு, சமுதாயச் சீர்திருத்தம் தான்.  இஸ்லாமிய சமயத்தைச் சீர்திருத்த வேண்டும், முஸ்லிம் சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்பதே தாவூத்ஷாவின் உயிர் மூச்சாக இருந்தன.  அவரது பேச்சும், எழுத்தும் சமுதாயச் சீர்திருத்தமும், சமயச் சீர்திருத்தமே ஆகும்.
    சுப் மாஜிஸ்திரேட்டாக இருந்த காலத்திலேயே அவர் சமயப் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.  வெளிய+ர்களுக்குச் சென்று, சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார்.
    இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவர் கம்ப இராமாயண கதாகலட்சேமும் செய்தார்.  கல்லூரியில் படிக்கும் நாளிலேயே அவருக்குக் கம்ப இராமாயணத்தில் நல்ல புலமை இருந்தது.  அவர் சப் மாஜிஸ்திரேட்டாக இருந்த போது, ஒரு நாள் இரவு வேலை முடித்து, தன்னுடைய பணியாட்களுடன் அவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  வழியில் ஒரு தெருவில் அவரை “வாங்கோ…வாங்கோ…” என்று வரவேற்று, மேடை ஏற்றினார்கள்.

Sunday, October 17, 2010

'தமிழ் மாமணி' நீடூர் அ.மு.சயீத்

'தமிழ் மாமணி' நீடூர் அ.மு.சயீத்
சிந்தனைச் சித்தர், தமிழ்மாமணி நீடூர் அ.மு. சயீத் அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடும் முயற்சியினை நவமணி பதிப்பகத்தின் சார்பில் மயிலாடுதுறை நம்ம ஊரு செய்தி மாத இதழ் ஆசிரியர் முனைவர் அ. அய்யூப் மேற்கொண்டுள்ளார்.

அல்ஹாஜ் அ.மு. சியீத் நாடறிந்த எழுத்தாளர். தீந்தமிழ்ப் பேச்சாளர். திக்கெட்டும் புகழ் பரப்பும் வழக்கறிஞர்.

நீடூரில் 09.10.1933 இல் பிறந்த இவர் எழுபதைத் தாண்டிய இளைஞர். நெடுங்கால சமுதாய ஊழியர். நீடூர் நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியின் தலைவராக பல ஆண்டுகள் சேவை செய்தவர். .

சென்னை வானொலியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சுழற்ச் சங்கத்தின் (ரோட்டரி கிளப்) முன்னாள் தலைவர். மயிலாடுதுறை பல்சமய உரையாடல் மையத்தின் இஸ்லாமியப் பிரிவுத் தலைவராக இருந்தவர்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரான இவர் உலகளாவிய நிலையில் பத்து மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இலங்கை, தெற்கு வியட்நாம், சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர். ஹஜ் கடமையை ஆறு முறையை நிறைவேற்றிய பேறு பெற்றவர்.

தமிழ் மாமணி, சிந்தனைச் சித்தர், சிந்தனைச் செம்மல், பொன்மொழிச் செம்மல், போன்ற சிறப்புப் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிந்தனைக் களஞ்சியம், சிந்தனைத் துளிகள், இஸ்லாமியச் சட்டம், சிந்தனைச் செல்வம், புனித ஹஜ் உம்ரா பயணக் குறிப்புகள், பெருமானாரின் புனித ஹஜ் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

இவரது ஆக்கங்கள் மணிச்சுடர், மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, மனாருல் ஹ�தா, மஞ்சரி, பிறை, சமரசம், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தமிழக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இதழ்களில் வெளிவந்துள்ளன.

Wednesday, October 6, 2010

நீர்மை கொண்ட நீடுர் பதிவர் - சந்திப்பு



                                                by    கிளியனூர் இஸ்மத்

                                             முஹம்மது அலி ஜின்னாஹ்


விடுமுறையை விழுங்கிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியாச்சு...முப்பது தினங்களில் கிடைத்த அனுபவங்கள் நிறையவே இருக்கு.
தென்மாநில சுற்றுலாவைப்பற்றி தொடர்எழுதவேண்டும் மனம்தொட்டதை மனதில் பட்டதை எழுதவேண்டும்.

நாட்குறிப்பில் எழுதிய காலத்தில் கூட நிகழ்வுகளை முழுமையாக எழுதமுடியாமல் எழுத்துக்கு வறுமை இருந்தது ஆனால் இன்று இணையதளத்தில் இலவசமாக கிடைத்திருக்கும் வலையில் ஒன்றுவிடாமல் அனைத்தையும் எழுதலாம் ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் நாட்குறிப்பில் எழுதிய சுதந்திரம் வலையில் இல்லை எழுதுபவர்களுக்கு பர்தா தேவைப்படுகிறது.

பேனா நண்பர்களாக அறிமுகமானவர்களை சந்திக்கும் போது எற்படக்கூடிய அலாதி இன்று பதிவர்களை சந்திக்கும்போது இல்லை என்று ஒரு பதிவர் சொன்னார். அவர் சந்தித்த பதிவர் அப்படி ஆனால் எனக்கு அது நேர்மாற்றம். பதிவராக இருந்தாலும் அதிபராக இருந்தாலும் விரல்களைப் போல்தான் மனிதர்கள்.

இந்த விடுமுறையில் ஒரே ஒரு பதிவரை மட்டும் நான் துபாய் புறப்படுவதற்கு முதல் நாள் எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவலில் நீடுரை நோக்கிச் சென்றேன்.(எனது பக்கத்து ஊர்)

எனது நண்பரின் மகளுக்கு அன்று நீடுரில் திருமணம் நிகழ்ச்சி அதில் கலந்துக் கொள்வதற்கு முன் 70 வயதைக் கடந்த முஹம்மது அலி ஜின்னாஹ் (நீடுர் சீசன்) என்ற பழுத்த ஞானப்பழத்தை சந்திக்க காலை 11 மணிக்கு அவர் இல்லம் வந்தேன்.

(தமிழக இஸ்லாமியர்கள் அறிந்த காலம்சென்ற சிந்தனைச் செல்வர் நீடுர் அட்வகேட் சையது அவர்களின் அன்புச் சகோதரர் தான் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்)

வழக்கம்போல் அழைப்பு மணி..

வெள்ளை நிற ஆடையில் வெண்மை சிரிப்புடன் நரைத்த முடி என்றாலும் நிமிர்ந்த இராணுவச் சிப்பாயைப்போல் பளிச்சிட்ட முஹம்மது அலி ஜின்னாஹ் என்னைக் கண்டு யார் என்று கேட்பார் என எதிர்பார்த்தேன் அவரோ அடையாளங்கண்டு வாங்கோ என்று உற்சாகத்துடன் சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

சிறிய வரவேற்பரையில் அமரப்போன என்னை உள்ளே வாங்க என பெரிய வரவேற்பறைக்கு அழைத்து அமரச்செய்து கூச்சப்படவேண்டாம் எனக்கூறிக் கொண்டே தனது அன்புநிறைந்த துணைவியாரிடம் என்னை ஞாபகமூட்டினார்.(ஏற்கனவே சொல்லி வைத்துள்ளார்)

என்னைக் கண்டதில் அவருக்கு அளப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருப்பதை அவருடைய பரபரப்பில் காணமுடிந்தது.குடிப்பதற்கு டீ அல்லது காபி அல்லது சர்பத் எதுவேண்டுமோ சொல்லுங்க என்று உரிமையோடு கேட்டுக்கொண்டார் சர்பத் என்றதும் டீ அல்லது காபி வேண்டும் என்றாலும் கேளுங்க கூச்சப்படாதீங்க என்று கேட்டுக் கொண்டார்.

அவருடைய பேரக்குழந்தை துருதுருவென அங்கும் இங்கும் விளையாடிக்கொண்டிருந்தார்.பொருட்களை எடுத்து உரியவர்களிடம் கொடுப்பதில் திறமைவாய்ந்தவராக காணப்பட்டார்.

உரையாடினோம் அவருடைய பேச்சில் இந்திய மூத்த தலைவர்களைப் பற்றிய செய்திகள் நிறைந்திருந்தது.இத்தனை வயசிலும் இவ்வளவு விசயங்களை ஞாபத்தில் வைத்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.பல நாடுகளுக்கு சென்றுவந்தவர்.ஆங்கில புலமை நிறைந்தவர்.

தனது படுக்கையறையில் வைத்து கணினியை செயல்படுத்திக் கொண்டிருப்பதை காணமுடிந்தது.கணினிக்கு முன் இருந்த நாற்காழியின் கைப்பிடியில் தலையணைகள் கட்டப்படிருந்ததை வைத்து அதிகமாக இணையதளத்தில் வலம்வருவதை கிரகிக்க முடிந்தது.

வயதாகிவிட்டால் பலர் தங்கள் வாழ்க்கை முடிந்தே விட்டது என்ற கவலையில் பல நோய்களோடு படுத்த படுக்கையில் இருக்கும் பலருக்கு எழுபது வயசிலும் சுறுசுறுப்புடனும் தன்னார்வத்துடன் இளைஞர்களுடன் சரிசமாக பழகிவரும் மதிப்பிற்குரிய முஹம்மது அலி ஜின்னாஹ் பெரியவர்களுக்கு முன்னுதாரணமானவர்.

எனது கட்டுரைகளைப்பற்றி கூறினார் நிறைய அறிவுரைகள் கூறுவார் என எதிர்பார்த்தேன் அவரோ என்னை பேசவைத்து இரசித்துக் கொண்டிருந்தார்.
தத்துவத்தின் மீது எனக்கிருக்கும் ஆர்வத்தைக் கூறினேன்.

எந்த தேவைகளுக்குமே அதிகமாக செல்லாதவர் தனதூரில் நடக்கும் எனது நண்பரின் மகளார் திருமணத்திற்கு அழைப்பு இருந்தும் செல்வதற்கு மனமின்றி இருந்தவர் என்வருகையால் நானும் வருகிறேன் என காரில் செல்ல கூப்பிட நான் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளேன் எனக்கூறியதும் அதிலே போகலாம் என என்னுடன் வந்தார்.அவருடைய இந்த அனுசரனை எனக்குள் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

நாளை துபாய் புறப்படுகிறேன் என்றதும் வருத்தப்பட்டார்.சில தினங்களுக்கு முன்னாடியே நாம் சந்தித்திருக்க வேண்டும் நிறைய நேரங்களை சிலவழித்திருக்க வேண்டும் என தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தினார்.

எனக்கும் அதே ஆதாங்கம் தான் ஆனால் பத்து தினங்கள் தென்மாநில சுற்றுலாவில் கழிந்துவிட்டதினால் நாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என விளக்கமளித்தேன்.

வயது வித்தியாசமின்றி தனது மகன் வயதையொத்த என்னிடம் அவர் வெளிப்படுத்திய பண்பை, அன்பை எண்ணும்போது ஒரு குருவைச் சந்தித்த திருப்தி ஏற்பட்டது.துபாய் சென்றதும் எனது பையனுடன் தொடர்புவைத்துக் கொள்ளுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்.எனது தந்தைக்கு சமமான முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்.

இணையத்தில் முகப்புத்தகத்தில் வலம் வருவதும் வலைப்பூக்களை தொடங்கி பலரின் நல்ல பதிவுகளை அவர்களின் அனுமதிப்பெற்று தனது வலையில் மறுபதிவு செய்வதும் இவரின் வழமையாக இருக்கிறது. தன்னால் டைப் செய்யமுடியவில்லை என்னிடம் நிறைய கதைகள் இருக்கிறது டைப் செய்யமுடிந்தால் கதைகளை நிறைய பதிவுச் செய்வேன் என முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள் கூறினார்.

இந்த மூத்த பதிவரை சந்தித்ததில் மனம் மகிழ்ச்சியடைந்தது.இவரின் வயதிலும் சுறுசுறுப்புடன் வலம்வர வேண்டும் என்ற உரத்தை உள்ளத்தில் பதியவிட்டேன்.

எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் அவருக்கு என்றென்றும் வழங்க இறைஞ்சுகிறேன்.

என்னை சந்தித்த பாதிப்பு அவரின் இமெயில் வரிகளில் காணமுடிந்தது.

இது பதிவரை பார்த்துவிட்டு வந்த பிரிவு அல்ல
இரு உள்ளங்களுக்குள் எற்பட்ட உறவு.!

                    Source : http://kismath.blogspot.com/2010/07/blog-post.html

Friday, August 27, 2010

கீழை முதல் ஹாங்காங்க் வரை

கீழை முதல் ஹாங்காங்க் வரை
 
வள்ளல் பி.எஸ்.ஏ அவர்களின் இளமை வாழ்க்கை பற்றிய சில குறிப்புகள் .....
“விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பது தமிழ் முதுமொழி, எல்லா குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை, அது போல் செம்மல்களின் அடயாளம் பருவம் எட்டும் முன்பே தெரியும் அப்படியான ஒருவர்தான் வள்ளல் பி. எஸ்.ஏ , தனது பத்தாவது வயதிலேயே தனது இலட்சியங்களின் வழியில் பயணம் செய்ய மிகப் பெரும் கனவு கண்டவர். அக்கலத்தில் கீழக்கரை சமுதாயத்தில் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களை வீடு தேடி சென்று பள்ளி செல்ல வழியுறுத்தும் இயக்கத்தினை தனது நண்பர்களுடன் இனைந்து தலமையேற்று நடத்தியவர்.
தனது ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பினை கீழக்கரை ஹமீதியா பள்ளியில் முடித்த பின், இராமனாதபுரத்தில் கிருஷ்துவ மிஷனரிகளால் நடத்தப்படும் புகழ் பெற்ற சுவாட்ஸ் பள்ளியில் இனைந்தார், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலக்கட்டத்தில் இவருக்குள் எழும் கேள்விகள் ஏன் இது போன்ற தரமான பள்ளிகள் கிராமப் பகுதிகளில் குறைவாக அமையப்பெற்றுள்ளது? இதற்கான விடிவுதான் என்ன?
பி.எஸ்.ஏ. அவர்கள் தனது இளவயதிலேயே பனத்தின் மதிப்பினையும், பண்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களயும் உணர்ந்தவரானார். தனது சம வயது மாணவர்களில் சிலர் தேவையான தின்பண்டங்கள் வாங்க போதுமான பணம் வைத்திருப்பதையும், மேலும் சிலர் தின்பணடங்களே வாங்க பணமில்லாமல் வேடிக்கை பார்ப்பதையும் அறிந்து இந்த ஏற்றதாழ்வுகளுக்கு முடிவு கட்ட தனது நண்பர்களுடன் இனைந்து தின்பணடங்களை குறைந்த விலையில் மொத்த கொள்முதல் செய்து பணக்கார மாணவர்க்ளுக்கு அதிக விலையில் விற்று அதன் மூலம் கிடைத்த இலாபத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாக வினியோகித்து தனது தொழில் கோட்பாட்டிற்கு முண்னுரை எழுதினார்
தனது எட்டாம் வகுப்பினை முடித்த காலத்தில், இவரின் தனியாத வியாபாரத் தாகம் இவரது பள்ளிப்படிப்பினை தொடர முடியாமல் தொந்தரவு செய்ய தனது தந்தையர் புஹாரி ஆலிம் அவர்களின் அணுமதி பெற்று , தனது 20 ஆவது வயதில் தனது கையில் வெறும் 149 இந்திய ரூபாயும், ஒரு சின்ன துனிப் பையுமாக கொழும்பு வந்து சேர்ந்தார், சோதனையான காலக்கட்டம்..., முதலில் இவரது அறையில் வசித்து வந்த வியாபாரிகளின் மனதை அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதன் மூலம் கவர்ந்தார். இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தார்.
  வைர வியாபாரியான் தனது தந்தையருடன் முன்பு பலமுறை வைர வியாபரத்திற்காக கொழும்பு வந்தவர் அவர், அதனால் இதே வியாபாரத்தினால் கவரப்பட்டு அதனை பற்றிய நுட்பத்தினை மெல்ல மெல்ல கற்று அறிந்த பின்னும் அவருடய பொருளாதார சூழ் நிலை தனியாக வியாபாரம் செய்ய அணுமதிக்காத நிலையில் காலம் கணியும் வரை சில காலம் கொழும்பு நகரிலேயே அமைதி காத்தார். ஆனால் தனது வியாபார தொடர்புகளை எல்லையில்லமல் வளர்த்து கொண்டும் இருந்தார். விரைவில் ஒரு நேரம் சாதகமாக வந்தது, தனது தொழிலை முதலில் ஹாங்காங்கில் தொடர்ந்தவர் பின்பு, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் என கீழ்திசை நாடுகள் முழுவதும் பரந்து விரிந்தது, இதுவே வள்ளல் அவர்களின் வாழ்க்கையில் இனிமையான தருனமாக கொள்ளலாம், வைர வியாபாரத்தில் அதீத ஈடுபாடு கொண்டு மேலை நாடுகளான பெல்ஜியம், அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலும் தனது தொழிலரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார், 1950 களில் வைரத்தொழில் ஸ்தாபனத்தை ஹாங்காக் மற்றும் பெல்ஜியத்தில் நிறுவிய முதல் தென்னிந்தியர் இவர்தான் என்பது நாடறிந்த உண்மை.
மதி நுட்பமும், விவேகமும், நுண்ணிய நினைவாற்றலும் தாம் பி. எஸ்.ஏ அவர்களின் மூலதனமாக இருந்திருக்க முடியும், எதார்த்த தன்மையும், நகைசுவை உணர்வும் ஒருங்கே பெற்ற வள்ளல் அவர்கள் ஒருவரின் குறையை நேர்த்தியாக, நகைச்சுவையுடன் அந்த நபரின் எதிரிலேய சொல்லிவிடுவதில் அவருக்கு நிகர் எவருமே இல்லை எனலாம், வள்ளல் அவர்களை பற்றி முழு வாழ்க்கை வரலாறு நூல் வடிவத்தில் வந்துவிட்டது, இது அவரின் இளமை பற்றிய சிறு தொகுப்புதான், அவர்தம் சேவைகளும் இன்னும் அவர் தொழில் போல விரிந்து கொன்டேதான் போகிறது. கணக்கிலடங்கா குடும்பங்களின் ஒளி விளக்காகான வள்ளல் அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோமாக.........
நன்றி- திரு எம்.எம்.முகைதீன்,மஹ்மூத் நைனா
வள்ளல் பி. எஸ்.ஏ உடன் இருப்பவர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.