Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

Thursday, October 29, 2015

நீங்கள் துபாயில் வசிப்பவரா? உங்களை மகிழ்ச்சி படுத்த காவல்துறை உதவும்!.


துபாயில் வசிப்பவர்கள் சோகமாக இருந்தால், உடனடியாக ஓடோடி வந்து காரணத்தைக் கேட்கிறது போலீஸ். உலகின் மிக மகிழ்ச்சி யான நகரம் என்ற பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிப்பதற்காகவே இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு.

ஓர் எளிமையான ஆய்வு மூலம் மக்கள் சோகமாக இருக்கிறார்களா மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என கணக்கெடுக்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பவர்கள் முகச்சுளிப்புடன் இருக்கும் குறியீடு, சிரிக்கும் குறியீடு, உணர்ச்சிகளைக் காட்டாத முகபாவ குறியீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

மகிழ்ச்சியாக இல்லை என்று பதிவு செய்பவர்களை காவல் துறை தொடர்பு கொண்டு, அதற்கான காரணத்தை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, December 5, 2014

தூரதேசத்து சொந்தங்கள்....! (அரபு அமீரக அபுதாபி துபாய் படங்கள் இணைப்புடன் ) -ராஜா வாவுபிள்ளை

நினைவுகள் நிழலாடும்
நிதானித்து நினைக்கும்
நின்று நினைத்து
நிம்மதி தேடும்

மனவழி தொடர்புகள்
நேரில் காணல்கள்
உள்ளோட்ட புரிதல்கள்
நிதர்சன நடமாட்டங்கள்

தேடி ஓடும்
கண்டதும் ஒட்டும்
ஆனந்த மழை பொழியும்
காலம் கதைகதையாய் சொல்லும்

விதியின்படி விரிந்த உலகில்
பிரிந்து கிடந்தாலும்
இணைக்கும் பயணப்பாலங்கள்
பின்னிப் பிணைக்கட்டும் சொந்தங்களை

Tuesday, February 18, 2014

R.A.முகம்மது பாரூக்.( Err Farouk) துபாய் சுற்றுலா(Dubai Travel)

 R.A.முகம்மது பாரூக்.( Err Farouk) துபாய் சுற்றுலா(Dubai Travel)

 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில்  துபாய் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
துபாயில் இந்திய மக்கள் அதிகம் தொழிலும் ஈடுபட்டு மற்றும் வேலையும் செய்து வருகின்றார்கள்.
அதிகமானவர் தங்கள் குடும்பத்தை விட்டு அங்கு பொருள் ஈட்ட சென்று வேலை செய்கின்றார்கள் .
எங்கள் ஊர் நீடூரிலிருந்தும் அங்கு சென்றுள்ளார்கள் .அவர்கள் உறவினர்கள் ,நண்பர்கள் பலர் அவர்களை பார்க்கவும், துபாய் நாடு பார்க்கவும்  சென்று வருவதுமுண்டு.  சென்னையைவிட துபாயில் சில பொருள்கள் மிகவும் மலிவான விலையில்  கிடைப்பதாக சொல்கின்றார்கள்.  துபாயில் நகை கடைகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது 

அந்த வகையில் எனது உறவினர்  R.A.முகம்மது பாரூக்.( Err Farouk)அவர்கள்  துபாய் சுற்றுலா(Dubai Travel) சென்று வந்துள்ளார் அவருக்கு நமது வாழ்த்துகள்


Wednesday, January 8, 2014

முதுவை இளம் சாதனையாளர் : ஜுபைர் அஹமது

துபாயில் பயின்று வரும் முதுவை இளைஞரின் மருத்துவத் துறையில் ஒரு புது முயற்சி !

துபாய் : பிட்ஸ் பிலானி ( BITS PILANI – Dubai Campus ) துபாயில் B.Tech Bio Technology பயின்று வரும் முதுகுளத்தூர் இளைஞர்ஜுபைர் அஹமது ( வயது 20 ).

இவர் ஸ்டெம் செல்ஸ் மற்றும் திசுக்கள் பொறியியலில் மிகுந்த ஆர்வம் கொண்டு இது சம்பந்தமான ஆய்வு மேற்கொள்வதில் ஆய்வகத்தில் அதிக நேரம் செலவழித்து வருகிறார். இவ்வாய்வின் மூலமாக மனித உடலில் உள்ள செல்கள் மூலம் ஒருவரது உடலில் ஏற்படும் மருத்துவக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்ற ஒரு புது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Thursday, December 26, 2013

துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி

துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி

விருப்புத்தலைப்பில் எழுதலாம்

தை முதற் தேதிக்குள் வந்து சேர வேண்டும்

வயது வரம்பில்லை

உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கு பெறலாம்

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைக்கு, அந்தக் கவிஞரின் வங்கிக் க்ணக்கில் தொகை ( 5001/=உருபா) சேர்ப்பிக்கப்படும்.
From: Kalam Kader <kalamkader2@gmail.com>
தகவல் : புலவர் கவியன்பன் கலாம்

Sunday, November 10, 2013

துபாயில் ஈமான் 38 ஆம் ஆண்டு விழா

அமீரக 42 வது தேசிய தின விழா
மற்றும்
ஈமான்  38 ஆம் ஆண்டு விழா

நாள் : 02.12.2013 திங்கட்கிழமை காலை சரியாக 9.30 மணி
இடம் : பட்ஸ் பப்ளிக் ஸ்கூல், அல் முஹைஸ்னாஹ் 1, துபாய்

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஈமான் சங்கத்தின் 38 ஆம் ஆண்டு துவக்க விழா அமீரகத்தின் 42 வது தேசிய தினத்தன்று நடைபெற இருக்கிறது. அதுசமயம் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு, சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. எனவே அனைவரும் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு

அனைவருக்கும் மதிய உணவு, தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேய்ரா மீன் மார்க்கெட் அருகிலுள்ள சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.30 மணிக்கு பேருந்து புறப்படும்.

Friday, August 2, 2013

ஒரு மில்லியன் திர்ஹத்தை நன்கொடையாக ...

துபாய் அரசால் வழங்கப்படும் சிறந்த ஆளுமைக்கான விருதுக்கு வழங்கப்பட்ட ஒரு மில்லியன்  திர்ஹத்தை பீஸ்  டிவிக்கு நன்கொடையாக வக்ப் செய்தார் – டாக்டர் ஜாகிர் நாயக்.

Wednesday, February 20, 2013

அற்புத துபாய் பிரயாணம் போக அணுக..!


 உலகளாவிய புதிய வலை மூலம் சுற்றுலா

உலகளாவிய புதிய வலை மூலம் சுற்றுலா
உலக சுற்றுலா மற்றும் டிராவல்ஸ்
அனைத்து டிக்கெட் தீர்வு ஒரு முற்றுப்புள்ளி

 
தயவு செய்து இங்கு க்ளிக் செய்த பாருங்கள்http://www.travelbyglobal.com/view/snapshot

 

Dears,

We are proud to introduce the Amazing Dubai Tour Pack for 6 Night / 7 Days . . .

Refer the attachments and feel free to contact us . .  .

--

M. MOHAMED SHAFI
Global Tours and Travels

Jinnah Complex
143 Pattamangala Street
Mayiladuthurai 609 001
Phone : 04364 226544
Cell  : 9486 336544



from:     global travels <travelbyglobal@gmail.com>

Friday, September 7, 2012

திகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai


துபாயை அறியாதோர் யாரும் இல்லை. இருப்பினும் நம் மக்களுக்கு வேலை தருவதில் முக்கிய அங்கம் வகிக்கும் நகரங்களில் துபாய் இருக்கும் பொழுது அது நம் நினைவில் வந்துக்  கொண்டே இருக்கின்றது , ஏதோ ஒரு வகையில் நம் குடும்பத்தில் உள்ளோர் ஒருவர் அங்கு சென்று வேலை செய்து வருவதனை நாம் அறிவோம்,
 எங்கள்குடும்பத்திலும் அதிகம் நபர் துபாயில் அதிகம் உள்ளனர்.
                                                  
துபாய்  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெரிய நகரமாகும். அங்கு போதிய அளவு எண்ணெய் வளம்  இல்லாததால் துபாய் தன கவனத்தினை வேறு ஒரு வகையை தேடிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்ற நகரமாக விளங்குகின்றது . ஹாங்காங் போன்று தன்னை ஒரு உலக சந்தை கூடமாக தன்னை உருவாக்கிக் கொண்டது . ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இது மிகவும் பிரசித்திப் பெற்றது. இது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் இஸ்லாமியர் மட்டுமில்லாமல் அனைத்து மார்க்கத்தினை சார்ந்த மக்களும் இங்கு வாழ்கின்றனர்.(இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அனைத்து கேளிக்கைகளுக்கும்  அது இடமாகவும் உள்ளது)
   இஸ்லாமியர், கிருத்துவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். அனைத்து மத மக்களும் இங்கே நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.ஆனால் அரபியர்களைத் தவிர மற்றவர்களுக்கு அது குடிஉரிமை கொடுப்பதில்லை.வெளிநாட்டு  முதலீடு பெருக சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்துள்ளது .  துபாயைச் சார்ந்த அரபியர்களைக்  காட்டிலும் மற்ற மக்களே மிகைத்து அங்கு உள்ளனர்.

Friday, May 11, 2012

உலகப் பார்வையுடன் துபாய் அன்றும் இன்றும் அதன் வரலாறும்

 உலகப் பார்வையுடன் துபாய் அன்றும் இன்றும் அதன் வரலாறும்  ழ
பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு . இது அனைத்து மக்களுக்கும் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்  ஆனால் இன்னும் சில நாடுகளும் அதன் மக்களும்  பழைய பழக்க வழக்கங்களை விடாமல் விடாப் பிடியாக பிடித்துக் கொண்டு வாழ்பவர்களும் உள்ளனர் . நாம் மாறிவிட்டாலும் மாற்றத்தையும் தொடர்ந்து செய்து வருகின்றோம் . சில  நாடுகளில் மக்கள் மனது பழைமை விரும்பியாக இருந்து அதன் கலை  கலாச்சாரங்கள் அழிந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு பழமையான கட்டிடங்களை அது அழிந்து விடாமல் பாதுகாத்து வருகின்றனர்அந்த கட்டிடங்கள் வீணடித்து விடாமல் சரி பார்த்தாலும் அது  உருவாக்கிய நிலையிலேயே  காட்சி தரும். இந்த இடத்தில நமது தமிழ்நாடு நிலைமையை பார்த்து தெரிந்துக் கொள்வதும் நல்லது.   கோவில்களை,பள்ளிவாசல்களை மற்ற வணக்கஸ்தளங்களை    நினைவு கொள்ளவேண்டும். பழைமை வாய்ந்த சில கோவில்களை,
பள்ளிவாசல்களை மற்ற வணக்கஸ்தளங்களை அழகாக காட்சி தர வேண்டும் என்ற  எண்ணத்தோடு புதிய வண்ணங்கள் பல வகைகளில் கொடுத்து பழமையான முற்காலத்தில் கட்டப்பட்ட நிலையிலிருந்து மாற்றம் உண்டாகிவிடுகின்றனர். இது மிகவும் வருந்த வேண்டியதாக இருக்கின்றது. ஆயிரக்கனக்கான  வணக்கஸ்தளங்கள்  உண்டாக்கப்படுகின்றன  (வணங்குவதற்கு,தொழுவதற்கு ஆள் இல்லையென்றாலும்)   சவூதி அரேபியாவில் மிகவும் கொடுமை. அங்கே வரலாற்று கட்டிடங்கள் ஒன்றும் பார்க்க முடியாது( ஒரு சிலவற்றைத் தவிர குறிப்பாக கஹ்பா,சஹாபாக்கள் அடங்கியுள்ள இடம், நபிகள் நாயகம் அடங்கியுள்ள இடம் ) நாயகம் வாழ்ந்த வீடு மற்ற வரலாற்று முக்கிய இடங்களை தகர்த்து விட்டார்கள் . இது  மிகவும் வேதனையான நிகழ்வாகும்.

Saturday, March 24, 2012

துபாய் சர்வதேச அமைதி மாநாடு DIPC 2012 Promo (ENG)

துபாயில் நடைபெற இருக்கும் சர்வதேச அமைதி மாநாடு
Dubai International Peace Convention is being organized by Mohammed Bin Rashid Al Maktoum Award for World Peace (Government of Dubai) in association with Al Manar Center in partnership with Islamic Affairs & Charitable Activities Department (IACAD). DIPC 2012 will be a 3 day event to be held on 12th 13th & 14th April 2012 at Dubai World Trade Centre, Dubai. For further details, kindly logon to http://www.peaceconvention.com/

Sunday, November 27, 2011

துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!

வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்குமுன்பு குடிபுகல் நடைமுறைகளை மாற்றியமைத்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில் சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் சம்பளத்திற்கோ அல்லது பயிற்சி பெறும்நோக்கிலோ வேலைசெய்வதைக் கட்டுப்படுத்தியது. எனினும், அங்குள்ள சில நிறுவனங்கள் உடனடியாக நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைவிட சுற்றுலா விசா காலம் முடிவதற்குள் வேலைவாங்கிக்கொண்டு, அவகாசம் முடியும் தருவாயில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற ஒப்புக்கொள்ளச் செய்து பிறகு வேலைக்கான விசாவுக்கான நடைமுறையை பின்பற்றுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் குறுகியகால வேலைவாய்ப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பணியாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி குமைத் பின் டீமாஸ் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறுகிய காலத்திற்கு விசா தேவைப்படும் நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகத்தக்க குறுகிய கால "குறிக்கோள் விசா" (Mission Visa) கோரி விண்ணப்பிக்கலாம்.

இது, ஏற்கனவே அந்நாட்டிலுள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கும் ,புதிதாக விசா வேண்டுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய கால விசா வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் அந்நாட்டிற்குள் வந்து செல்லவேண்டும். அதிகபட்சம் 90 நாட்கள் இந்த விசா அனுமதியுடன் வேலை செய்யலாம். புதுப்பிக்க வேண்டும் எனில் நாட்டைவிட்டு வெளியேறிய 90 நாட்கள் கழித்தே மீண்டும் புதுப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குறுகியகால விசா மூலம் வருகை தந்தவர்களுக்கு நிரந்தர வேலைகிடைக்கும் பட்சத்தில் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : http://www.inneram.com/

Monday, September 19, 2011

'கப்பலுக்குப் போன மச்சான்!' - துபாய்க்கு பயணம்போயி வருஷம் ஆறாச்சு

பெண்:
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
எப்பத்தான் வருவீங்க எதிர்பார்க்கிறேன் - நான்
இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

ஆண்:
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்

பெண்:
அக்கரைக்குப் போனதுமே அக்கறையும் போயிடுச்சோ
அன்று சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களும் மாறிடுச்சோ
சர்க்கரைமேல் கோபப்பட்டு கட்டெறும்பும் ஓடிடுச்சோ
சங்கதி தெரியலையே மன்னன் மனம் வாடிடுச்சோ
(கப்பலுக்குப் போன...)

ஆண்:
அன்னமே அடிக்கரும்பே ஆவல் என்னை மீறுதடி (2)
எண்ணெய்க் கிணறுபோலே எண்ணமாய் ஊறுதடி
உன்னை அங்கு விட்டுவந்து உள்மனசு வாடுதடி
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கே வாழுதடி (2)
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துபாய்க்கு பயணம்போயி வருஷம் ஆறாச்சு
துள்ளிவரும் காவிரிபோல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நானிங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்திடுங்க தக்கதுணை நானாச்சு

ஆண்:
பாலைநிலமெல்லாமே சோலைவனமாகுதடி
பாயிறது நீராக மச்சானின் வேர்வையடி
பாடுபட்டு சேர்க்குறது பைங்கிளியே ஏதுக்கடி
பாவை உனக்கல்லாமே பாரிலே யாருக்கடி
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துல்ஹஜ்ஜு மாசத்திலே கடிதம் ஒன்னு போட்டீங்க
நலமா சுகமான்னு பாசம்வச்சி கேட்டீங்க
இங்கெனக்கு என்ன குறை மாடிமனை பஞ்சமில்ல
இருக்குறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்ல


ஆண்:
ஈச்சமரத் தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாசத்திலே தீர்ந்துவிடும் ஒப்பந்தமே
ஆச்சுது ஒருவாறு அன்புநகைப் பெட்டகமே
ஆக்கப்பொறுத்தவளே ஆறப்பொறு ரத்தினமே (2)

கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன் நான் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன்....

பாடியவர்கள்: காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது & எல்.ஆர்.அஞ்சலி.
பாடலாசிரியர்: கவிஞர் நாகூர் சலீம்.

Monday, August 15, 2011

ஜெட்டாவில் உலகின் உயரமான கட்டிடம் "கிங்டம் டவர்" காணலாம்!

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை இருக்கும் உலகின் உயரமான கட்டிடம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் காணலாம் .
இப்போது துபாயில் இருக்கும் 
துபாய் கோபுரம்தான்   உலகின் மிக உயரமான கோபுரமாக உள்ளது. 2010 ல் திறக்கப்பட்ட துபாய் கோபுரத்தின் உயரம் 828 மீட்டர்.

ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குள் வரவுள்ள கோபுரம்
பூர்ஜ் துபாய் விட 172 மீட்டர் உயரத்தில் கட்டப்படும்.

"கிங்டம் டவர்" என்று அழைக்கப்படும் இந்த கோபுரம் சவுதி அரேபியாவில் உள்ள செங்கடல் கடற்கரையில் துறைமுக அருகில் அமையம்.
Contractor is going to be The Bin Laden group(please see the second video)
The Saudi Binladin (or Binladen) Group (SBG) (Arabic: مجموعة بن لادن السعودية‎ Maǧmūʿat Bin Lādin al-Saʿūdiyyah) is a multinational construction
The Bin Laden Construction group was founded by Mohammad Bin Laden, father of the chief suspect in the September 11 anti-US attacks, ...






புதிய கோபுரம் 530 ஆயிரம் சதுர மீட்டர் சமமான அளவில், ஒரு நான்கு பருவங்கள் ஹோட்டல் (Four Seasons hotel) இது ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்புன் , அலுவலகங்கள் மற்றும் அழகான இயற்கை அழகுடன்  இருகும்படி  அமையும்.
  கோபுரத்தின் ஒரு நொடிக்கு 10 மீட்டர் செங்குத்து விசையில் 59 விடுவிப்பு முடியும். லிப்ட் ஒரு நிமிடம் நாற்பது விநாடிகளில் தரைமட்டத்தில் இருந்து கடைசி புள்ளி Pymvd கோபுரத்தோடு மீட்டர் ஆயிரக்கணக்கான இருக்க முடியும்.


கட்டப்படவுள்ள
கோபுரத்தின் செலவு $ 1.2 பில்லியன் என மதிபிடப்படுகின்றது சிகாகோ நாட்டின் அட்ரியன் ஸ்மித் மற்றும் கோர்டன் கில் ஆகியோர் இந்த கோபுரத்தின் இரண்டு வடிவமைப்பாளர்கள்.
by mail from : mujeeb rahman