Showing posts with label மூளை. Show all posts
Showing posts with label மூளை. Show all posts

Monday, November 25, 2013

சிறந்த எழுதுகோல் !












ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்வுகளை எழுத வேண்டும்
ஒவ்வொரு நாளும் படித்த பக்கங்களை எழுத வேண்டும்

நிகழ்வுகள் நடக்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்
புத்தகங்கள் படிக்க நிறைய புத்தகங்கள் பார்க்க வேண்டும்

ஒவ்வொரு நாளும் படித்தவைகளையும், பார்த்தவைகளையும் ,நிகழ்வுகளையும் எழுத முடியாது .

காதலித்தால் , நேசித்தால் , விரும்பினால் , மனம் ஒன்றினால் நீங்கள் அறியாமலேயே உங்கள் மூளை அதை சேகரித்து எழுதி வைத்து விடும் . தேவைப்படும்போது தானே தெரியப்படுத்தும் .

மூளையை விட சிறந்த எழுதுகோல் எதுவுமில்லை!

Saturday, November 9, 2013

ஆழ்மனதில் மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!


மூளையில் ஏற்படும் இரசாயன நிலை மாற்றத்தினால் தூக்கத்தின் நிலை மாறுபடுகின்றது.
ஆழ்ந்த தூக்கம், தடைப்பட்ட தூக்கம் என்ற பல நிலைகள் தூக்கத்திலும் உண்டு.
அதிகமான கனவுகள் மகிழ்வைத் தரக்ககூடியதாக இருந்தாலும் சில கனவுகள் நம்மை அதிசிய வைக்கும் நிலையில் இருக்கும். தினமும் கனவுகளின் காட்சி தொடர்ந்து வருவதும் ,அச்சமூட்டக் கூடியதாக குழந்தைகள் காணும் கனவுகள் காண்பதும் மனோ நிலையில் பாதிப்பை உண்டாக்கும் .

குழந்தைகளுக்கு தேவையற்ற பயம் தரக் கூடிய நிகழ்வுகளை காண வைப்பதும் பயமூட்டி வளர்ப்பதனாலும் இம்மாதிரியான பயம் காட்டக் கூடிய கனவுகள் குழந்தைகளைப் பாதிக்கின்றது. இருதயம் பட படக்க கண் விழித்து அலறுகின்றது.

Thursday, January 24, 2013

மூளைக்குள் ஒரு பயணம் செய்வோம்

 மூளை செய்யும் வேலை
மூளைக்குள் ஒரு பயணம் செய்து அதன் வேலையை அறிவோம்
 பயணத்தை தொடர இங்கு சொடுக்கு செய்யுங்கள்   

படமும் ,விளக்கமும் ஆங்கிலத்தில் இருக்கும்

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு(செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி[1] போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.

மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல்,பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

          தொடர்ந்து படிக்க
மூளை - 1
மூளை - 2