Friday, February 12, 2021

பெண்மையே பேரின்பம் Suhaina Mazhar

 

பெண்மையே பேரின்பம்

Suhaina Mazhar

- இதை நான் சொல்லல...

நபி(சல்) அவர்கள் சொல்லி இருக்காங்க, தமக்கு பிடித்த மூன்று விஷயங்களில் பெண்களும் ஒன்று என்று...

காசு, பணம், செல்வம், செல்வாக்கு, பதவி என எது இருந்தாலும் கூட ஒரு பெண் இல்லையென்றால் அவன் வாழ்க்கை முழுமை அடையாது. பெண்மையின் சுகத்துக்கு ஈடு இணையே கிடையாது என்று ரசனையுள்ளவர்கள் சொல்வார்கள்...

நபி(சல்) அவர்கள் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக இருந்ததைப் போலவே தான் காதலிலும் சிறந்தவர்களாக இருந்தார்கள். நபியவர்கள் கதீஜா பிராட்டியார் மீது கொண்ட காதல் நிகரற்றது.

அவர் கதீஜாவை மணந்த போது அவர் வயது 25, கதீஜா நாயகியின் வயதோ 40.

தன் நாற்பதாவது வயதிலும் கூட மனமிணைங்கி அழகிய காதல் வாழ்க்கையை அவர்களால் துவங்க முடிந்ததென்றால்...

சுமார் அடுத்த 25 வருட காலம் வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காமல் நபி (சல்) அவர்களால் ஒரே மனைவியுடன் வாழ முடிந்ததென்றால்...

கதீஜாவின் இறுதிக் காலத்தில் அதாவது அவர் 65 வயது கிழவியான பின்னும் கூட வேறு யாரையும் மணம் முடிக்காமல் அவருடன் மட்டுமே சந்தோஷமாக குடும்பம் நடத்த முடிந்ததென்றால்...

நிச்சயமாக அந்த காதல் எத்தனை அற்புதமானதாக இருந்திருக்க வேண்டும்.?!...

நான் எண்ணி எண்ணி மெய்சிலிர்க்கும் ஒரு விஷயம் இது...

நபி(சல்) தம் இளமைக்காலம் முடியும் வரை... அதாவது தம்முடைய 50ஆவது வயது வரை ஒரே பெண்ணுடன் தான் வாழ்ந்தார்கள்... அவளையே அளவில்லாமல் நேசித்தார்கள்... அவள் மூலமே அவர்களின் சந்ததி தழைத்தது...

"கதீஜாவின் அன்பு என் ரத்த நாளங்களில் கலந்திருக்கிறது..." என்று ஒரு முறை நபி(சல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்... கதீஜா (ரலி) அவர்களின் வாழ்நாள் முடியும் வரை மட்டுமல்ல... அவர் இறப்புக்குப் பின்னும் அவரை நபி(சல்) அவர்கள் நேசித்தார்கள்...

கதீஜா நாயகி இறந்து சுமார் 14 வருடங்கள் கழித்து மக்கா வெற்றியின் போது நபியவர்களின் கூடாரத்தை எங்கே அமைப்பது என்று சஹாபாக்கள் வினவிய போது...

"கதீஜாவின் மண்ணறை அருகில் அமையுங்கள்... என் கவலைகளில் அவர் பங்கு கொண்டதைப் போல என் மகிழ்விலும் பங்கு கொள்ளட்டும்..."

என்று சொன்னார்கள் என்றால் அவர்களின் காதல் எத்தகையதாக இருந்திருக்க வேண்டும்...?!

நபி(சல்) அவர்கள் கதீஜா நாயகத்தை பரிசுத்தமானவள் என்ற பொருள் தரும் தாஹிரா என்று அழைத்தார்கள். கதீஜா(ரலி) அவர்களோ நபிகளாரை உண்மையாளர் என்று பொருள் தரும் அல்-அமீன் என்று அழைத்தார்கள்... கணவன் மனைவியரிடையே செல்லப்பெயர் இட்டு அழைக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகும்...

அத்தனை பிரியம்

அத்தனை காதல்

அத்தனையுமே கதீஜா நாயகத்தின் தியாகத்தில் கனிந்தவை...

தம் திரண்ட சொத்துக்களை மனமுவந்து தன் கணவருக்கு தந்தாரென்றால்

அந்த காதலுக்கு இணை அந்த காதலே தான்...

சுபஹானல்லாஹ்...

#its_lovers_day


Suhaina Mazhar

No comments: