dr.. Vavar F Habibullah
கலைஞர்
தமிழர் சமூக புரட்சி நாயகர்
பற்றியே இன்று புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய கருத்தாக்கங்
களில் இவர் அதிகம் நாட்டம் கொண்டவர்.
தனி மனித வெற்றி ஒரு சமுதாய
வெற்றியாக மாற்றம் கொள்வது எப்படி ?
கலைஞர் சிறு வயது முதலே தமிழ் மொழியின் மீது தூய காதல் கொண்டவர். தமிழ்... இயல், இசை நாடகம் என முத்தமிழ் கலையிலும் வல்லவர்.அவர் முத்தமிழ் அறிஞர் என்பதை பிறர் அறியும் முன்பே தானறிந்தவர்.தன்னை பற்றிய திறமையை தெளிவாக அறிந்தவர்.
தனது தமிழ் ஆற்றலை எழுத்திலும் பேச்சிலும்
முறையாக கையாண்டு
அபார வெற்றிகளை குவித்தவர்.
தமிழை குழைத்து அவர் எழுதிய
வசனங்கள்,கருத்தோவியங்கள்
எல்லாம் தமிழக மக்களின் நெஞ்சங்
களில் அன்றும் இன்றும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தின.பராசக்தி வசனங்கள் போல் அவரைத் தவிர வேறு எவராலும் இனி எழுத முடியாது என்பதே உண்மை.
எழுத்துக் கலையை சினிமாவுக்கும்
பேச்சுக் கலையை அரசியலுக்கும்
திறமையாக கையாண்டு வெற்றிகளை
அசாதாரணமாக குவித்தவர்.
எழுதிய எழுத்துக்கள் எல்லாம்
பேசிய பேச்சுக்கள் எல்லாம்
உயிர் பெற்றாக வேண்டும் என்பது
அவரது உயிரோட்டமாக இருந்தது.
அதுவும் தமிழ்க் குலம் உயர பயன்பட
வேண்டும் என்ற வேகமே,அவர் ஆட்சி
அதிகாரத்தில் அமர ஒரு உந்து சக்தி
யாக திகழ்ந்தது.கலைஞர் இல்லை
என்றால் கல்லக்குடி டால்மியாபுரமாகவே இருந்திருக்கும்.
கண்ணொளி திட்டம்,குடிசை மாற்று
வாரியம்,பிச்சைக்காரர் மறு வாழ்வு
திட்டம்,சமத்துவ புரங்கள்,சமச்சீர்
கல்வி திட்டம், இட ஒதுக்கீடு போன்ற
புரட்சி கரமான சமூக,சமுதாய சீர்
திருத்த திட்டங்கள் எல்லாம் அரசியல்
சட்டங்கள் ஆகி இருக்க முடியாது.
கலைஞர் இல்லாமல் இவை எல்லாம்
தமிழகத்தில் சாத்தியம் இல்லை.
தமிழகத்தை ஆட்சி செய்தவர்களை
கணக்கிட்டால் கலைஞரின் சாதனை
அளப்பறியது.மேன்மக்களால் நிரம்பி
வழிந்த ஆட்சி அதிகார மையங்களை
சாமானியர்களுக்கும் அதிக அளவில்
பகிர்ந்து அளித்தவர் கலைஞர்.
சமூகத்தில் தங்கள் எழுத்துக்களால்
பேச்சாற்றலால் மக்கள் உள்ளங்களை
கவர்ந்த எழுத்தாளர்கள்,கவிஞர்கள்
கலைஞர்கள்,மேதைகள் என பலர்
உண்டு.ஆனால் தான் வரைந்த தமிழ்
சொல்லோவியங்களின் தத்துவ கருத்துக்களுக்கு செயல் வடிவம் கொடுக்க ஆட்சி அதிகாரத்தை தன் கைகளில் எடுத்தவர் கலைஞர். இது
சாதாரண அரசியல் வாதிகளால்
நிகழ்த்த இயலாத அரும் பெரும்
சாதனை.
பெரியார் சீரிய சமூக சீர்திருத்த
கருத்துக்களை பேசினார்,எழுதினார்
ஆனால் அவற்றை சட்டமாக இயற்ற
கலைஞரைத் தவிர வேறு எவராலும்
இயலவில்லை.அரசியலில் ஆட்சி
அதிகாரத்தில் அவர் இல்லாத
போதெல்லாம் சமூக நீதி சட்டங்கள்
உருக்குலைந்து போவதற்கும், நீரத்து
போவதற்கும இதுவே காரணமாகும்.
சாதாரண மனிதனின்
வாழ்க்கை பிரச்னைகளை சாதாரண
மனிதனாக வாழ்ந்து அநுபவித்த
அநுபவங்களே ஒரு தேர்ந்த
தலைமை நிர்வாகியாக அவரை
செதுக்கி இருக்கிறது.தமிழனை
உலக அரங்கில் தலை நிமிர
வைத்திருக்கிறது.
தமிழகத்துக்கு எண்ணற்ற
முதல்வர்கள் கிடைக்கலாம்,
ஆனால்....
எந்த முதல்வராலும் கலைஞர்
கருணாநிதி ஆக முடியாது.
கலைஞர் போல் ஒருவர் இனி
தமிழகத்தில் தோன்ற பல நூறு
ஆண்டுகள் ஆகலாம்.
dr.. Vavar F Habibullah
Starring Nadigar Thilagam Sivaji Ganesan, Pandaribai, Sahasaranam, SSR, Sriranjini Produced by: AVM Productions Directed by: Krishnan - Panju Music: R. Sudar...
WWW.YOUTUBE.COM
No comments:
Post a Comment