Friday, July 27, 2018

கணவன் எப்படி மனைவியின் பேச்சிற்கு கட்டுபடுகிறான்..!?


திருமணத்திற்கு முன்பு வரை அம்மா பேச்சை கேட்டு வளர்ந்தவர்கள் திருமணம் ஆனதும் பெண்டாட்டி பேச்சை கேட்டு நடப்பது ஏன்..!?

பெண்டாட்டி சொன்னதெற்கேல்லாம் தலையாட்டி விடக் கூடாது என்ற எண்ணத்தில் திருமணத்திற்கு முன்பு தீர்மானமாக இருக்கும் ஆண் மகன் திருமணம் முடிந்ததும் தன் பிடிவாதத்தைத் தளர்ந்தி விடுகிறான்.

இதற்கு காரணம் சில நேரங்களில் பெற்றவர்களிடம் கிடைக்காத அன்பு மற்றும் பல..


குறிப்பாக மனைவியின் கண்ணீர்.. சில சமயம் மனைவி அழுது கண்ணீர் சிந்தும் போது கணவன் மனம் இளகி விடுகிறான்..

படிப்படியாக இது போல் கண்ணீர் துளிகளை மனைவி உதிர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக ஆணாணவன் மனக்குள் பெண் நுழைந்து விடுகிறாள்..

நாளடைவில் மனைவியானவள் கணவனின் பலகீனத்தை புரிந்து கொண்டு கணவனை ஆட்டுவிக்க ஆரம்பித்து விடுகிறாள்..

அதனால் தான் சில இடங்களில் அம்மாக்கள் கூட "இதுவரை நம்ம பேச்சைக் கேட்டவன் இப்போது பொண்டாட்டி
பேச்சை மட்டும் தானே கேட்கிறான்.."என்று அங்கலாய்க்கிறார்கள்..

மகனும் தன் மனைவியை அட்ஜஸ்ட் செய்ய சொல்லி அம்மாவுக்கு அட்வைஸ் செய்கிறான்..

நாளடைவில் மனைவியின் கண்ணீருக்கு பயந்து தலையாட்டும் கணவர்கள் காலப்போக்கில் அவள் பேச்சை தட்ட முடியாமல் வேறு வழியில்லாமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டி வைக்கிறார்கள்..

இறுதியில் மனைவியின் கண் அசைவுக்கும் பயந்து சொல்ல வந்த வார்த்தைகளை மறந்து உதடுகளை இறுக்கமாக மூடிக் கொள்ளும் லெவலுக்கு வந்து விடுகிறான் கணவன்..

இதனால் காலப்போக்கில் என்ன நடக்கிறது என்பதை அடுத்த பதிவில் விளக்கமாக பார்ப்போம்..

[இது ஒரு உளவியல் ரீதியான பார்வை மட்டுமே]

Saif Saif

No comments: