Friday, July 27, 2018
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் ABU HASHIMA அபு ஆஷிமா
ABU HASHIMA
அன்று அவரது இயற்பெயர்
வாவர் எப் கரீமுல்லா
1980-களில் நாகர்கோவில் நகரில்
ஒரு பிரபல ‘பிஸினஸ் மேனாக’
இவர் திகழ்ந்தார்.
வாவர் பர்னிஷிங் ஹவுஸ்
வாவர் ஏஜன்ஸீஸ்
வாவர் விடியோஸ்
வாவர் மேன்பவர் & டிராவல்ஸ்
எல்லாம் இவரது நிறுவனங்கள் தான்
அந்த நாட்களில், தந்தை வாவர் ஹாஜியார் தலைமையில் மாவட்ட கலெக்டர் தான் இவரது பெரும்பாலான நிறுவனங்களை மிகவும் விமரிசையாக திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள்.
நவீன வீடுகள் கட்டும் திட்டத்தையும்
அந்நாட்களில் இவர் துவங்கினார்.
money making மட்டுமே அவரது
ஒரே குறிக்கோளாக இருந்தது.
ஒரு பத்து வருட
நீண்ட இடைவெளிக்கு பின்...
அப்போது நான் வெளி நாட்டில் இருந்தேன்.
தம்பி கரீமுல்லா எல்லா விதத்திலும் சுத்தமாக மாறி இருந்தார்.நடை, உடை,பாவனை எல்லாவற்றிலும் முழு மாற்றம்.
கேட்டால் ரஜனி படத்தில் வசனம்
பேசுவது போல் “எனக்கு இன்னொரு
பெயர் இருக்கு”என்று அவர்
சொன்ன போது நான் அவரை வியப்போடு பார்த்தேன்.புதிய பெயர் அவருக்கு முற்றிலும் பொருந்தி போனதை என்னால் அப்போது
நன்கு உணர முடிந்தது.
பேச்சாற்றல், எழுத்தாற்றல்
உரயாடலில் எல்லாம் அழகு தமிழ்
மணம் கமழ்ந்தது.அன்று...
பிஸினஸ் மேன்களோடு அலைந்த அவர்
பின்னால் இப்போது தமிழ் அறிஞர்களும், கவிஞர்களும்,சான்றோர்களும் அணிவகுத்து நின்றார்கள்.
தேர்ந்த எழுத்தாளர்,பேச்சாளர்
பத்திரிகை ஆசிரியர்,கவிஞர்
பதிப்பக உரிமையாளர் என விரிந்து
பரந்த அவரது பன்முக ஆற்றல்
கண்டு நான் வியந்ததுண்டு.அவரது
‘பெட்டகம்’ நூல் அவரை தமிழக
மக்களுக்கு நன்கு அறிமுகம் செய்து
வைத்தது.’அண்ணலே யா ரசூலுல்லா’
அவரது கவித்துவ எழுத்து நடைக்
கான அங்கீகாரகத்தை உலக
தமிழ் அரங்கில் வழங்கி சிறப்பு
செய்ததது.அவரது தனி படைப்பான
நமது முற்றம் அவருக்கு ஏராளமான
வாசகர்களை,ரசிகர்களை உலக
தமிழர்கள் மத்தியில் பெற்றுத் தர
உதவியது என்று சொல்லலாம்.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில்
எல்லாம் உள்ள தமிழ் மன்ற அமைப்பாளர்கள் பலர் இவரை அங்கு அழைத்து பேச வைத்து
கவுரவப் படுத்தி அனுப்பி வைத்ததை
எல்லாம் அங்குள்ள தமிழ் அன்பர்கள்
நான் அங்கு சென்று இருந்த நேரம்
சொல்லி பரவசப் பட்டார்கள்.
அறிவின் முதிர்ச்சி இப்போது
அவரை ஒரு முழு ஞானியாக மாற்றி
அமைத்து உள்ளது எனலாம்.அவரது
அறிவியல் ஆன்மீக கட்டுரைகளுக்கு
நான் என்றும் ஒரு நல்ல ரசிகன்.
அபு ஹாசிமா எனது உடன் பிறந்த
அன்பு தம்பி என்பதில் பெருமைப்
படுகிறேன்,பேருவகைக் கொள்கிறேன்.
படத்தில் தம்பி அபு ஆஷிமாவுடன்
இருப்பவர் எனது மகன் ஆஷிக்
Vavar F Habibullah
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment