Friday, December 22, 2017

ஊரோடு இணைந்து போகும் போது விரும்பதகாத நிகழ்வுகளுக்கு வழியில்லாமல் போய் விடும்

Saif Saif
"அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்;உங்கள் மதிப்பும்,வலிமையும் அழிந்து போய்விடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடை
யவர்களுடன் இருக்கின்றான்."(8:46)
இறைவன் சொன்ன ஒற்றுமை என்பதின் கருப்பொருளை விளங்கிக் கொண்டால் ஊரிலும் சரி,நாட்டிலும் சரி,வீட்டிலும் சரி வேற்றுமை கொண்டாட வாய்ப்பேயில்லை..

கருத்துவேறுபாடு நம்மை வலுவிழக்க வைக்கும்.ஒற்றுமையை சிதைக்கும்..
இதற்கு நேர்மையான நிர்வாகம் தேவைப்படுகிறது..
சில நேரங்களில் எடுக்கப்படும் முடிவுகளால் பிறருக்கு எந்த பாதிப்பும்,துன்பமும் ஏற்பட்டு விடக்கூடாது..
ஒருவரின் மரணத்திற்கும் சரி,திருமணம் போன்ற நல்ல விஷயங்களுக்கும் சரி ஊர் நிர்வாகம் தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு மனிதாபிமானத்தோடு நடந்துக் கொள்வது நலம் பயக்கும்..
ஏற்கனவே பல பிரச்சினை களால் பிளவுபட்ட சமுதாயங்கள் சிற்சில அபிப்பிராயங்களாலோ,
கருத்து வேறுபாடுகளாலோ மேலும் பிளவுபட்டு விடக் கூடாது..நம்முடைய தீர்மானங்கள் நம்மால் நமக்குள்ளாகவே தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர கோர்ட்டுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது..
நம் பிற சகோதரனை நண்பனாக பார்க்காவிட்டாலும் பரவாயில்லை..விரோதி
களாகப் பார்க்கும் நிலை வந்து விடக் கூடாது..
பள்ளிகளும்,மையவாடிகளும் புதிது புதிதாக உருவாகி ஊரின் மகத்துவத்தை பறைசாட்டுவதை
விட எல்லாமே எல்லோருக்குமானது என்று மனம் ஒப்பும் நிலை வரவேண்டும்..
நபி(ஸல்) காலத்தில் கஅப்பின் மாலிக்(ரலி) என்ற ஸஹாபி
தபூக் போருக்கு போகாமல் ஏய்ப்பு செய்த போது அவரோடு சேர்த்து மூன்று பேருக்கு ஊர் மக்கள் அவருடன் பேசக் கூடாது என்று தான் தடை விதித்தார்களே தவிர அவர் பள்ளிக்குள் வரவோ,தொழவோ தடை விதிக்கவில்லை.. .
நம் சகோதரர்களையே பள்ளிக்குள் வராமல் தடுப்பது,
இறந்தவர்களுக்கு அடக்க இடம் கொடுக்காமல் தடுப்பது,திருமணத்திற்கு ஊர் ரிஜிஸ்டர் வழங்காமல் இருப்பது,வெளியூர் காரர் என்று பிரித்துப் பார்ப்பது போன்ற பல நிகழ்வுகள் பிரிவினைகளை மேலும் மேலும் அதிகப்படுத்தும் என்பதையும் மறந்து விடக் கூடாது..
நபி(ஸல்) அவர்களை வரவேற்று அரவணைத்து,
உபசரித்து அன்பு காட்டி அவர்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்த ஊர் அவர்கள் பிறந்த மக்கா அல்ல..அவர்கள் வாழ்ந்த மதீனா என்பதை நாம் மறந்து விடக்கூடாது..
அண்ணலின் முன்மாதிரியையும்
மறந்து விடக்கூடாது..
"நம்பிக்கை கொண்டவர்களே ! அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படியுங்கள்..அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படியுங்கள்.மேலும் ,
உங்களில் அதிகாரம் உடையவருக்கும் (கீழ்ப் படியுங்கள்)" (4 :59)
என்ற இறை வாக்கிற்கொப்ப ஊர் எடுக்கும் எல்லா நல்ல முடிவுகளுக்கு கருத்துவேறுபாடு கொள்ளாமல் ஏற்று ஊரோடு இணைந்து போகும் போது விரும்பதகாத நிகழ்வுகளுக்கு வழியில்லாமல் போய் விடும் என்பதை அறிவார்ந்தவர்கள் அன்பானவர்கள் புரிந்துக் கொண்டு அதை ஏற்றுக் கொள்ளும் அணுகுமுறையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஊரை நேசிப்பவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாகும்..இதுவே இப்போது அவசியமான ஒன்றாகும் என்றுச் சொன்னால் அதில் தவறிருப்பதாக தெரியவில்லை..


Saif Saif

No comments: