Tuesday, December 5, 2017

பகலும் இரவும் பின்னே ஞானும் ....! (பாகம் 1)


பகலின் பவித்திரங்கள்
இரவின் அந்தரங்கங்கள்
வாழ்வின் அங்கங்கள்.
*
பகலில் தூக்கி சுமந்த பழுக்களை இறக்கி வைத்ததும் இரவின் இலகுவாக ஆரத்தழுவியது தூக்கம்.
*
பகலில் பட்டபாடு படுத்தியத்தின் விளைவு இரவின் மடியில்  படுத்ததும் களைப்பு அகலுகிறது அமைதியாக.
*
பகலின் பாராத்தியங்கள் பாதியில் தொக்கிநிற்க இரவிலும்  ஊழ்வினைப்போல வந்து உறுத்தும்.
*

பகலில் ஒளிர்ந்த பவித்திரங்கள் பம்மியதும் இரவின் இனிமையான இருளில் பவிசுகள் பவனி வருகின்றன.
*
பகலில் மழை பொழிந்து பூமி  குளிர்ந்தாலும் இரவின் இனிய குளுமையே மெய்மயக்கும் கனிவானது.
*
பகலின் வெம்மையில் வெந்துவிட்ட உலகு
இரவின் குளிரில் பதனிடப் படுகிறது.

*
பகலெல்லாம் சுமந்திருந்த அழுத்தும் சுமைகளை இரவின் இளைப்பாறும் படுக்கையில் சாயுமுன் போர்வையோடு  சேர்த்தே உதறி களைந்திட வேண்டும்.
*
பொலபொலவென விடியலில் ஆரம்பித்த ஆரவாரம் இரவின் மையிருட்டின் அமைதியில்  கரைந்துபோனது.
*
பகலில் பணியின் பரபரப்பு
இரவின் பனியில்  பணிந்து போனது.


ராஜா வாவுபிள்ளை

No comments: