Vavar F Habibullah
(dr habibullah )
தமிழ் ராஜ்யம்நம் நாட்டில்...
அதுவும் தமிழ் நாட்டில் மக்கள் ஓட்டு போட்டு எம்.எல்.ஏ - வை தேர்வு செய்வார்கள். எம்.எல்.ஏக்கள் ஓட்டு போட்டு தங்கள் சட்ட மன்ற கட்சித்தலைவரை தேர்வு செய்வார்கள்.
மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களை கொண்ட கட்சி ஆளும் கட்சி அந்தஸ்து பெறும். அதன்
தலைவர் கவர்னரால் முதல்வராக பதவியில் அமர்த்தப்படுவார்.
அரசியலமைப்பு சட்டப்படி...
25 வயது நிரம்பிய இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் முதல்வராகலாம். அந்த நபர் எம்எல்ஏ வாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.படிப்பு தகுதிகள் எதுவும் தேவை இல்லை. ஒரு விஷயம் தான் இதில் மிகவும் முக்கியம். அதாவது அந்த நபர் ஆளும் கட்சி உறுப்பினர்களால் ஒருமனதாக கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டால் மட்டும் போதும். மிகவும் எளிதாக முதல்வர் ஆகி விடலாம்.
இப்போது சசிகலாவை அவரது கட்சி எம்எல்ஏ க்கள், தலைவராக தேர்வு செய்து விட்டனர்.
முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் பதவி யை ராஜினாமா செய்து விட்டார்.இந்த நிலை யில் சசிகலாவை முதல்வராக நியமனம்
செய்து வைப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை.இது தான் ஜனநாயகம் நமக்கு சொல்லித் தரும் பாடம்.
கட்சியில் யார் தலைவர் என்பது கட்சி சம்பந் தமான உள் விவகாரம் என்பதால் பொது மக்களுக்கு அதில் அக்கறை இல்லை.ஆனால் ஆட்சி, அதிகாரம், முதல்வர் என்று வரும்போது ஜனநாயகத்தில் பொதுமக்களின் கருத்து இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால்....
தங்களின் முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை மட்டும் மக்களிடம் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களிடம் அந்த உரிமை இப்போது இருக்கிறது. ஆனால் சாதாரண பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு எந்த எம்எல்ஏ வும் முடிவு எடுப்பதில்லை.தங்கள் சுயநலத்திற்காக கட்சித் தலைமைக்கு அடி பணிந்து, விசுவாசத்துடன் இவர்கள் ஆற்றும் செயல் மக்கள் உரிமைகளை பறிப்பதாக இருந்தாலும் மக்களால் இவர்களை எதுவும் செய் து விட இயலாது.
ஒரு முறை மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்த எம்எலஏ வை ஐந்து வருடங்களுக்கு அந்த மக்களால் கூட அசைத் து விட முடியாது. தங்களது உரிமைகளுக்கு எதிராக, எண்ணங்களுக்கு மாற்றமாக செயல்படும் இவர்களை திரும்பப் பெறும் உரிமை கூட ஜனநாயக நாட்டில் மறுக்கப்படுவது நாம் காணும் நிதர்சனமான உண்மை.
தேர்ந்தெடுத்த எம்எல்ஏக்களை, திரும்பப் பெறும் உரிமை நமது அரசியல் சட்டத்தில் இல்லை.
பெரும்பான்மையான மக்கள் விரும்பாத ஒரு வரை, மக்கள் மன்றத்தில் தோன்றி தன்னை தலைவராக இதுவரை அறிமுகம் செய்து கொள்ளாத ஒருவரை, தமிழ் மக்களின் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத ஒருவரை அரசியல் மேடைகளில் மக்கள் இதுவரை பார்த்திராத ஒருபுது முகத்தை, ஒரு பிரபல அரசியல் தலைவரின் நிழலாக இருந்தார் என்பதற்காக மட்டிலுமே தமிழக முதல்வராக தேர்வு செய்வது என்பதைக் கூட....
ஐனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தால் கூட தட்டிக் கேட்க முடியாது என்பது தான் சட்டம் போதிக்கும் உண்மை.
ஜெயலலிதா உண்மையில் மக்கள் முதல்வர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சசிகலா மக்கள் முதல்வரா!
எலக்சன் கமிசன் நினைத்தால் ஏழரை கோடி தமிழ்மக்களின் இன்றைய உணர்வுகளை புரிந்து கொள்ள இந்த அசாதாரண சூழ் நிலையை கருத்தில் கொண்டு ஒரு கருத்து கணிப்பை நிகழ்த்தி முடிவுகளை அறிவிக்கலாம்.இதற்கு நீதிமன்றங்களும் உதவலாம்.
இல்லை என்றால்....
வர இருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் முடிவால் மட்டுமே சில அதிரடி மாற்றங்களை நிகழ்த்த இயலும். மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கும் வரை சசிகலாவால் இல்லா விட்டாலும் அவரின் பின்னால் ஒழிந்து இருப்பவர்களால் கூட முதல்வராக முடியும் என்பது தான் அரசியல் விமர்சகர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.
No comments:
Post a Comment