பிறந்திடும் போது
அவள் மென்மையானவள்
தவழும் போது
அவள் மென்மையானவள்
நடை பழகிடும் போது
அவள் மென்மையானவள்
பேசி நடந்திடும் போது
அவள் மென்மையானவள்
பருவம் அடைந்த போது
அவள் மென்மையானவள்
பருவத்திற்கே உரித்தான
நாணம் கொண்டிடும் போது
அவள் மென்மையானவள்
அன்பை கொடுத்திடும் போது
அவள் மென்மையானவள்
அவன் நிஜமெனும் போது
அவள் மென்மையானவள்
அவள் மென்மையானவள்
அவள் மென்மையானவள்
பிறப்புறுப்பை கிழித்தெறியும் போது
மேலும்
கிழித்தெறியப்படலாம்
அறுத்து துண்டாக்கப்படலாம்
கருவறுக்கப்படலாம்
துடைத்தெறியும் நாள் வரை
அந்நாள் எந்நாள்
எந்நாள் அந்த பொன்னாள்....
#நந்தினி
என்றும் கவியுடன்
முஹம்மது முஸம்மில்.
No comments:
Post a Comment