உயிரணுக்களை தசைகளாக்க
கருக்களின் பயணங்கள் ...
வாழ்க்கை களமதில்
உழைத்து உயர்ந்திட
மனிதர்களின் பயணங்கள் ...
சுவாசப் பைகளில்
மூச்சை நிறைத்திட
காற்றின் பயணங்கள் ...
பூமிதனை வெப்பமூட்ட
ஒளியினை சிந்திடும்
ஆதவனின் பயணங்கள் ...
இரவெனும் கப்பலில்
வானத்து அரசியாம்
நிலாவின் பயணங்கள் ...
மண்ணை ஈரமூட்ட
விண்ணை விட்டிறங்கும்
மழையின் பயணங்கள் ...
கடல் மங்கையின்
மடிதனில் உருளும்
அலைகளின் பயணங்கள் ...
காற்றின் சுழற்சியினை
சிறகடித்து முத்தமிடும்
பறவைகளின் பயணங்கள் ...
தாவரங்கள் தழைத்திட
நிலத்தினடியில் ஊடுருவும்
வேர்களின் பயணங்கள் ...
மலர்கள் சேமித்திடும்
சுவையூட்டும் தேனருந்த
வண்டுகளின் பயணங்கள் ...
முகநூலில் பதிவுகளிட
கருக்களை தேடிடும்
சிந்தனைகளின் பயணங்கள் ...
ஏழைகள் நலமுற
சேவைகளை பெருக்கும்
அமைப்புகளின் பயணங்கள் ...
வாழும் மனிதர்களை
சூழும் மரணங்களால்
மறுமைக்கு பயணங்கள் ....
அப்துல் கபூர்
No comments:
Post a Comment